கோமாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோமாளி (Comali மொ.பெ. Clown கோமாளி ) 2019 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். வேல்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் இதனைத் தயாரித்தது. பிரதீப் ரங்கராஜன் எனும் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். யோகி பாபு துணைக் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.நாதன் என்பவர் ஒளிப்பதிவு செய்தார். பிரதீப் ஈ. ராகவ் பதிப்பாளர் பணியினையும் மேற்கொண்டனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 15, 2019 இல் திரையரங்குகளில் வெளியானது.[1]கிப்கொப் தமிழா இந்தத் திரைப்படத்திற்கு இசையமத்தார்.இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஆட்டோ ஓட்டுநராக ஓரு காட்சியில் தோன்றியிருப்பார்.

கதைச் சுருக்கம்[தொகு]

தனது வாழ்க்கையில் 16 ஆண்டுகள் ஆழ்மயக்க நிலையில் இருக்கும் ஒருவர் மீண்டு வரும் போது தற்காலத்திற்கு தகுந்தாற்போல் எவ்வாறு செயல்படுகிறார் என்பதும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள் எவ்வாறு தங்களது உறவுகளை விட்டு விலகி இருக்கிறார்கள் என்பதனையும் மையக் கருத்தாக கொண்டுள்ளது.

நடிகர்கள்[தொகு]

  • ஜெயம் ரவி (ரவி என்).
  • ரீதிகா மோகன் ( காஜல் அகர்வால்)
  • கே. எஸ். ரவிக்குமார் )எம். எல். ஏ., க்கள் தர்மாராஜ்
  • யோகி பாபு (மணி)
  • டாக்டர் கிருஷ்ணமூர்த்தியாக ஷா ரா
  • திவ்யாவாக ஆர்ஜே ஆனந்தி
  • உரிமையாளராக கவிதா ராதேஷ்யம்
  • ரவிக்குமாரின் தந்தையாக ஆடுகளம் நரேன்
  • ரவியின் தாயாக பிரவீணா
  • தர்மாராஜின் மனைவியாக (வினோதினி வைத்தியநாதன்)
  • நாகராஜக ( வருண் தவான்)
  • ஆட்டோ ஓட்டுநராக ஜோசப் என்கிற பிரதீப் ரங்கநாதன் (சிறப்புத் தோற்றம்)

தயாரிப்பு[தொகு]

ஜெயம் ரவி இந்தத் திரைப்படத்திற்காக 20 கிலோ எடை குறைந்தார். படத்தின் பெரும்பானமையான காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட்டன. மேலும் பள்ளி போன்று அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன.கன்னட நடிகையான கவிதா ராதேஷ்யம் என்பவர் இதில் நடித்திருந்தார்.[2] கிப் கொப்தமிழா இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தார். நாதன் ஒளிப்பதிவாளராகவும் மற்றும் பிரதீப் ஈ. ராகவ் பதிப்பசிரியராகவும் ஒப்பந்தம் ஆகினர்.

தனி ஒருவன் திரைப்படத்தினைத் தொடர்ந்து கிப்கொப் தமிழா இரண்டாவது முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்தார். இந்தத் திரைபபடத்திற்கான பாடல்களை கபிலன் வைரமுத்து, பிரதீப் ரங்கநாதன், கானா ரவி மற்றும் மொபின் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளானர். ராகுல் நம்பியாருடன் ஜெயம் ரவி ஒரு பாடல் பாடியுள்ளார்.

விளம்பரம்[தொகு]

3 ஆகஸ்ட் 2019 இல் இந்தத் திரைபப்டத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் சோனி மியூசிக்கால் வெளியிடப்பட்டது.[3]

வெளியீடு[தொகு]

ஆகஸ்ட் 15, 2019 இந்திய சுதந்திர தினத்தன்று இந்தத் திரைப்படம் வெளியானது.

வசூல்[தொகு]

விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் வணிக ரீதியிலும் வெற்றி பெற்றது. கோமாளி திரைப்படம் சர்வதேச அளவில் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது..[4]

மீளுருவாக்கம்[தொகு]

போனி கபூர் இந்தப் படத்தின் இந்தி மீளுருவாக்கத்தில் அர்ஜூன் கபூர் நடிப்பார் எனத் தெரிவித்தார். மெலு இந்தப் படத்திற்கான இந்தி உரிமையினை தனது நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமாளி&oldid=3709467" இருந்து மீள்விக்கப்பட்டது