பசி சத்யா
பசி சத்யா | |
---|---|
பிறப்பு | சத்யா |
பணி | திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1974-தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பசி வீடு மகளிர் மட்டும் அன்பே சிவம் |
தொலைக்காட்சி | சித்தி, அண்ணாமலை, செல்லமே, கனா காணும் காலங்கள், இளவரசி, மகாலட்சுமி |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | கலைமாமணி விருது |
பசி சத்யா (Pasi Sathya) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக பணியாற்றியுள்ளார். இவர் வீடு, மகளிர் மட்டும் (1994) போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1979 ஆம் ஆண்டில் தேசிய விருது பெற்ற தமிழ் படமான பசி படத்தில் சிறப்பாக அறியப்பட்டார். இப்படத்தில் இவர் செல்லம்மா என்ற பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு, இவர் பசி என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார். சத்யா நேற்று இன்று நாளையில் அறிமுகமானார். படம் 1974 இல் வெளியிடப்பட்டது. இவர் சினிமாவுக்கு வந்து 40 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இவர் 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 2000 மேடை நாடகங்களில் நடித்துள்ளார். [1] [2]
ஆரம்ப கால வாழ்க்கையில்
[தொகு]சத்யாவின் சொந்த ஊர் மதுரை . இவரது தாயார் இசை ஆசிரியர், தந்தை, ஒன்றிய அரசு ஊழியர். இவரது நடிப்பு பயணம் பவளக்கொடி நாடகத்துடன் தொடங்கியது. இவர் பள்ளி நாட்களில் பல நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் சென்னைக்கு வந்து நாடகங்களில் கவனம் செலுத்தினார். இவரது 9 ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் முன்னிலையில் பல நாடகங்களில் நடித்துள்ளார். சத்யா 2,000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் தோன்றியுள்ளார். [3]
திரைப்பட வாழ்க்கை
[தொகு]இவரது நடிப்பை ரசித்த மூத்த நடிகை பானுமதி ராமகிருஷ்ணா இவருக்கு பசி சத்யா என்ற புனைபெயரை வழங்கினார். இவர் தமிழ் திரைப்படங்களில் ஒரு குணச்சித்திர நடிகையாக நடித்தார். ஒரு திறமையான கலைஞராக இருந்தபோதிலும், இவர் கவனிக்கப்படவில்லை. 1999 ஆம் ஆண்டு இசை காதல் நகைச்சுவைத் திரைப்படமான பூவெலாம் கேட்டுப்பரில் செவிலியராக நடித்தார். இவர் 2001 ஆம் ஆண்டு தமிழ் காதல் படமான ஷாஜகானில் ஒரு பாத்திரத்தில் நடித்தார். 2003 ஆம் ஆண்டில், கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்திலும் சத்யா நடித்தார். இவர் நடித்த பிற குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் பின்வறுமாறு வீரன் வேலுதம்பி (1987), வெள்ளையத் தேவன் (1990), பட்டத்து ராணி (1992), மகளிர் மட்டும் (1994), நிலா (1994), சிந்துநதிப் பூ (1994), திருமூர்த்தி (1995), எச்20 (2002 ), எங்கள் அண்ணா (2004), சுக்ரன் (2005), காதலில் விழுந்தேன் (2008) போன்ற பல படங்களாகும். [4] [5] [6]
குடும்பம்
[தொகு]சத்யாவின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், இந்த இணையருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். [7]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது விருதை வழங்கியுள்ளது. தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் இவருக்கு "கவிச்செல்வம்" விருதை வழங்கியது. [8]
தொலைக்காட்சி வாழ்க்கை
[தொகு]தற்போது இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு தமிழ் சித்தியில் விஜய் சாரதியின் தாயாக நடித்தார். அதே ஆண்டு, ராதிகா சரத்குமாரின் தொடரான செல்லமேயில் மாயாவாக நடிதார். 2002 ஆம் ஆண்டில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடரான அண்ணாமலையில் நடித்ததற்காக இவர் பாராட்டுக்களைப் பெற்றார். சன் தொலைக்காட்சியில் இளவரசியிலும் இவர் ஒரு பாத்திரத்தில் நடித்தார்.
திரைப்படவியல்
[தொகு]இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Exclusive biography of #PasiSathya(supportingActress) and on her life". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
- ↑ "Kollywood Movie Actress Pasi Sathya Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
- ↑ https://web.archive.org/web/20050216092441/http://www.cinesouth.com/specials/interviews/pasisathya1.shtml
- ↑ "``மாலையில் வெற்றி விழா... மதியம் ஷோபாவின் மரணச்செய்தி இடியா ஒலிச்சுது!" `பசி' சத்யா". vikatan. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
- ↑ Jayachitra (6 November 2015). "ஹார்ட் அட்டாக்... 'பசி' சத்யா மருத்துவமனையில் அனுமதி". oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
- ↑ "கமல், ரஜினி இணைந்து செயல்பட வேண்டும்: நடிகை பசி சத்யா". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
- ↑ "" Pasi " Sathya". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 4 October 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
- ↑ Dinamalar (6 November 2015). "பசி சத்யாவுக்கு தீடீர் மாரடைப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி | Pasi Sathya hospitalised". Dinamalar Cinema. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.