மூன்றாவது கண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாவது கண்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎம். ராஜரத்தினம்
கதைமணிவண்ணன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். சங்கர்
படத்தொகுப்புபி. வெங்கடெஷ்வர ராவ்
கலையகம்ஜி. டி. என். ஆர்ட் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 18, 1993 (1993-09-18)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மூன்றாவது கண்(Moonravathu Kann) 1993 தமிழ் மொழியில் வெளிவந்த திகில்த் திரைப்படமாகும் . இதன் இயக்கம் மணிவண்ணன். இப்படத்தில் சரத்குமார், நிழல்கள் ரவி, ராஜா மற்றும் மோனிஷா ஆகியோர் நடித்திருந்தனர். தயாரிப்பு எம். ராஜரத்தினம் இசை தேவா 1993 செப்டம்பர் 18 அன்று வெளியானது.[1][2] இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியில் "சீக்ரட்ஸ் கில்லர்ஸ்" என்ற பெயரில் வெளியானது.[3]

கதை[தொகு]

பிரியா (மோனிஷா) ஒரு பெரிய செல்வந்தர், அவள் ஏழையான சுந்தரை (ராஜா) காதலிகிறாள். பிரியா சுந்தருடன் ஓடிப்போகும் முயற்சியில் தோல்வியடைகிறாள் .அவளது பெற்றோர் (வினு சக்ரவர்த்தி மற்றும் ஸ்ரீவித்யா) ஒரு அறையில் வைத்து பூட்டி விடுகின்றனர். அந்த இரவில் எதிர் வீட்டிலிருக்கும் சபாபதி (நிழல்கள் ரவி) தனது மனைவி சாந்தியை(யுவஸ்ரீ) கொலை செய்வதை பிரியா புகைப்படம் எடுக்கிறாள், இதை சபாபதி பார்த்துவிடுகிறான் ,பிரியா சப்தமிடுகிறாள். அவளது பெற்றோர் அவள் அறையில் பூட்டப்பட்டிருப்பதால் கத்திக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்து, அவளது பெற்றோர்கள் அவளை புறக்கணிக்கிறார்கள்

அடுத்த நாள், சாந்தி மரணத்திற்கு அனைத்து நண்பர்களும் உறவினர்களும் வருகிறார்கள். சாந்தியின் பெற்றோர்கள் வந்து அவளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சபாபதியிடன் கேட்கிறார்கள். அவன் சாந்திக்கு மார்பு வலி வந்தது, மருத்துவர் வரவழைக்கப்படுவதற்கு முன்பு இறந்து விட்டார் என பொய் கூறுகிறான். கோபி (கணேஷ்கர்), சாந்தியின் சகோதரர், அவருக்கு சபாபதி நீண்ட காலமாக அவரது சகோதரியை துன்புறுத்தி வந்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது பொது இடத்தில் மிகவும் அன்பானவனாகவும், வீட்டினுள் மிக மோசமாகவும் நடந்து கொள்வதாக ஏற்கனவே சாந்தி தனது சகோதரனிடம் கூறியிருக்கிறாள். இதை நினைவில் கொண்டு, சபாபதி தன் சகோதரியை கொன்றுவிட்டார் என முடிவிற்கு வந்து நேர்மையான காவல் அதிகாரியான சரத்(சரத்குமாரிடம்) புகார் அளிக்கிறார். சரத் கொலையை கண்டுபிடித்து சபாபதியை தண்டிக்கிறாரா என்பதும் பிரியா தனது காதலில் வெற்றி பெற்றாரா என்பதும் மீதிக் கதை சொல்கிறது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இசையமைப்பு தேவா. ஒலிப்பதிவு 1993 இல் வெளியானது, இதன் இரண்டு பாடல்களை காளிதாசன் எழுதியிருந்தார்.

பாடல் வரிசை
# பாடல்பாடியோர் நீளம்
1. "என்ன அன்னைக்கி"  மலேசியா வாசுதேவன், சுனந்தா 3:44
2. "கண்ணே நீ வருவாய்"  மலேசியா வாசுதேவன், மால்குடி சுபா 4:01
மொத்த நீளம்:
7:45

வரவேற்பு[தொகு]

இப்படம் வெற்றிகரமாக ஓடியது

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாவது_கண்&oldid=3833097" இருந்து மீள்விக்கப்பட்டது