உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய பாம்பன் பாலம்

ஆள்கூறுகள்: 9°16′57.25″N 79°12′5.91″E / 9.2825694°N 79.2016417°E / 9.2825694; 79.2016417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய பாம்பன் பாலம்
போக்குவரத்து தொடருந்து
இடம் ராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா
மொத்த நீளம் 2.07 கி.மீ.
கட்டுமானம் தொடங்கிய தேதி பிப்ரவரி 2020
திறப்பு நாள் 6 ஏப்ரல் 2025
அமைவு 9°16′57.25″N 79°12′5.91″E / 9.2825694°N 79.2016417°E / 9.2825694; 79.2016417

புதிய பாம்பன் பாலம் என்பது இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பில் உள்ள மண்டபம் நகரத்தை பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் உடன் இணைக்கும் புதிய இருவழி இருப்புப் பாதை பாலமாகும்.[1] இந்தப் புதிய பாலம் 1914 இல் திறக்கப்பட்ட பாம்பன் பாலத்திற்கு அருகில் கட்டப்பட்டது. 2.07 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய பாலம் ஏறத்தாழ 100 தூண்களைக் கொண்டுள்ளது.[2]

2019 ஆம் ஆண்டில், பழைய பாம்பன் பாலம் பாலத்தின் வயது மற்றும் பராமரிப்பில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கு இணையாக ஒரு புதிய பாலத்தை அமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. பாக்கு நீரிணையில் உள்ள பாம்பன் பாலம் அருகே 30 மீட்டர் தொலைவில் இப்புதிய இருவழி இருப்புப் பாதை அமைக்க 2019 நவம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்தப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். ₹540 கோடி மதிப்பீட்டில் உருவாகும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[3] கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் உயரமானது. பாலத்தின் நடுவில் உள்ள இரண்டு பதாகைகள் கப்பல்கள் எளிதில் கடந்து செல்ல ஏதுவாக தானியங்கி முறையில் தூக்கும் திறன் கொண்டவை.[4] இப்பாலத்தை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.[5]

வரலாறு

[தொகு]

புதிய பாம்பன் பாலத்திற்கான பணி 28 பிப்ரவரி 2020 (வெள்ளிக் கிழமை) அன்று துவக்கப்படது. ரூபாய் 250 கோடி மதிப்பில் நிறுவப்படும் இப்பாலம் 2.05 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இப்பாலம் கட்டுவதற்கு கடலில் 36 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு, 333 தூண்கள் நிறுவப்படவுள்ளது. இத்தூண்களை இணைக்க தடித்த 99 எஃகு பட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளத்தில் தூக்குப்பாலம் அமையவுள்ளது. அதனை மின்மோட்டார் மூலம் தானாகவே திறந்து மூடும் வகையில் அமைக்கப்படுகிறது. தூக்குப்பாலத்தில் கண்காணிப்பு ஒளிப்படமி உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு வசதிகளும் இடம் பெறும்.[6][7]

இக்கடல் இருப்புப் பாதை பாலம் அமைக்கும் பணியை இரயில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இரஞ்சித் கட்டுமான நிறுவனம் மேற்கொள்கிறது.[8] இரண்டு ஆண்டுகளில் இப்பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி முடியும் வரை பழைய பாம்பன் இருப்புப் பாதை பயன்பாட்டில் இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Pamban bridge, India's first vertical lift sea bridge, is 84% complete". Hindustan Times. 1 December 2022. https://www.hindustantimes.com/india-news/new-pamban-bridge-india-s-first-vertical-lift-sea-bridge-is-84-complete-see-pics-101669909623773.html. 
  2. "When Heritage Meets Technology: Take A Look At India's First Vertical Lift Rail Sea Bridge". India Times. 29 December 2022. https://www.indiatimes.com/trending/social-relevance/new-pamban-bridge-indias-first-vertical-lift-rail-sea-bridge-588873.html. 
  3. "New Pamban Bridge: What you need to know about India's first vertical lift sea bridge". Firstpost. 2 December 2022. https://www.firstpost.com/explainers/india-first-vertical-lift-sea-bridge-new-pamban-bridge-railways-ministry-11739641.html. 
  4. "New Pamban bridge work picks up momentum, expected to be over by March 2023". The Hindu. 4 December 2022. https://www.thehindu.com/news/cities/Madurai/new-pamban-bridge-work-picks-up-momentum-expected-to-be-over-by-march-2023/article66222775.ece. 
  5. "PM Modi Launches New Pamban Bridge, India's First Vertical-Lift Sea Bridge". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2025-04-06.
  6. பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் கட்டப்படும் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணி தொடங்கியது
  7. "பாம்பன் கடலில் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணி தொடங்கியது". Archived from the original on 2020-02-29. Retrieved 2020-02-29.
  8. RANJIT BUILDCON LIMITED

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பாம்பன்_பாலம்&oldid=4297588" இலிருந்து மீள்விக்கப்பட்டது