பாம்பன்-இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாம்பன் – இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மண்டபம் - இராமேசுவரம் தீவுவை இணைக்கும் புதிய இருவழி இருப்புப் பாதை பாலமாகும். பாக்கு நீரிணையில் உள்ள பாம்பன் பாலம் அருகே 30 மீட்டர் தொலைவில் நிறுவவுள்ள இப்புதிய இருவழி இருப்புப் பாதை அமைக்க 13 நவம்பர் 2019 அன்று பூமி பூஜை போடப்பட்டது.[1][2]

இதன் பணி 28 பிப்ரவரி 2020 (வெள்ளிக் கிழமை) அன்று துவக்கப்படது. ரூபாய் 250 கோடி மதிப்பில் நிறுவப்படும் இப்பாலம் 2.05 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இப்பாலம் கட்டுவதற்கு கடலில் 36 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு, 333 தூண்கள் நிறுவப்படவுள்ளது. இத்தூண்களை இணைக்க தடித்த 99 எஃகு பட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளத்தில் தூக்குப்பாலம் அமையவுள்ளது. அதனை மின்மோட்டார் மூலம் தானாகவே திறந்து மூடும் வகையில் அமைக்கப்படுகிறது. தூக்குப்பாலத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு வசதிகளும் இடம் பெறும்.[3][4]

இக்கடல் இருப்புப் பாதை பாலம் அமைக்கும் பணியை இரயில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இரஞ்சித் கட்டுமான நிறுவனம் மேற்கொள்கிறது.[5] இரண்டு ஆண்டுகளில் இப்பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி முடியும் வரை பழைய பாம்பன் இருப்புப் பாதை பயன்பாட்டில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. RVNL begins construction work of new Pamban rail bridge
  2. TN: Construction work of new Pamban Rail Bridge in full swing
  3. பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் கட்டப்படும் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணி தொடங்கியது
  4. "பாம்பன் கடலில் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணி தொடங்கியது". Archived from the original on 2020-02-29. பார்க்கப்பட்ட நாள் 2020-02-29.
  5. RANJIT BUILDCON LIMITED

வெளி இணைப்புகள்[தொகு]