பயனர் பேச்சு:Magentic Manifestations

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Magentic Manifestations, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:27, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரை[தொகு]

வணக்கம், பத்தம்பாளையம் ஒரு பேரூராட்சி போன்ற ஒரே ஒரு வசனத்துடனும், வார்ப்புருவுடனும் எழுதப்படும் கட்டுரைகள் நீக்கப்படும். கட்டுரைகள் குறைந்தது மூன்று பொருள் பொதிந்த வரிகளாக இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:45, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]

இல்லை, ஒரு வரிக் கட்டுரை stub ஆகாது.--Kanags \உரையாடுக 11:59, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]

தாலுகா[தொகு]

தாலுகா என்பதற்கு பதில் வட்டம் என்பதை பயன்படுத்துங்கள். தாலுகா, ஜில்லா (மாவட்டம்) என்பவை பாரசீகம் என நினைக்கிறேன். பஞ்சாயத்து ( Panchayat Unions)என்பது ஊராட்சி ஒன்றியம், Panchayat என்பது ஊராட்சி ஆகும்.--குறும்பன் (பேச்சு) 23:12, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]

இன்டிகோ[தொகு]

ஏற்கனவே உள்ள கட்டுரையை அழித்து விட்டு புதிய கட்டுரைக்கு வழிமாற்றுக் கொடுக்க முடியாது. இரண்டு கட்டுரைகளும் முறைப்படி வரலாறுகளுடன் இணைக்கப்ப வேண்டும். இணைப்பு வார்ப்புருவை சேர்த்து விட்டால் நிருவாகி ஒருவர் இரண்டு கட்டுரைகளையும் இணைத்து விடுவார்..--Kanags \உரையாடுக 12:34, 7 சூன் 2015 (UTC)[பதிலளி]

உங்கள் கவனத்திற்கு[தொகு]

ஏற்கனவே உள்ள சில கட்டுரைகளுக்கு மீண்டும் புதிதாகக் கட்டுரைகளைத் தொடங்கியிருக்கிறீர்கள். (சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம், பாரியூர் கொண்டத்துக்காளையம்மன் கோயில்) ஆங்கில விக்கிக் கட்டுரையின் இடப்புறமுள்ள ’மற்றைய மொழிகளில்’ -இதன் கீழ் ’தமிழ்’ உள்ளதா எனப் பார்த்து விட்டு இல்லையெனில் புதிதாகத் தொடங்குங்கள். ஏற்கனவே இருப்பின் அதனையே நீங்கள் மேம்படுத்தலாம். இனிவரும் காலத்தில் இதனைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:18, 7 சூன் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களின் விக்கியார்வம் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- Μ₳Ά₮Ή₳\/Ά₦  ( பேச்சு  ) 12:32, 9 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 01:15, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி!Magentic Manifestations (பேச்சு) 05:47, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

மீண்டும் வருக[தொகு]

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பங்களிக்க தொடங்கியிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.பிரயாணி (பேச்சு) 12:52, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

நன்றி! பல வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் பங்களிக்க தொடங்கியுள்ளேன். Magentic Manifestations (பேச்சு) 12:58, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், Magentic Manifestations!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 13:19, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

February 2024[தொகு]

தகவற் படவுரு வணக்கம், காற்று இசைக்கருவி என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 05:30, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், நான் பல முறை பல்வேறு வடிவங்களில் தேடிவிட்டு கட்டுரையை இல்லாத பக்கங்களுக்கு வடிவமைக்க முயலும் பொது ஏற்கனவே அந்த பக்கம் வேறொரு பெயரில் உள்ளது. இதில் பிரச்னை என்னவென்றால், அந்த வேறொரு பெயரில் உள்ள பக்கம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளில் இணைக்கப்படவில்லை. எனவே, நான் அவ்வாறு கட்டுரைகளில் இணைக்க முயற்சி செய்கிறேன். மேலும் இவ்வாறு ஏற்கனவே கட்டுரை இருந்தால் தயவு செய்து முழுவதுமாக நீக்குவதற்க்கு பதிலாக புதுவாக உருவாக்கப்பட்ட பக்கத்தை அந்த பழைய பக்கத்துக்கு மாற்றம் செய்யுங்கள் (redirect). நன்றி!
Magentic Manifestations (பேச்சு) 05:47, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
கட்டுரை வேறு பெயரில் இருக்கலாம். அல்லது ஆங்கில விக்கியில் குறித்த கட்டுரையைத் தேடி அங்கு த.வி கட்டுரை உள்ளதா என்பதை அறிந்து பங்களிக்கலாம். வழிமாற்றம் தக்க காரணங்களுக்காகவே உருவாக்கப்படும். கட்டுரை நீக்கம் ஏற்புடையதாயிருந்தால் நீக்கப்படும். கட்டுரை உருவாக்குவதில் சிக்கல் இருந்தால் தயவுசெய்து மணல் தொட்டியில் மேற்கொள்ளவும். AntanO (பேச்சு) 05:54, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
நான் என்ன கூறுகிறேன் என்றால், நான் உருவாக்கிய பெயரில் தான் மற்ற சம்பந்தப்பட்ட கட்டுரைகளில் லிங்க் செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் நான் அந்த பெயரில் உருவாக்கவே விழைந்தேன். வேறொரு பெயரில் இந்த கட்டுரை இருந்தால் அதை சரியாக லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே இந்த பெயரில் பல கட்டுரைகளில் லிங்க் செய்யப்பட்டிருப்பதால், வழிமாற்றம் செய்தால் மற்ற கட்டுரைகளில் சரியாக இணைக்க பட்டிருக்கும். நான் இனிமேல் ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் சொல்லியது போல் சரி பார்த்து விட்டு பக்கத்தை உருவாக்குகிறேன் நன்றி!
Magentic Manifestations (பேச்சு) 06:02, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
இது தொடர்பில் வேறு பயனர்களும் முன்னர் அறிவிப்புச் செய்துள்ளனர். எனவே நீங்கள்தான் கவனமாக செயற்பட வேண்டும்.

உலக பாரம்பரிய மாநாடு என்ற கட்டுரை சரியான மொழிபெயர்ப்புடன் இல்லை. ஆகவே, சற்று கூடுதல் கவனமெடுத்து மொழியாக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 12:39, 16 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

மீண்டும் ஒரு முறை சரி பார்த்து திருத்தங்கள் இருந்தால் சரி செய்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 13:43, 16 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]






























நீங்கள் மணல் தொட்டியில் பயிற்சி செய்வது சிறப்பு. AntanO (பேச்சு) 06:08, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 08:42, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கொஞ்சம் தெளிவாக கூறவும். எது தேவை அற்ற தொகுப்பு என கூறுகிறீர்கள். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 08:43, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
திராவிட கட்டிடக்கலை என்ற பெயரில் ஏன் கட்டுரையை உருவாக்கினீர்கள்? AntanO (பேச்சு) 08:45, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
திராவிடக் கட்டடக்கலை சம்பந்தமாக எந்த ஒரு கட்டுரையும் இல்லையே இங்கு. ஏற்கனவே இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும். நன்றி. Magentic Manifestations (பேச்சு) 08:47, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
திராவிடக் கட்டடக்கலை AntanO (பேச்சு) 08:48, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
என் தவறு தான், இந்த கட்டுரையை நான் தேடி பார்த்த பொது புலப்படட வில்லை. ஒரு சிறிய வேண்டுகோள், இந்த ஏற்கனவே இருக்கும் கட்டுரையில் எந்த ஒரு மேற்கோள்களும் இல்லை மற்றும் திராவிட கட்டிடக்கலையின் அம்சங்கள் பற்றியோ அல்லது வேறுபாடுகள் பற்றியோ எந்த ஒரு தகவலும் இல்லை. நான் எழுதி இருந்த பக்கத்தில் அவை அனைத்தும் இருந்தன. நீங்கள் அந்த தகவலை இதோடு சேர்த்து இருக்கலாம் இல்லையா? அது அந்த பக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கும். Magentic Manifestations (பேச்சு) 08:52, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
ஒரு கட்டுரை இருக்கும்போது இன்னொரு கட்டுரை உருவாக்குவது ஏற்புடையதல்ல. 2015 முதல் உங்களுக்கு இவ்வறிப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே தவறை செய்ய வேண்டாம். நன்றி. AntanO (பேச்சு) 08:55, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
உங்கள் கூற்றை நான் ஒப்பு கொள்கிறேன். ஆனால் நான் கேட்ட வேண்டுகோளுக்கு இதில் பதில் இல்லையே. நீங்கள் தான் ஒரு புது தகவலும் இல்லை என அழிக்கும் பொது அதில் அறிவித்திருக்கிறீர்கள். விக்கிபீடியா வின் நோக்கமே தகவல் பரிமாற்றம் தான். இன்னொரு பக்கம் புதுவாக ஆரம்பிக்க பட்டது தவறு தான், அதை நான் ஒப்பு கொண்டுவிட்டேன். மன்னிக்கவும். ஆனால் அதில்கூர்ந்த தகவல்கள் சரியான மேற்கோள்கள் உடன் இருந்தன. அதை பயன்படுத்தி இருக்கலாம் என்பதே என்னுடைய வாதம். மீண்டும் என் வேண்டுகோள் என்ன வென்றால், நீங்கள் அட்மின் ஆக இருப்பதால், அந்த அழிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள தகவல்களை ஏற்கனவே இருக்கும் பக்கத்தில் சேர்க்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி!! Magentic Manifestations (பேச்சு) 09:03, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@AntanO இன்னொரு வேண்டுகோள்! எவ்வாறு ஏற்கனவே ஒரு பெயரில் பக்கம் இருக்கிறது என்ன கண்டுபிடிக்க? Search, செய்வதை தவிர வேறு ஏதேனும் வழிமுறை உள்ளதா? Magentic Manifestations (பேச்சு) 09:09, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
பகுப்பு:கட்டிடக்கலை என பகுப்பிலும் சென்று பார்க்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:12, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். தாங்கள் திராவிடக் கட்டடக்கலை கட்டுரை மேம்படுத்தலாம். --தாமோதரன் (பேச்சு) 09:14, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
நீங்கள் ஆங்கில விக்கியில் மொழிபெயர்த்து (en:Dravidian architecture) இங்கு எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். ஆங்குள்ள கட்டுரையில் பிற மொழிகளுக்கான இணைப்புள்ளது. இதில் தமிழ் விக்கிக்கட்டுரையின் இணைப்பும் உள்ளது. AntanO (பேச்சு) 09:22, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
திராவிடக் கட்டடக்கலை எனும் கட்டுரை ஒரு மேற்கோளுடன் கிட்டத்தட்ட நீங்கள் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. "ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள்" என்பதில் சுமார் 470 கட்டுரைகள் உள்ளன. இதுபோன்ற நிர்வாக பணி நிலுவைகள் பல ஆயிரமாகவுள்ளன. ஆகவே இலகுவான நடைமுறையினை மேற்கொள்வது நல்லது. AntanO (பேச்சு) 09:19, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
அனைவரின் உதவிக்கும் நன்றி. நான் ஆங்கில கட்டுரைகளில் சென்று பிற மொழி இணைப்பு இருக்கிறதா மற்றும் அந்த பகுப்பிலும் இருக்கிறதா என பார்த்து எழுதுகிறேன். மிக்க நன்றி! Magentic Manifestations (பேச்சு) 09:27, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@AntanO நான் மீண்டும் ஒரு தவறு செய்துளான். இப்போது தான் ஏற்கனவே இருந்த கட்டுரையை பார்தேன். இனிமேல் கவனமாக இங்கு கூறிய படி ஆங்கில கட்டுரையில் இருந்து லிங்க்-இ பார்த்து சரியாக செய்கிறேன். நன்றி! மன்னிக்கவும் Magentic Manifestations (பேச்சு) 09:28, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை. இங்கு நாம் எல்லோரும் நல்ல ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கவே முயல்கிறோம். AntanO (பேச்சு) 09:31, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

மொழிமுதல் எழுத்து[தொகு]

மொழிமுதல் எழுத்துக்கள் - மொழிமுதல் எழுத்தாக மெய்யெழுத்துக்களும் ஆயுத எழுத்து வருவாது தவிர்க்கப்படல் வேண்டும். AntanO (பேச்சு) 18:17, 17 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கவனத்தில் கொள்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 04:00, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

ஏற்கெனவே உள்ளவற்றை நீக்க வேண்டாம்[தொகு]

கட்டுரையை மேம்படுத்தும்போது ஏற்கெனவே உள்ளவற்றை நீக்க வேண்டாம். நரகம் கட்டுரையில் பகுப்புக்களும் நீக்கப்பட்டுள்ளது. ~AntanO4task (பேச்சு) 13:18, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கவனத்தில் கொள்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 03:46, 20 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு[தொகு]

நீங்கள் உருவாக்கிய சில கட்டுரைகள் பிற மொழி விக்கித்தரவில் இணைக்கப்படாமல் இருக்கிறது. கவனித்து விக்கித்தரவில் இணையுங்கள். தானியங்கித் தமிழாக்கமும் வருகிறது. கவனியுங்கள். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 10:49, 21 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

நான் எல்லா கட்டுரைகளையும் தரவில் இணைத்திருக்கிறேன். ஏதேனும் விடுபட்டிருந்தால் தயவு செய்து அதை சுட்டி கட்டவும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 10:56, 21 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

இயந்திர மொழிபெயர்ப்பைத் தவிர்க்கலாமா?[தொகு]

வணக்கம், தங்களது அண்மைய கட்டுரைகள் பெரும்பாலும் இயல்பானதாக இல்லாமால் இயந்திரமொழிபெயர்ப்பால் ஒரு சிதைந்த மொழிநடையில் இருப்பதாகத் தெரிகிறது. பழைய கட்டுரைகளை ஒரு முறை சீரமைக்க முடியுமா? இனி இயந்திர மொழிபெயர்ப்பைத் தவிர்த்து உங்கள் எழுத்தில் இயல்பாக மொழிபெயர்க்க இயலுமா? -16:14, 27 பெப்பிரவரி 2024 (UTC) நீச்சல்காரன் (பேச்சு) 16:14, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வணக்கம்! நான் பெரும்பாலும் இயந்திர மொழிபெயர்ப்பை பயன்படுத்தி ஆங்கிலத்திலிருந்து கட்டுரையை எடுத்த பின்னர் அதை முழுவதும் கவனத்துடன் படித்து சரியான மொழிநடைக்கு மாற்றம் செய்தே பதிவிடுகிறேன். ஏதேனும் எடுத்துக்காட்டு இருந்தால் தயவு செய்து மேற்கோள் காட்டவும், அது எனக்கு எங்கே பிழை என்று அறிய உதவியாக இருக்கும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 04:25, 28 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
கீழே வேறொரு உதாரணத்தைப் பார்த்தீர்கள். எனது இந்தத் திருத்தத்தையும் பாருங்கள். //வெட்டப்பட்ட சாகுபடி//உணரப்பட்ட ஒரு உணர்வைப் பெற்றன//மொழியியல் ரீதியாக//மக்களின் கூறு குழுக்கள்// எனப் பிழைகள் உள்ளன. நீங்கள் தானியக்க மொழிபெயர்ப்பைத் தவிர்க்கலாம். பழைய கட்டுரைகளின் வாக்கிய அமைப்பைச் சரிபார்த்துத் திருத்த வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:34, 28 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
திருத்தியமைக்கு நன்றி! நான் ஏற்கனவே பல கட்டுரைகளை இன்று மீண்டும் படித்து சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். கவனத்தில் கொள்கிறேன். நன்றி ! Magentic Manifestations (பேச்சு) 14:44, 28 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

உதாரணம்[தொகு]

இயந்திரம்

ஜிங்போ மக்கள் என்பது கச்சின் மக்களின் மிகப்பெரிய துணைக்குழுவாக இருக்கும் ஒரு இனக்குழு ஆகும். அனைத்து கச்சின் மக்களுக்கும் அவர்களின் சொந்த ஜிங்போ மொழியில் ஜிங்பா ஆகும்.

நாம்

ஜிங்போ மக்கள் (Jingpo people) என்பவர்கள் சீனா, மியான்மர், இந்தியா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். கச்சின் மக்களின் ஒரு மிகப்பெரிய துணைக்குழுவாக இவர்கள் உள்ளனர். கச்சின் மக்களின் சொந்த ஜிங்போ மொழியில் இவர்களை ஜிங்பா என்று அழைக்கின்றனர். சைவா, இலீச்சு, இலிசு, மரு, இக்காக்கூ என்பவை ஜிங்போ மக்களை குறிக்கும் இதர புறப்பெயர்களாகும்.−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. ஏற்க்கனவே சிறு மாற்றங்களை செய்திருக்கிறேன். நான் மீண்டும் ஒரு முறை அந்த கட்டுரைகளை படித்து ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் செய்து பதிவிடுகிறேன். நன்றி!−முன்நிற்கும் கருத்து Magentic Manifestations (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தகவல்சட்டம்[தொகு]

வணக்கம், நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் தகவல்சட்டங்களையும் இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 08:45, 2 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், இணைக்கிறேன், நன்றி! Magentic Manifestations (பேச்சு) 08:55, 2 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நகர்த்தல்[தொகு]

கொரியர்கள் என்பதை கொரியர் என நகர்த்தியுள்ளீர்கள். காரணம் அறியலாமா? AntanO (பேச்சு) 07:47, 3 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

வணக்கம்! இனக்குழு சார்ந்த பக்கங்கள் பல பொதுவாக ஒருமையில் உள்ளன (எடுத்துக்காட்டு: மங்கோலியர், உஸ்பெக்கியர், வியட்நாமியர்). எனவே ஒருமைத்தனத்திற்காக அது நகர்த்தப்பட்டது. ஒரு கொள்கையாக அனைத்து இனக்குழுக்களை பன்மையில் பெயரிட விழைந்தால், இந்த பக்கங்களை (எடுத்துக்காட்டாக வியட்நாமிய மக்கள் அல்லது வியட்நாமியர்கள்) என மாற்றம் செய்யலாம். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 08:11, 3 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
பக்கத்தை நகர்த்து முன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுவது நல்லது. எழுத்துப்பிழை போன்ற காரணங்களுக்காக உரையாடாது நகர்த்தினாலும், தொகுப்பு சுருக்கத்தில் குறிப்பிட வேண்டும். நிற்க, //இனக்குழு சார்ந்த பக்கங்கள் பல பொதுவாக ஒருமையில் உள்ளன.... எனவே ஒருமைத்தனத்திற்காக அது நகர்த்தப்பட்டது......// இவ்வாறான விடயங்களை பொதுவெளியில் உரையாடி, ஒப்புதல் பெற்றபிறகு நகர்த்துவது சிறப்பு. AntanO (பேச்சு) 08:16, 3 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@Magentic Manifestations and AntanO: ஒரு கொள்கையாக அனைத்து இனக்குழுக்களையும் மக்கள் என்ற பின்னொட்டுடன் தலைப்பிடுவதும் பொருத்தமாக இருக்கும். இதன்படி கொரிய மக்கள், மங்கோலிய மக்கள், உசுபெக்கிய மக்கள், வியட்நாமிய மக்கள் என்று தலைப்பிடலாம். இதுபற்றி மேலும் உரையாட விரும்பினால் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை)யில் தொடரலாம்.--Kanags \உரையாடுக 08:26, 3 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் AntanO (பேச்சு) 08:27, 3 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
தொகுப்பு சுருக்கத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும், அதை என்னுடைய கவனக்குறையாக ஏற்று கொள்கிறேன். இந்த உரையாடலை ஆலமரத்தடியில் தொடரலாம். Magentic Manifestations (பேச்சு) 09:13, 3 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

உக்ரைன் கொடி[தொகு]

வணக்கம், பல பயனர்களின் கருத்திற்கேற்ப திருத்தங்களைச் செய்வதனை மனமார வரவேற்கிறேன். உக்ரைன் கொடி கட்டுரையிலும் வாக்கியத் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. சில உதாரணங்கள்

  • //ஒரு பேனர் போல தொங்கவிடப்படும்போது அல்லது போர்த்தப்பட்டிருக்கும் போது, நீல நிற பேண்ட் இடதுபுறத்தில் இருக்க வேண்டும். செங்குத்து கொடிமுனையிலிருந்து பறக்கும்போது, நீலப் பட்டை கம்பத்தை எதிர்கொள்ள வேண்டும்.//
  • //கருப்பு ரிப்பன்கள் அரை கம்பத்தில் பறக்க விட முடியாத பதாகைகளில் துக்கத்தைக் குறிக்கின்றன.//
  • //தேசிய சின்னங்களின் வேர்கள் கிறிஸ்துவத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து வந்துள்ளன//

இயன்றவரையில் ஒவ்வொரு பத்தியாக மொழிபெயர்ப்பு செய்து இற்றை செய்யக் கோருகிறேன், நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:10, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், நான் ஒவ்வொரு வாக்கியமாக படித்து திருத்தி மொழி பெயர்க்கிரேன். இந்த மேற்கூறிய வாக்கியங்களில் என்ன திருத்தும் பரிந்துரை செய்கிறீர்கள் எனக்கூறினால் மேலும் உதவியாக இருக்கும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 08:10, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
திருத்தப்படாத தானியங்கித் தமிழாக்கம் செய்ய வேண்டாம். இவ்வாறான இடங்களில் மற்றவர்கள் பரிந்துரை கேட்பது ஏற்புடையதல்ல. AntanO (பேச்சு) 08:47, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
தானியங்கி மொழிபெயர்ப்பு கட்டுரைகளை மொழிபெயர்க்கவே கொடுக்க பட்டுள்ளது. அதை மொழி பெயர்த்த பின் அதை நான் ஒவ்வொரு வாக்கியமாக சரி பார்த்து பின்னர் வேண்டிய மாற்றங்களை செய்து பதிப்பிடுகிறேன். அப்படியே தானியங்கி மொழிபெயர்ப்பை பதிப்பித்த அனுமதியும் கிடையாது, அப்படி செய்யவும் முடியாது.
மேலும் இதில் ஏதேனும் எழுத்து அல்லது இலக்கண பிழை இருந்தால் சுட்டிக்காட்டினால் அதை சரிபடுத்திக்கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட இந்த வாக்கியங்களில் என்ன பிழை என்றே தெரியவில்லை, எனவே பதிப்பித்த அந்த நபரிடம் விளக்கம் கேட்டுள்ளேன், இதில் என்ன தவறு என்று எனக்கு விளங்கவில்லை. Magentic Manifestations (பேச்சு) 09:45, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
புரிதலுக்காக விளக்குகிறேன்...
  • //ஒரு பேனர் போல தொங்கவிடப்படும்போது அல்லது போர்த்தப்பட்டிருக்கும் போது, நீல நிற பேண்ட் இடதுபுறத்தில் இருக்க வேண்டும். செங்குத்து கொடிமுனையிலிருந்து பறக்கும்போது, நீலப் பட்டை கம்பத்தை எதிர்கொள்ள வேண்டும்.// - பேனரை பதாகை என தமிழ்ப்படுத்த வேண்டும். பேண்ட் என்பது pant எனும் ஐயத்தை ஏற்படுத்தும். அதற்கு கலைச்சொல்லை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.
  • //கருப்பு ரிப்பன்கள் அரை கம்பத்தில் பறக்க விட முடியாத பதாகைகளில் துக்கத்தைக் குறிக்கின்றன.// - பொருள் விளங்கவில்லை.
  • //தேசிய சின்னங்களின் வேர்கள் கிறிஸ்துவத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து வந்துள்ளன// - இங்கு வேர்கள் என்பது எதனைக் குறிக்கிறது?
ஒவ்வொரு விசயத்தையும் இன்னொருவர் கவனித்து திருத்துவதோ, சுட்டிக்காட்டுவதோ நடைமுறையில் கடினம் என்பதனையே அண்டன் குறிப்பிடுகிறார். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:30, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@AntanO வணக்கம்!
  1. முதலில் நான் கூகுளை மொழிபெயர்ப்புக்காக உபயோகப்படுவதில்லை. விக்கிப்பீடியாவில் இருக்கும் தானியங்கி மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்துகிறேன். அது கட்டுரைகளின் வரலாற்றை பார்த்தல் உங்களுக்கே புலப்படும். #தானியங்கி மொழி பெரியர்ப்பு கட்டுரைகளை அப்படியே பதிவாக்கம் செய்வது தான் தவறு, அதை செம்மைப்படுத்தி செய்யும் பொது எந்த விதிமீறல்களும் இல்லை என நினைக்கிறேன், அப்படி கட்டுரைகளை மொழிபெயர்ப்பதே தவறு என்றால் அந்த கருவிக்கு உபயோகமே இல்லை.
  2. நான் மேல கூறியதை போல அது அப்படியே மொழிபெயர்ப்பபை பதிவிடவும் அவை அனுமதிப்பதில்லை. செம்மை படுத்திய பின்னரே பதிப்பிட அனுமதிக்கின்றது. தானியங்கி மொழிபெயர்ப்பை தாங்கள் பயன்படுத்தி இருந்தால் அது உங்களுக்கே புரியும்.
  3. மேலும் தாங்கள் கூறியதை போல் நான் பல பெரிய கட்டுரைகளுக்கு என்னுடைய மனல்தொட்டியில் பதிவு செய்து பின்னர் பதிவிடுகிறேன் (என்னுடைய வரலாற்றை பார்த்தல் அது உங்களுக்கு புலப்படும்).
  4. நான் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட சரியான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறேன். இதில் ஒன்று இரண்டு பிழைகள் இருந்தால் சுட்டி காட்டுதலின் பெயரில் அதை சரி செய்கிறேன். மேலும் மற்றவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு பாதி ஆங்கிலத்தில் இருக்கின்ற பல கட்டுரைகளை சரி செய்து வருகிறேன். எனவே ஓரிரு தவறுகள் அல்லது தவறான புரிந்துகொள்ளல்கள் வருவது இயல்பு. அதை புரிந்து கொள்வது மற்றும் திருத்துவதில் தவறேதும் இல்லை.
நன்றி!
@Selvasivagurunathan m வணக்கம்!
எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. நான் அந்த கட்டுரையில் விரிவான மாற்றங்கள் செய்து இருக்கிறன். முதல் கருத்தில் கூறியவாறு மாற்றம் செய்து இருக்கிறேன். மேலே கூறிய மற்ற கருத்துக்களில் வாக்கியங்களை முழு பதியுடன் படித்து பொருள் கொள்ள வேண்டும், வாக்கியங்களை படித்தால் சரியான பொருள் தராது. எடுத்துக்காட்டாக, "கருப்பு ரிப்பன்கள் அரை கம்பத்தில் பறக்க விட முடியாத பதாகைகளில் துக்கத்தைக் குறிக்கின்றன." இந்த வரி இந்த பத்தியில் வருகிறது, "மரியாதை அல்லது துக்கத்தின் அடையாளமாக தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. ...கருப்பு ரிப்பன்கள் அரை கம்பத்தில் பறக்க விட முடியாத பதாகைகளில் துக்கத்தைக் குறிக்கின்றன." இதில் பொருள் விளங்குகின்றதாவே நான் நினைக்கிறன். மூன்றாவது வரியில் வேர் என்பது அதன் தோற்ற மூலத்தை குறிக்கிறது. எனவே, இதில் வெளிப்படியான தவறுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எனினும் புரிந்துகொள்வதற்காக விரிவாக மாற்றம் செய்து மறுபதிப்பு செய்து உள்ளேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 14:00, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
முறையாக திருத்தப்படாத தானியங்கிக் கட்டுரைகள் நீக்கப்படும். குறித்த பயனர் எச்சரிக்கையின் பின்னும் தொடர்ந்து அவ்வாறே செயற்பட்டால் தற்காலிக தடைக்கு உள்ளாக இடமுண்டு.இதைத்தவிர வேறு விளக்கங்கள் தேவையில்லை. நன்றி. AntanO (பேச்சு) 17:42, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
ஒரு சிக்கலை ஆராய்ந்து விளக்கங்களை கேட்டு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. சில பயனர்களின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளுக்கு ஏற்றவாறு எச்சரிக்கைகளை வழங்குவதை தவிர்க்கலாம் ஏனெனில் எந்த வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களும் இங்கே மீறப்படவில்லை. நீங்கள் பாரபட்சமின்றி சரியானதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!
இங்கே சில பயனர்கள் எனக்கு மிகுந்த உதவி செய்திருக்கன்றனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!
என்னுடைய என்ன ஓட்டத்தின் படி இங்கே பயனர்களை ஊக்குவிப்பதை விட எந்த இரு பயனர்களுக்கிடையே பேச்சுக்கள் நடந்தாலும் உதவி செய்வதை விட எச்சரிக்கை செய்வதே வாடிக்கையாக உள்ளதாக கருதுகிறேன். இது புதிய பங்களிப்பாளர்களுக்கு பெரும் தடையாக உள்ளது. இது நடைமுறைக்கு ஏற்புடையதும் அல்ல. இது என்னுடைய பொதுவான கருத்து, தயவு செய்து தனிப்பட்ட முறையில் தங்களுக்கு எதிரான கருத்து என எடுத்துக்கொள்ள வேண்டாம். தவறாக ஏதேனும் பதிவிற்றிருந்தால் மன்னிக்கவும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 04:20, 10 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
//எனினும் புரிந்துகொள்வதற்காக விரிவாக மாற்றம் செய்து மறுபதிப்பு செய்து உள்ளேன்// நன்றி..
ஒற்றுப் பிழைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
//சில பயனர்களின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளுக்கு ஏற்றவாறு எச்சரிக்கைகளை வழங்குவதை தவிர்க்கலாம்// வெகு சிலர் மட்டுமே துப்புரவுப் பணியில் ஈடுபடுவதால் அவர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது போல் உங்களுக்குத் தோன்றலாம். அதில் தவறில்லை ஆனால், கற்பனையாக யார் கருத்திட்டார்கள் என்பது எனக்குப் புரியவில்லை விளக்கவும்.
மற்றும் எனும் சொல்லை இனி வரும் கட்டுரைகளில் தவிர்க்கலாம். காண்க
நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:28, 10 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
துப்புரவுப் பணியில் ஈடுபடுபவர்கள் தவறுகளை சுட்டிகாற்றுவதில் தவறு எதுவும் இல்லை. தவறுகளை சுட்டிக்காட்டுதல் மாற்றும் நெறிமுறைப்படுத்தல் விக்கிபீடியாவின் செயலாற்றத்திற்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றன. தவறுகளை சுட்டி காட்டுதல் அந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க பயனர்களுக்கு உதவியாக இருக்கும், மேலும் கட்டுரைகள் சிறப்பாக இருக்க உதவியாக இருக்கும். இதை நான் மறுக்கவும் இல்லை, மாறாக எனக்கு அதற்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன். எந்த ஒரு கட்டுரையும் எழுதும் போது சிறு தவறுகள் நேரலாம், மற்றும் அதை சுட்டி காட்டுவதிலோ இல்லை திருத்துவதிலோ தவறேதும் இல்லை. எந்த ஒரு பயனரும் வேணும் என்றே எதையும் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறன்.
என்னுடைய பொதுவான வாதமே வேறு. இங்கு நான் கூகுளை பயன்படுத்தி மொழி மாற்றம் செய்வதாகவும், அதை அப்படியே பதிவிடுவதாகவும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தான் நான் பதிலளித்துள்ளேன். ஒன்று, நான் கூகுளை பயன்படுத்துவதும் இல்லை, மேலும் விக்கிபீடியாவில் உள்ள கருவியையே பயன்படுத்துகிறேன். இரண்டு, சிறு தவறுகள் இருப்பினும் நான் அனைத்து கட்டுரைகளையும் திருத்திய பிறகே பதிவிடுகிறேன். அந்த கருவியும் அப்படியே பதிவிட அனுமதிப்பது இல்லை. எனவே மொழி மாற்றம் செய்வதே தவறு என்ற பாணியில் இங்கு பல கருத்துக்கள் மற்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அப்படி எந்த ஒரு கொள்கையும் விக்கிப்பீடியாவில் இல்லை மற்றும் விக்கிப்பீடியாவே மொழி மாற்றம் செய்வதை ஊக்குவிக்கறது, அதற்காகவே மொழி மாற்ற கருவியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பயனரின் பங்களிப்புகளில் ஏதேனும் மாற்று கருத்து இருப்பின் உரையாடலில் ஈடுபடுவது இயல்பான ஒன்றாகும், மேலும் அதை விக்கிப்பீடியாவும் ஊக்குவிக்கின்றது. ஆனால் இங்கு பல கருத்துகள் பயனர்களை எச்சரிப்பதிலும், அச்சுறுத்தும் நோக்கத்திலும் பதிவிடப்படுகின்றது.
தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பதே அனைவரின் நோக்கமாக இருக்கும் போது, பயனர்களை ஊக்குவித்து, அரவணைத்து செல்வது நெறிமுறைப்படுத்துபவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். ஏறத்தாழ 15 ஆண்டுகளாக பங்களித்து வரும் நான் விக்கிப்பீடியாவின் நோக்கங்கள் மற்றும் விதிமுறைகளை பற்றி ஓரளவு அறிவேன். எனவே மாறாக இங்கு எதோ ஒரு குற்றம் செய்தவரை கண்காணிக்கும் காவல்துறை போல செய்யும் அனைத்துமே தவறு என்ற நோக்கிலும் இங்கே கருத்துகள் மற்றும் எச்சரிக்கைகள் பதிவிடப்படுவதாகவும் நான் உணர்கிறேன். கிட்டத்தட்ட 200 கட்டுரைகள் எழுதியுள்ள போது, ஓரிரு கட்டுரைகளில் அவதானிப்புகள் இருப்பின், அது இயல்பே தவிர, இதில் குற்றமேதும் இல்லை. இதற்கு ஒரு ஒவ்வாத எச்சரிக்கை பதிவிடுவது ஏற்படுவது அல்ல என்பதே என் கருத்து. இது பங்களிப்பாளர்களுக்கு தடையாக இருக்குமே தவிர ஊக்கமளிப்பவையாக இருக்காது. நன்றி! Magentic Manifestations (பேச்சு) 16:20, 10 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
//இங்கு நான் கூகுளை பயன்படுத்தி மொழி மாற்றம் செய்வதாகவும், அதை அப்படியே பதிவிடுவதாகவும்// எங்கு இடம்பெற்றது? AntanO (பேச்சு) 16:50, 10 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
வணக்கம் @Magentic Manifestations: 'தானியங்கித் தமிழாக்க' அறிவிப்பு வார்ப்புருவை நீங்கள் பொறுமையாக படித்துப் பார்த்தால், அது உரைக்கும் விடயத்தை நன்கு புரிந்துகொள்ளலாம். கலைக்களஞ்சியத்திற்கு ஒவ்வாத கட்டுரைகள், திருத்தப்படாத இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் என பொறுப்பற்ற (அல்லது) பொறுப்பு குறைவான நடவடிக்கைகள் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அதிகளவில் இருந்தன. அவற்றையெல்லாம் தன்னார்வலர்கள் கட்டுப்படுத்தி, முறைப்படுத்தியிருக்கிறார்கள். இதனைத் தொடரும் பொருட்டே, மிகவும் விழிப்புடன் அனைவரும் வழிநடத்தப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பு வார்ப்புருக்களும் அவ்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான வழிகாட்டல்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாது, நேர்மறையாக, ஆக்கநோக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து சிறப்பான முறையில் பங்களிக்க வாழ்த்துகள்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:12, 10 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@AntanO
  1. திருத்தப்படாத தானியங்கித் தமிழாக்கம் செய்ய வேண்டாம். இவ்வாறான இடங்களில் மற்றவர்கள் பரிந்துரை கேட்பது ஏற்புடையதல்ல."'
ஒருவர் ஒரு கருத்தை என்னுடைய பேச்சு பக்கத்தில் பதிவிடும் போது, அதன் பொருள் என்ன என்பதை கேட்காமல் எப்படி பதிலளிக்க அல்லது திருத்தங்கள் செய்ய இயலும். பயனர் பேச்சு பக்கமே பயனர்களிடையே பேச்சு நடத்தும் நோக்கத்தில் தானே உள்ளது. அவ்வாறு இருக்கும் போது இதில் என்ன குற்றம் என எனக்கு விளங்கவில்லை.
  1. முறையாக திருத்தப்படாத தானியங்கிக் கட்டுரைகள் நீக்கப்படும். குறித்த பயனர் எச்சரிக்கையின் பின்னும் தொடர்ந்து அவ்வாறே செயற்பட்டால் தற்காலிக தடைக்கு உள்ளாக இடமுண்டு.இதைத்தவிர வேறு விளக்கங்கள் தேவையில்லை. நன்றி.
விக்கிப்பீடியாவில் எச்சரிக்கை மற்றும் தடை செய்யும் அமைப்பு ஆக்கமில்லாத நோக்குடன் செய்யப்படும் செயல்களுக்காக இருக்கின்ற ஓர் அமைப்பாகும். இங்கு இந்த கருத்தை (குறிப்பாக இரண்டாவது வரி) கூற வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. முறைப்படுத்துபவர்கள் பயனரின் கூற்றுகளை கேட்டு ஆராய்ந்து பதிவிடுவதே நலம். நான் எந்த விளக்கத்தையும் கேட்க விரும்பவில்லை என்பது ஒரு முரணான கருத்து.
  1. இந்த எச்சரிக்கை பெட்டி உங்களுடைய முந்தைய பதிவிட்ட கருத்தையே வலியுறுத்துகிறது, அதை மீண்டும் ஆணித்தனமாக வலியுறுத்துவது போல் உள்ளது . "Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation...... Please do not attempt to breach the policy as it may warrant your user account block."
எந்த ஒரு கூற்றை எடுத்தாலும் அதில் தற்காலிக தடை மற்றும் தடை சம்பந்தமான எச்சரிக்கைகள் மட்டுமே உள்ளன. இவ்வாறு பேச்சு பக்கத்தில் வேறு எந்த பயனராலும் ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு பேச்சுவார்த்தை பதிவுக்கும் தடை அச்சுறுத்தல் செய்து கொண்டே போனால், பங்காளிக்க பயனர்களே இருக்க மாட்டார்கள்.
@Selvasivagurunathan m
என்னுடைய கூற்றை நீங்கள் படித்து பார்த்தல், நான் துப்புரவுப் பணியில் ஈடுபவர்கள் மற்றும் தவறுகளை ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டி திருத்த உதவி செய்பவர்கள் ஆகியோரின் செயலை குறை கூறவில்லை, மாறாக அது ஒரு கடினமான மற்றும் செம்மைபடுத்த உதவும் செயல் என்பதையும் நான் நன்கு அறிவேன். மேலும் இயந்திர மொழி பெயர்ப்பை அப்படியே வெளியிடுவதை நான் ஆதாரிக்கவும் இல்லை. அது ஆக்கப்பூர்வமான செயல்பாடும் அல்ல.
பங்களிக்கும் பயனர்களை மேலும் ஆக்கபூர்வமாக பங்களிக்க இவை உதவியாக மற்றும் உந்துகோலாக இருக்க வேண்டுமே தவிர, அது ஒரு பயமுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்தில் இருக்க கூடாது என்பதே என்னுடைய கூற்று. தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி! Magentic Manifestations (பேச்சு) 06:57, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
பெப்பிரவரி 2024 அன்றே உங்களைத் தடை செய்ய போதுமான காரணம் இருந்தும் தடைசெய்யாமல் இருந்ததற்கு காரணம். ஒருவரால் கிடைக்கும் நன்மைக்கு இடம் அளித்தமையாகும். விக்கி வழிகாட்லின்படி செயற்பட ஒவ்வொரு பயனருக்கும் (நிர்வாகி உட்பட) இடமுள்ளது. AntanO (பேச்சு) 13:48, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@AntanO
  1. முதலில் நான் விக்கி வழிகாட்டுதலின் பெயரில் செயல்படுவது தவறு என்று எங்குமே உரைக்கவில்லை. அந்த செயல்பாடுகளில் இவ்வாறு ஒரு விளக்கமே இல்லை. மேலும் அது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதே என் கூற்று.
  2. தடை செய்யவதாக அச்சுறுத்துவது தான் இங்கே வழக்கமாக உள்ளது என்பது தான் என்னுடைய முதன்மையான வாதாமே. உங்கள் கூற்று மீண்டும் அதையே உறுதிப்படுத்துகிறது. விக்கிபீடியாவில் பதிவிடுவது என்பது அவரவர் சொந்த ஆர்வம் மற்றும் முயற்சியில் செய்யும் ஒரு பங்கெடுப்பாகும். தடை செய்தால் ஒரு பங்களிப்பவரை விக்கிபீடியா இழக்குமே தவிர எனக்கும் உங்களுக்கும் இதனால் எந்த ஒரு இழப்பும் இருக்கப்போவதில்லை.
  3. எப்படியும் இந்த பேச்சை தொடர்வதில் எந்த ஒரு பயனும் இருக்கப்போவதில்லை என்பதை உணர்கிறேன். இதுவரை நல்கிய உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி! வணக்கம்!
Magentic Manifestations (பேச்சு) 06:09, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

Anne / Anna என்பதை ஆன்னே என்றா தமிழில் அழைப்பது? கீவின் ஆன்னே ஓர் இளவரசி. இதற்கு அரசர்கள் பகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது.--AntanO (பேச்சு) 08:52, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

Anne என்பதை ஆங்கிலத்தில் ஆண் அல்லது அன்னே அல்லது ஆன்னே என்று வெவ்வேறு விதமாக கூறலாம். தங்களுக்கு இதில் எதாவது பரிந்துரைகள் இருந்தால் கூறுங்கள்.
மேலும் ஆன்னே இவரது மகன் வயதுக்கு வரும் வரை அரசியாக இருந்தார், எனவே அரசர்கள் பகுப்பு சரி என நினைக்கிறன். அதில் எதாவது மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 09:49, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
Anne - தமிழில் ஆன் (ஆன்னே அல்ல). உக்ரைனிய மொழியில் அன்னா. தலைப்பை "அன்னா யாரோசிலாவ்னா" என்றிடுவது நல்லது. அவ்வாறே உக்ரைனிய விக்கிக் கட்டுரையில் தலைப்பிடப்பட்டுள்ளது--Kanags \உரையாடுக 10:17, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள் எனும் துணைத் தலைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில், மேற்கோள்கள் எனும் துணைத் தலைப்பிற்குரிய வழிகாட்டலுக்கு இங்கு காணுங்கள்: துணைத் தலைப்பு -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:15, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

References என்பதனை மேற்கோள்கள் என மாற்றிவிடுங்கள். Reflist எனும் வார்ப்புருவையும் மறவாது இட்டுவிடுங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:43, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m சில கட்டுரைகளில் நான் குறிப்புகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன். மற்றவற்றில் பெரும்பாலும் நீங்கள் குறிப்பிட்டது போலவே உள்ளது. இனி கட்டுரைகள் உருவாக்கும் போது இதை நான் கவனத்தில் கொள்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 05:26, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
  1. இரண்டு கட்டுரைகளில் Reference என ஆங்கிலத்திலேயே இருந்தது.
  2. இன்னொரு கட்டுரையில், Reflist எனும் வார்ப்புரு இடப்படாமல் இருந்தது. கட்டுரையில் மேற்கோள்கள் தான் கடைசி தலைப்பு எனில் பிரச்சினை இருக்காது. ஆனால் அதற்கும் கீழ் வேறு தலைப்புகள் இருப்பின், வடிவமைப்புச் சிக்கல் ஏற்படும்.
  3. இது போன்ற குறிப்புகளை அனைவருக்கும் நான் இடுவதில்லை. அதிகளவில் பங்களிக்கும் உஙகளைப் போன்றோருக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் இடுகிறேன். மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:34, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
குறிப்புகளுக்கு எடுத்துக்காட்டு: குறிப்புகள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:41, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! இனி கட்டுரைகள் உருவாக்கும் போது இதை நான் கவனத்தில் கொள்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 05:45, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

புதிய பகுப்புகள்[தொகு]

தேவைப்படும் புதிய பகுப்புகளை உருவாக்கலாம்:-கப்பல் வகைகள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:31, 16 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் Magentic Manifestations (பேச்சு) 09:30, 16 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

புதிய பாம்பன் பாலம்[தொகு]

புதிய பாம்பன் பாலம் கட்டுரைக்கு விக்கி மொழியிடை இணைப்பு தர உதவி தேவைப்படுகிறதா? அல்லது நீங்களே செய்துகொள்கிறீர்களா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:58, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நானே தரவோடு இணைத்து விட்டேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 10:54, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:00, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பாம்பன்-இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம் எனும் கட்டுரை ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. எனவே இவ்விரு கட்டுரைகளையும் இணைக்குமாறு வார்ப்புரு இட்டுள்ளேன். அதற்கொரு வழிமுறை உள்ளது. அதன்படி, நிர்வாக அணுக்கம் உள்ள ஒருவர் இணைப்பார். கொஞ்சம் பொறுத்திருங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:21, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

இரு கட்டுரைகளின் தகவல்களில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இணைப்பவருக்கு கடினமான வேலையாக இருக்கக்கூடும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:28, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

அந்த வழிமுறை. ஏற்கனவே கட்டுரையை உருவாக்கியவருக்கும் credit செல்லவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:40, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

அந்த முதலில் எழுதப்பட்ட கட்டுரையை சரியான விக்கித்தரவில் இணைக்காததால் நான் புதிதாக ஒரு கட்டுரையை எழுத வேண்டியதாயிற்று. அதை விதிகளின் படி இணைத்துவிடலாம். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 11:45, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்[தொகு]

வணக்கம். 2009 ஆம் ஆண்டில், கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாகச் சுமார் 1,200 கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணியை 2022, 2023 ஆம் ஆண்டுகளில் சிறப்புத் திட்டங்கள் வாயிலாகச் செய்தோம். இதனை 2024 ஆம் ஆண்டிலும் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அவ்வகையில் ஏப்ரல், மே, சூன் மாதங்களை உள்ளடக்கிய காலாண்டு 'சிறப்புக் காலாண்டு' என அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்தத் திட்டத்தில் இணைந்து பங்களிப்பதற்கு அழைக்கிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 31 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

அழைத்தமைக்கு நன்றி! Magentic Manifestations (பேச்சு) 05:41, 31 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

இந்தத் திட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டமைக்கு நன்றி! கிறிஸ்டியானோ ரொனால்டோ கட்டுரையை செம்மைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. ஒரு ஐயம்… இந்தக் கட்டுரையானது 'கூகுள் தமிழாக்கக் கட்டுரை'யாக அடையாளப்படுத்தப்படவில்லை. இதனை 'கூகுள் தமிழாக்கக் கட்டுரை'யாக நீங்கள் எங்ஙனம் எடுத்துக் கொண்டீர்கள் என்பதனை அறிந்துகொள்ளலாமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:28, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m கட்டுரையின் பழைய வடிவத்தை பார்க்கும் போது சரியான மேற்கோள்கள் இல்லாமால் அப்படியே ஆங்கிலத்தில் இருந்து சில பத்திகளை மொழி பெயர்த்து இட்டதாக இருந்தது. மேலும் தகவற்சட்டம் உட்பட பல ஆங்கில வார்த்தைகள் அப்படியே பதிவேற்றம் செய்யபட்டிருந்தது. எனவே அதை நான் செம்மைப்படுத்த வேண்டியதாயிற்று. நன்றி !
மேலும் செம்மைப்படுத்தியாக குறியிடப்பட்ட சில கட்டுரைகள் செம்மைப்படுத்தப்படாமலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ். இதுவும் கவனிக்க வேண்டியதாகிறது. Magentic Manifestations (பேச்சு) 12:39, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

பதிலுரைக்கு நன்றி. கூகுள் தமிழாக்கக் கருவி உதவியால் கிறிஸ்டியானோ ரொனால்டோ கட்டுரை உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்பதால், பேச்சு:கிறிஸ்டியானோ ரொனால்டோ எனும் பக்கத்தில் கையெழுத்துடன் இடப்பட்ட வார்ப்புருவை நீக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு திட்டமாக இப்பணியைச் செய்வதால், இயன்றளவு சரியாகச் செய்வோம் என்பதற்காக இந்தக் கோரிக்கை.

ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் கட்டுரை குறித்து... பேச்சு:ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ள பகுப்பினை மிக நுணுக்கமாக கவனித்தீர்கள் எனில், திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் என இருக்கும். அப்போது அதனை செம்மைப்படுத்தியவர்கள், வலுவாக அறிவிக்கவில்லை. எனவே அக்கட்டுரைகள் மீண்டும் செம்மைப்படுத்தபட வேண்டும். இதனை திட்டப் பக்கத்தில் இங்கு குறிப்பிட்டுள்ளேன். குறிப்பு: திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் எனும் பகுப்பினுள் இருக்கும் கட்டுரைகளே பயனர்களால் பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட்டு வலுவாக அறிவிக்கப்பட்டவை! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:17, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஒரு திட்டமாக இதனை செய்வதால் அதை நீக்குவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இது போன்று விக்கி மொழியாக கருவியை பயன்படுத்தாமல் கூகுளை உபயோகப்படுத்தி அப்படியே மொழியாக்கம் செய்து பாதி ஆங்கில சொற்களுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்டுரைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்று தெரியவில்லை. Magentic Manifestations (பேச்சு) 13:47, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஒத்துழைப்பு தருவதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போது, விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு என ஒரு திட்டமாக இயக்கி, கட்டுரைகளை உருவாக்கினார்கள். காலப்போக்கில், மற்றப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். தேங்கிவிட்ட அந்தக் கட்டுரைகளையே தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:26, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

April 2024[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 08:22, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், எதை பற்றி கூறுகிறீர்கள் என்று தெளிவு படுத்தவும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 08:24, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், Magentic Manifestations!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 08:22, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Information icon தயவு செய்து விக்கிபீடியாவின் பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தல் வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு எதிரானதும், அனுமதிக்கப்படாததும் ஆகும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக் கூடாது. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 08:27, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நான் அதிகாரப்பூரவமான பெயர், சரியான தமிழ் பெயர்கள் இல்லாத கட்டுரைகள் மற்றும் மற்ற ஒத்த தலைப்புகளின் ஒற்றுமைக்காக பக்கங்களை நகர்த்த முற்படுகிறேன். ஏதேனும் இதில் குறிப்பிட்ட கட்டுரைகளின் தலைப்பில் தங்களுக்கு கருத்து இருப்பின் அதை சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். பெயரிடல் மரபுகளுக்கு எதிராக எந்த பெயரிடப்பட்டது என சுட்டிக்காட்டினால் தகுந்ததாக இருக்கும். இல்லையென்றால் இந்த பதிவிற்கு என்ன பொருள் அல்லது நோக்கம் உள்ளது என்று புலப்படவில்லை.Magentic Manifestations (பேச்சு) 08:33, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
பகுப்பு உருவாக்கம், தலைப்பை நகர்த்தல் உட்பட்ட தொகுத்தலின் போதும், அதன் பின்னும் செய்ய வேண்டிவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவை தொடர்பாக முன்னரும் பலமுறை குறிப்பிட்டாயிற்று, தேவையான சுட்டிகளும் உள்ளன. ஆகவே, மீண்டும் மீண்டும் வழிகாட்டிக் கொண்டிருக்க முடியாது. இன்னும் விளங்காவிட்டால், மணல் தொட்டியில் பழகிய பின் பொதுவெளியில் தொகுக்கலாம். --AntanO (பேச்சு) 09:00, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
விக்கிபீடியா பக்க நகர்த்தல் வழிகாட்டுதலின் படி சர்ச்சைக்குரிய மற்றும் சாத்தியமான சர்ச்சைக்குரிய நகர்வுகளுக்கு மட்டுமே மேற்கூறிய கருத்துக்கள் உரித்தாகும். விக்கிபீடியா:கட்டுரையின் பெயரிடும் வழிகாட்டுதல்கலின் படி மாற்றப்படும் தலைப்பு சரியானது என்று நம்பினால், அனுபவம் வாய்ந்த பயனர்கள் பக்கத்தை நெறிமுறைகளை பின்பற்றி நகர்த்தலாம்.
எந்த கட்டுரையை பற்றி கூறுகிறீர்கள் எனக் கேட்டால் நீளமாக பதில் கூறுகுரீர்களே தவிர எந்த தலைப்பில் தவறு என்றோ என்ன விதி மீறல் என்றோ இது வரை கூறவில்லை. இதில் என்ன கூறுவது அல்லது என்ன செயல்படுத்துவது என்று எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி!Magentic Manifestations (பேச்சு) 09:39, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
சுக்கோய் சு-24 கட்டுரையில் பகுப்பாக்கம் குழம்பியுள்ளது. பகுப்பை நகர்த்தி இவ்வாறான சிக்கல்களை ஏன் சரிசெய்யவில்லை? உருசிய நிறுவனங்கள் என்ற பகுப்னை ஏன் விக்கித்தரவில் இணைக்கவில்லை. சிக்கலான தொகுப்புக்களை செய்ய வேண்டாம். தெரிந்தவற்றை மட்டும் செய்யவும். AntanO (பேச்சு) 09:46, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
உருசிய நிறுவனங்கள் என்பது ஒரு புதிய பகுப்பு. பகுப்பிற்கும் பக்க நகர்தலுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. மேலும் ஒரு பகுப்பு அல்லது கட்டுரையை உருவாக்கும் பொது அதை விக்கித்தரவுடன் இணைத்தல் நலம், ஆனால் இணைக்கப்படாதது ஒரு தவறோ குற்றமோ கிடையாது. இருந்தாலும் கவனத்தில் கொள்கிறேன். நன்றி!
நான் எழுத்து பிழை காரணமாக மாற்றி அமைத்த பிறகு அந்த பழைய பகுப்பில் இருக்கும் கட்டுரைகளை புதிய பகுப்பிற்கு மாற்றும் பணியில் நான் இருக்கும் போது தான் இந்த உரையாடலே அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. சம்பந்தப்பட்ட கட்டுரைகளில் பகுப்பை மாற்றாமல் நீங்கள் தான் அவசரப்பட்டு அந்த பழைய பகுப்பை (பகுப்பு:உருசியாப் போர் வானூர்திகள்) அழித்திருக்குறீர்கள், அதில் இன்னும் ஐந்து பக்கங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தான் மேற்கூறிய கட்டுரையில் பகுப்பு குழம்பியிருக்கிறது. எனவே ஒரு பகுப்பை அழிக்கும் முன் சரி பார்த்து பிறகு அதை நீக்குங்கள். இதில் என் தவறேதும் இல்லை.
பகுப்பை திருத்திய பிறகு சம்பந்தப்பட்ட கட்டுரைகளை திருத்த சிறிது நேரம் பிடிக்கும் ஏனென்றால் அந்த பகுப்பில் இருக்கு அனைத்து கட்டுரைகளும் வேறு பயணர்களால் பிழைகளுடன் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நான் நான் பகுப்பை திருத்துவதோடு கட்டுரைகளையம் அதன் தலைப்புகளையும் ஒவ்வொன்றாக சரிபார்த்து திருத்தி வருகிறேன். எடுத்துக்காட்டாக சுகோய் எஸ்யு-57, சுகோய் எஸ்யு-27. எனவே தயவு செய்து சற்று பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் வேறொவரால் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த பின்வரும் கட்டுரைகளை மற்றும் தலைப்புகளை திருத்தும் செய்வதில் தங்களுக்கு ஏதேனும் கருத்து இருந்தால் இப்பொழுதே கூறிவிடுங்கள்.
  • சுக்கோய் சு-24 (பெயர் மாற்றம்: சுகோய் எஸ்யு-24)
  • சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ (பெயர் மாற்றம்: சுகோய் எஸ்யு-30எம்கேஐ)
  • சுகோய் எஸ்யு-30
  • சுகோய் எஸ்யு-35
  • சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ (பெயர் மாற்றம்: சுகோய்/எச்ஏஎல் எப்ஜிஎப்ஏ)
நன்றி!
Magentic Manifestations (பேச்சு) 11:04, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
வணக்கம், //மேலும் ஒரு பகுப்பு அல்லது கட்டுரையை உருவாக்கும் பொது அதை விக்கித்தரவுடன் இணைத்தல் நலம், ஆனால் இணைக்கப்படாதது ஒரு தவறோ குற்றமோ கிடையாது.// இது சரியான பதிலுரையா என எண்ணிப் பாருங்கள். விக்கித் தரவுடன் இணைக்கத் தெரியவில்லை என்பது வேறு தெரிந்திருந்தும் இணைக்காமல் விடுவதன் காரணம் என்ன? நீங்கள் விக்கித் தரவில் இணைக்காமல் இருந்தால் மற்ற பயனர்கள் அந்தப் பகுப்பினையோ கட்டுரையோ உருவாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் நேரம் மற்றும் துப்புரவு செய்பவர்களின் நேரம் வீணாகிறது தானே. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:38, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@Sridhar G வணக்கம்!
அனைத்து பக்கங்களையும் பகுப்புகளையும் விக்கித்தரவில் இணைப்பது நலம். அதை நான் ஒப்பு கொள்கிறேன். ஒரு பகுப்பபை விக்கித்தரவில் இணைக்காதது துப்புரவு மேற்கொள்பவர்கள் அல்லது மற்ற பயனர்களுக்கு ஒரு சுமைதான்.
யாரும் தெரிந்தே வேண்டும் என்றே இதை செய்யாமல் விடுவதில்லை. மேலும் ஒரு பெரிய பெற்றி குறிப்பு இங்கு இடப்பட்டதற்கு நான் எந்த கட்டுரை அல்லது பகுப்பு மற்றும் என்ன காரணம் என தெரிந்துகொள்ள வேண்டி கேட்டதற்கு தான் நல்ல முறையில் பதில் அளிக்க படவில்லை என்பதை மேலே படித்து நீங்களே அறிந்து கொள்ளலாம்.
மேலும் அந்த சம்பத்தப்பட்ட பகுப்பை இணைக்கப்பட்ட கட்டுரைகள் இருக்கும் போது பார்க்காமல் அதை அவர் நீக்கியபோது தான் அந்த குழப்பமே வந்துள்ளது. எனக்கு நீக்கும் உரிமை கிடையாது என்பதை தாங்கள் அறிவீர்கள். மேலும் நான் ஒவ்வாத தலைப்புகளை திருத்தி வருகிறேன், ஆனால் நான் இட்ட தலைப்புகள் சரியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு எந்த கட்டுரை என்ன கேட்டால் பதில் இல்லை.
இவைகளைப் பற்றி பேசும் போது அதற்கு பதில் இல்லை, அதற்கு பதில் இதை ஒரு குற்றமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, எனவே விதிகளின் படி அப்படி எங்கும் எழுதப்படவில்லை எனவே நான் கூறியிருக்கிறேன். அது தவறாக வெளிவந்திருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், துப்புரவு பணி மேற்கொள்பவர்களுக்கு உதவி செய்வதே எனது நோக்கம், அதனால் தான் நான் பல்வேறு கட்டுரைகளை செம்மைப்படுத்தி வருகிறேன். அதே போல் சம்பந்தப்பட்ட நிர்வாகி பயனர்களுக்கு வழிகாட்டும் முனைப்புடன் பதிவிட வேண்டும், மாறாக காரணமே குறிப்பிடாமல் பதிவிடுவது, காரணம் கேட்டால் எரிந்து விழுவது, செய்யாததை செய்ததாக சுட்டிக்காட்டுவது அழகல்ல, அதனால் எந்த பயனும் கிடையாது.
நன்றி! Magentic Manifestations (பேச்சு) 05:38, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

சில பயனர்களோடு பேசுவதைவிட அறிவித்தல் அளிப்பது ஏற்புடையது. நான் எப்படி துப்புரவாக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுரை தர வேண்டாம். நிற்க, தேவையற்ற சில கருத்துக்களுக்கு பதில் அளித்து, எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. தேவைற்ற உரையாடல்களை விக்கி தவிர்க்கிறது. தேவையற்ற உரையாடல் தொடர்பவர்களை எச்சரிக்கவும், தடை செய்யவும் அவ்வழிகாட்டல் வழிசெய்கிறது. --AntanO (பேச்சு) 06:41, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

அதே போல் நீங்கள் எனக்கு எப்படி பங்களிக்க வேண்டும் என அறிவுரை தர வேண்டாம். தங்களுடைய தவறை மறைப்பதற்கு மற்றவர்களை குறை கூறாதீர்கள். மேலும் சம்பந்தம் இல்லாமல் தனிப்பட்ட வன்மத்தின் பேரில் சரியான காரணம் ஏதும் விளக்காமல் என்ன காரணம் கிடைக்கும் என எச்சரிக்கைகளை தேடாதீர்கள்.
விக்கிப்பீடியா ஒருவரின் தனிப்பட்ட சொத்தும் இல்லை இது ஒரு சர்வாதிகார உலகும் இல்லை. இங்கு அனைவரும் தனிப்பட்ட ஆர்வத்தின் பேரில் பங்களிக்கிறார்கள்.
என்னுடைய பதினைந்து ஆண்டு கால பங்களிப்பில் இப்படி ஒரு பயனரையோ நிர்வாகியையோ கண்டதே இல்லை. நான் மற்ற எந்த ஒரு பயனருடனும் இப்படி உரையாடுவதில்லை. உங்களுடன் உரையாடுவது ஒரு மிக பெரிய நேர வீணாக்கும் செயல் என்று நான் முதலே கூறியிருக்கிறேன். எதை கேட்டாலும் சம்பந்தமே இல்லாமல் பல வரிகள் கூறுவது, எரிந்து விழுவது இதுவே வழக்கம். Magentic Manifestations (பேச்சு) 07:42, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Information icon தயவு செய்து தொடர்பற்ற தலைப்புகளின் பொது விவாதத்திற்கு பேச்சுப் பக்கங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவை கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான உரையாடலுக்கானது. அதனை பொது மன்றமாகவோ அல்லது அரட்டை அறையாகவோ பயன்படுத்த முடியாது. விடயங்கள் தொடர்பான கேள்விகள் இருந்தால், கட்டுரையின் பேச்சுப் பக்கங்களுக்குப் பதிலாக எங்கள் குறிப்பு மேசைக்குச் சென்று எங்கள் உசாத்துணைப் பக்கம் அவர்களிடம் கேட்கவும். மேலும் தகவலுக்கு இங்கே பார்க்கவும். நன்றி. AntanO (பேச்சு) 07:43, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நான் தமிழகம் செய்வதை திருத்துவது சம்பந்தமான முறையான சந்தேகங்களையே கேட்டிருக்கிறேன். அது ஒன்றும் வேலை இல்லாமல் செய்யும் போது அரட்டை கிடையாது. தங்களுக்கு அதை தெளிவு படுத்த விருப்பம் இல்லை எனில் மற்றவர்களை தடுக்க வேண்டாம், மாறாக கொச்சைப்படுத்தும் நோக்கில் பதிப்புகளை இட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். உங்களுக்கு மட்டுமே அது தேவையற்றதாக தெரிகிறது. நன்றி! Magentic Manifestations (பேச்சு) 11:15, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவைற்ற உரையாடலைத் தொடர்ந்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 11:27, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நான் ஒரு பேச்சு பக்கத்தில் சந்தேகங்களை கேட்டு பதிவு செய்தது எந்த ஒரு விக்கி விதிகளையும் மீறுவதாகாது. மேலும் இங்கு பேச்சு பக்கத்தில் நடக்கும் எந்த ஒரு விவாதத்திலும் நான் விதிகளை மீறி எதையும் பதிவிடவில்லை.
எந்த ஒரு பதிவு இட்டாலும் சம்பந்தமே இல்லாமல் மீண்டும் மீண்டும் எந்த ஒரு காரணமும் இன்றி தடை என பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திவிட்டு உபயோகமாய் எதாவது பதிவிடுவதாக இருந்தால் பதிவிடுங்கள், இல்லை என்றால் பதில் அளித்து என்னுடைய நேரம் தான் வீணாகிறது. எனவே இதை தவிர்க்குமாறு வேண்டுகிறேன். Magentic Manifestations (பேச்சு) 15:25, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.காரணம்: தேவைற்ற உரையாடல்.. AntanO (பேச்சு) 15:29, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

🙏🙏🙏🙏🙏 Magentic Manifestations (பேச்சு) 18:28, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

பொதுவான கருத்து[தொகு]

வணக்கம். 'ஒரு தலைப்பு உடனடியாக தீய விளைவுகளை ஏற்படுத்தாத நிலையில்... செய்யவேண்டிய மாற்றம் குறித்து உரையாடல் பக்கத்தில் உரையாடுவது நன்று' என்பது இங்கு எனது அனுபவம். இவ்வாறு செய்வதன் மூலமாக அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளலாம். நாம் இதுவரை பெற்ற அறிவின் அடிப்படையிலும், அனுபவங்களின் அடிப்படையிலும் மாற்றங்களை நாம் தீர்மானித்தாலும், சில நேரங்களில் சில முடிவுகள் தவறாக அமைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டிற்கு இங்கு பாருங்கள்: ஜெயப்பிரதா அல்லது ஜெயபிரதா எது சரி?. வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் / அனுபவம் / ஆர்வமுள்ளவர்கள் இங்கு பங்காற்றுவதால், உரிய காரணத்துடன் கூடிய நல்லதொரு முடிவினை நாம் எடுக்க இயலும். ஒரு இணக்கமான சூழலும் நிலவும். உங்களைப் போன்ற சுறுசுறுப்பாக செயல்படுபவர்களுக்கு இந்த அணுகுமுறை சற்று கடினமாக இருக்கலாம். ஒவ்வொரு விசயத்திற்கும் உரையாட வேண்டுமா எனத் தோன்றும். எனினும், உரையாடலை நிகழ்த்தி, காத்திருந்து மாற்றத்தைச் செயல்படுத்துதல்... தமிழ் விக்கிப்பீடியா போன்றதொரு தளத்தில் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவும் என உறுதியாக நம்புகிறேன். 12 ஆண்டுகள் இங்கு பங்களித்து வந்தாலும், 'முன்னேற்றம் தொடர்பான மாற்றங்களை' குறைந்தது இருவரின் ஒப்புதல் பெற்ற பிறகே செய்கிறேன். உதாரணங்கள்: பரிந்துரை, பரிந்துரைகள் தேவை - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:30, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறுவதை நான் ஒப்பு கொள்கிறேன். நான் தெரியாத ஒன்றை கேட்டு தெரிந்து கொள்வதில் அல்லது சந்தேகளுக்கு பயனர்களின் கருத்தை கேட்பது போன்றவற்றை செய்கிறேன்.
ஆனால் எல்லா மாற்றங்களுக்கும் நிர்வாகிகளின் கூற்றை கேட்பது தேவையற்றது, அது விதிகளிலும் இல்லை. WP:BOLD கூற்றின் படி, சிலவற்றை தைரியமாக செய்ய விக்கிப்பீடியா பரிந்துரைக்கிறது, அதில் பிரச்சனைகள் இருந்தால் கருத்து கூறலாம். மேலும் பிரச்சனை இல்லாதவற்றில் கருத்துக்கள் கேட்பது பொதுவாக நேரத்தை வீணடிக்கும் செயலாகும் ஏனென்றால் இதற்கு எல்லையே இல்லை. போகும் போக்கை பார்த்தால் இங்கு ஒவ்வொரு மாற்றத்துக்கும் (Edit) நிர்வாகிகளின் ஒப்புதல் தேவை என்பது போல் உள்ளது.
மேலும் எடுத்துக்காட்டாக சில கருத்துக்கள் கேட்டால், சில பேரிடமிருந்து சம்பந்தப்படாதது, அது, இது என எப்பொழுதும் உபயோகமில்லாத நேரத்தை கடத்தும் பதில்கள் தான் வருகிறது.
இவையனைத்தையும் பார்க்கும் போது இங்கே பங்களிப்பதில் பெறும் சிரமம் ஏற்படுகின்றது. எதை செய்வதென்றே தெரியவில்லை.
பேச்சு பக்கத்தில் உரையாடல் நல்ல எண்ணத்துடன், முன்னேற்றம் தரும் வகையில் இருக்க வேண்டும் என்பதை ஆமோதிக்கிறேன். தங்களின் கூற்றுக்கு மற்றும் உதவிகளுக்கு மிக்க நன்றி! Magentic Manifestations (பேச்சு) 07:43, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஒரு தெளிவுபடுத்துதல்... 'நிர்வாகிகளை கேட்கவேண்டும்' என நான் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிட்ட வகைக் கட்டுரைகளில் தலைப்பில் மாற்றம் செய்யப்படவேண்டும் எனில், ஏதேனும் ஒரு கட்டுரையின் உரையாடல் பக்கத்தில்... உங்களின் பரிந்துரையை முன் வைக்கலாம். பரிந்துரைக்கு மாற்றுக் கருத்து ஏதும் வரவில்லையெனில், ஓரிரு நாட்களுக்குப் பிறகு அந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி விடலாம். இவ்வாறே நான் குறிப்பிட்டேன். பொதுவாக, நிர்வாகிகள் அனைத்து உரையாடல் பக்கங்களையும் கவனிப்பதால், அவர்கள் தமது கருத்துக்களை பெரும்பாலும் இடுகிறார்கள். எனினும் மற்ற தொடர்பங்களிப்பாளர்களும் தமது கருத்துக்களை உரையாடல் பக்கங்களில் இடுகிறார்கள். ஜெயப்பிரதா அல்லது ஜெயபிரதா எது சரி? உரையாடலிலும், பரிந்துரைகள் தேவை உரையாடலிலும் நிர்வாகியாக இல்லாதோரும் தமது கருத்துக்களை இட்டுள்ளதைக் காணலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:22, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

அது எனக்கு புரிகிறது, நன்றி. ஆனால் நீங்கள் கூறிய படி சந்தேகங்களை கேட்டால் மேலே என்ன பதில் வருகிறது என்று நீங்களே பாருங்கள். கேட்காமல் செய்தால் பிழை, கேட்டால் சம்பந்தப்படாத வெட்டி அரட்டை என பதிவிடப்பகிறது. அப்படி இருக்க என்ன செய்வது. தமிழாக்கம் செய்யும் போது வரும் சந்தேகங்களை தானே எழுப்பியுள்ளென், அதில் தவறேதும் உள்ளது? Magentic Manifestations (பேச்சு) 11:18, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

என்னால் ஏற்பட்ட தேவையற்ற கூடுதல் உரையாடல்களுக்கு வருந்துகிறேன். ஒத்தாசைப் பக்கத்தில் பதில் தருவதற்கு முயற்சி செய்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:42, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா பேச்சு:ஒத்தாசைப் பக்கம் எனும் பக்கத்திலிருந்து விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் பக்கத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:48, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

தவறுக்கு மன்னிக்கவும்! இப்பொழுது சரியான பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். மேலும் தாங்கள் வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் நீங்கள் ஒரு நல்லெண்ணத்தில் கூறியதை நானும் பின்பற்ற விழைந்தேன், ஆனால் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை இங்கே அரங்கேறி இருக்கின்றன.
இது மற்ற பயனர்களுக்கும் உதவும் என்பதால் தான் போது வெளியில் இந்த உரையாடலை ஆரம்பித்தேன்.
சந்தேகங்களுக்கு பதில் கூற விளைவதற்கு மிக்க நன்றி! Magentic Manifestations (பேச்சு) 15:15, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Magentic_Manifestations&oldid=3932613" இலிருந்து மீள்விக்கப்பட்டது