பெய்ரூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெய்ரூட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெய்ரூத்
بيروت‎
Beyrouth (பிரெஞ்சு)
வலச்சுற்றாக இடதுபுற மேலிருந்து: பெய்ரூத் மையநகரிலுள்ள மசூதி, பெய்ரூத் சௌக்குகள், மனாரா அருகிலுள்ள மீயுயர் கட்டிடங்கள், பிளாசு டெ லெடாய்லெ, மையநகர கஃபேக்கள், சைய்ஃபீ சிற்றூர்
வலச்சுற்றாக இடதுபுற மேலிருந்து: பெய்ரூத் மையநகரிலுள்ள மசூதி, பெய்ரூத் சௌக்குகள், மனாரா அருகிலுள்ள மீயுயர் கட்டிடங்கள், பிளாசு டெ லெடாய்லெ, மையநகர கஃபேக்கள், சைய்ஃபீ சிற்றூர்
லெபனான் நாட்டில் அமைவிடம்
லெபனான் நாட்டில் அமைவிடம்
நாடுலெபனான்
ஆளுனர் ஆட்சிபெய்ரூட் ஆளுனர் ஆட்சி
அரசு
 • மாநகரத் தலைவர்அப்தல் மூனிம் அரீஸ்[1]
பரப்பளவு
 • நகரம்100 km2 (31 sq mi)
மக்கள்தொகை (2007)
 • நகரம்12,50,000
 • அடர்த்தி12,500/km2 (32,000/sq mi)
 • பெருநகர்15,00,000
நேர வலயம்+2
 • கோடை (பசேநே)+3 (ஒசநே)
இணையதளம்பெய்ரூத் நகரம்

பெய்ரூத் (அரபு மொழி: بيروت , விவிலிய எபிரேயம்: בְּאֵרוֹת Be'erot; எபிரேயம்: ביירות Beirut; இலத்தீன்: Berytus; பிரெஞ்சு மொழி: Beyrouth) லெபனான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007ஆம் கணக்கெடுப்பின்படி பெரும் பெய்ரூத்தில் 1 மில்லியனுக்கு கூடுதலான 2 மில்லியனுக்குக் குறைவான மக்கள்தொகை என மதிப்பிடப்படுகின்றது. லெபனானின் நடுநிலக் கடலோரத்தின் மையப்பகுதியில் மூவலந்தீவொன்றில் அமைந்துள்ள பெய்ரூத் நாட்டின் பெரிய, முதன்மையானத் துறைமுகமாகவும் விளங்குகின்றது.

இப்பெருநகர் குறித்த முதல் குறிப்பு கி.மு 15ஆம் நூற்றாண்டு பண்டைய எகிப்தின் அமர்னா கடிதங்களில் காணப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து தொடர்ச்சியாக இங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர். பெய்ரூத் ஆறு நகரின் கிழக்கில் தெற்கிலிருந்து வடக்காக ஓடுகின்றது.

பெய்ரூத் லெபனான் அரசு இயங்கும் தலைநகரமாகும்; இது லெபனானின் பொருளியலில் முதன்மை பங்காற்றி வருகின்றது. பல வங்கிகளும் நிறுவனங்களும் பெய்ரூத்தின் மைய மாவட்டம், அம்ரா தெரு, வெர்துன் சாலை,அஷ்ராஃபெ பகுதிகளில் தங்கள் தலைமையகங்களை கொண்டிருக்கின்றன. லெபனானின் உள்நாட்டுப் போர் காரணமாக சிதைவுற்றாலும் பெய்ரூத்தின் பண்பாட்டு கூறுகள் பெரும் மீட்பையும் மாற்றங்களையும் எதிர்கொண்டுள்ளன.[2][3][4] கணக்கியல்,விளம்பரத்துறை, வங்கி/நிதி, சட்டத்துறைகளில் தனக்கென தனி அடையாளத்தை அடைந்துள்ள பெய்ரூத்தை உலகமயமாக்கம் மற்றும் உலக நகரங்கள் ஆய்வுப் பிணையம் பீட்டா வேர்ல்டு சிடி என்ற விருதை வழங்கியுள்ளது.[5]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெய்ரூத்&oldid=3564823" இருந்து மீள்விக்கப்பட்டது