உள்ளடக்கத்துக்குச் செல்

வைகறை பூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைகறை பூக்கள்
இயக்கம்இ. மு. வெற்றிவேலன்
தயாரிப்புஎம். செங்கோல்
கே. பாலாஜி
ஆர். கிருஷ்ணமூர்த்தி
டி. குமார்
எஸ். சலீத் சௌரி
கதைஇ. மு. வெற்றிவேலன்
இசைதேவேந்திரன் (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுடி. மகிபாலன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்நவசித்திரா சினி ஆர்ட்ஸ்
வெளியீடுதிசம்பர் 30, 1996 (1996-12-30)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வைகறை பூக்கள் (Vaikarai Pookkal) என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். இ. மு. வெற்றிவேலன் இயக்கிய இப்படத்தில் ராஜா, ராஜஸ்ரீ, பொன்வண்ணன், புதுமுகம் அன்னம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சண்முகசுந்தரம், சாமிகண்ணு, ஏ. கே. வீரசாமி, கரண், தாரினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவேந்திரன் இசை அமைத்தார். 1996 திசம்பர் 30 அன்று இப்படம் வெளியானது.[1][2][3]

கதை

[தொகு]

பல ஆண்டுகளுக்கு முன்பு, ராசராசன்பட்டி கிராமத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நல்லதம்பி (பொன்வண்ணன்) பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த மாரி (தாரினி) என்பவரை காதலித்தார். கிராமத் தலைவரான அவளது சகோதரர் வெள்ளைச்சாமி கௌண்டர் ( சண்முகசுந்தரம் ) அவர்களின் காதலுக்கு எதிராக நிற்கிறார். ஏழையாக உள்ள நல்லதம்பியை அவமானப்படுத்துகிறார். அதன்பிறகு, நல்லதம்பி ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை மணக்கிறார், சாதி முறையை கண்டிப்பாக பின்பற்றிய வெள்ளைச்சாமி கவுண்டர் அவர்களை தங்கள் கிராமத்திற்கு வெளியேற்றுகிறார். பின்னர் அவரது மனைவி (வரலட்சுமி) பிரசவத்தின்போது இறந்துவிடுகிறாள்.

தற்போது வரை, நல்லதம்பியின் மகன் சூரி (பொன்வண்ணன்) கொல்லி மலையில் சந்தன மரக் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவனாக உள்ளான். தெய்வானை ( ராஜஸ்ரீ ), தமயந்தி (அன்னம்) ஆகிய சகோதரிகள் வெள்ளைச்சாமியின் உறவினர்களாவர். சூரி தனது குழந்தை பருவ காதலியான தமயந்தியைக் காதலிக்கிறான். அதேசமயம் தெய்வானை கிராம மருத்துவரான ராஜாவும் ( ராஜா ) ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். இதற்கிடையில், நகரத்தில் படித்த வெள்ளைச்சாமி கௌண்டரின் மகன் சங்கர் ( கரண் ) தனது சொந்த கிராமத்திற்குத்துக்கு வருகிறான். அப்போது அவன் மனநலம் பாதிக்கப்பட்ட கிராமப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறான்.

ராஜாவும், தெய்வானையும் இறுதியில் வெள்ளைச்சாமி கௌண்டரிடம் தங்கள் காதல் விவகாரத்தை சொல்லுகிறார்கள். ராஜாவின் சாதியைப் பற்றி அவர் கேட்கும்போது, ராஜா அவரிடம் அதை சொல்ல மறுக்கிறான். எனவே, வெள்ளைச்சாமி கவுண்டர் அவர்களின் திருமணத்துக்கு மறுப்பு சொல்கிறார். பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவன் (ராஜ்காந்த்) தெய்வானையை திருமணம் செய்து கொள்கிறான். திருமணத்திற்குப் பிறகு மணமகன் கைது செய்யப்படுகிறான். இந்த மோசடிக்கு பின்னால் சங்கர் இருக்கிறான். இப்போது அவன் அவளது சகோதரி தமயந்தியை திருமணம் செய்ய விரும்புகிறான். அதன்பிறகு, வெள்ளைச்சாமி கௌண்டர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தத தனது மகன் சங்கரை ஏற்க மறுத்து, அவனால் பாதிக்கப்பட்டவளை கவனித்துக் கொள்ள முடிவு செய்கிறார். சாதிப்பற்றோடு இருப்பது முட்டாள்தனம் என்பதை வெள்ளைச்சாமி இறுதியாக புரிந்துகொள்கிறார். ராஜாவும் தெய்வானையும் மீண்டும் காதலிப்பதும், சூரியின் உண்மையான காதலை தமயந்தி ஏற்றுக்கொள்வதுடன படம் முடிகிறது.

நடிகர்கள்

[தொகு]
 • ராஜா ராஜாவாக
 • ராஜஸ்ரீ தெய்வானையாக
 • பொன்வண்ணன் நல்லதம்பி மற்றும் சூரியாக
 • அன்னம் தமயந்தியாக
 • சண்முகசுந்தரம் (நடிகர்) வெள்ளைச்சாமி கவுண்டராக
 • சாமிகண்ணு கிராமத்தானாக
 • ஏ. கே. வீராசாமி சூரியின் வளர்ப்புத் தந்தையாக
 • கரண் சங்கராக
 • தாரினி மாரியாக
 • எஸ். சலேத் சௌரி
 • முரளி கிருஷ்ணா
 • யுவன் ஸ்வாங் சங்கரின் நண்பனாக
 • ஆர்த்தி ராசியாக
 • ரெஜினா நிலாவாக
 • ராஜ்காந்த் மணமகனாக
 • பசி சத்யா சூரியின் வளர்புத் தாயாக
 • வரலட்சுமி வெள்ளைச்சாமி கௌண்டரின் மனைவியாக

இசை

[தொகு]

திரைபபடத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசையை இசையமைப்பாளர் தேவேந்திரன் மேற்கொண்டார். 1996 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவு 6 பாடல்கள் இருந்தன.[4][5]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் இ. மு. வெற்றிவேலன். 

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "உயிர் வாழ்கிறேன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:19
2. "மன்னனே எந்தன்"  மனோ, அனுராதா ஸ்ரீராம் 4:29
3. "தேச் சிந்தும்"  எஸ். ஜானகி 2:54
4. "அந்த நிலவுக்கு மச்சம் இருக்க"  மால்குடி சுபா 4:53
5. "உயிர் வாழ்கிறேன்"  சித்ரா 4:13
6. "ஒத்தையா ரெட்டையா"  கங்கை அமரன் 4:29
மொத்த நீளம்:
25:17

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Vaigarai Pookkal (1996)". gomolo.com. Archived from the original on 10 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
 2. "Find Tamil Movie Vaikarai Pookkal". jointscene.com. Archived from the original on 20 March 2011. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
 3. "Filmography of vaikara pookkal". cinesouth.com. Archived from the original on 17 November 2004. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
 4. "Vaikarai Pookkal Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
 5. "Vaikarai Pookkal". jiosaavn.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகறை_பூக்கள்&oldid=4045237" இலிருந்து மீள்விக்கப்பட்டது