இளவரசி (தொலைக்காட்சித் தொடர்)
இளவரசி | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
இயக்கம் | என்.சந்தானம் (1-150) ஓ.என்.ரத்னம் (150-500) எம். கே. அருந்தவ ராஜா (500-1200) சுலைமான் கே.பாபு (1200-1263) |
நடிப்பு | சந்தோஷி ஸ்ரீகர் ரச்சித்தா மகாலட்சுமி சுபலேகா சுதாகர் அனுராதா கிருஷ்ணமூர்த்தி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 1263 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ராதிகா சரத்குமார் |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | ராடான் மீடியாவொர்க்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 19 சனவரி 2010 1 நவம்பர் 2014 | –
Chronology | |
முன்னர் | செந்துரபூவே |
பின்னர் | தாமரை |
இளவரசி என்பது சன் தொலைக்காட்சியில் சனவரி 19, 2010 முதல் நவம்பர் 1, 2014 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி, 1263 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1]
இந்த தொடரை ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் என்பவர் தயாரிக்க, சந்தோஷி, ஸ்ரீகர், ரச்சித்தா மகாலட்சுமி, சுபலேகா சுதாகர், அனுராதா கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
கதை சுருக்கம்
[தொகு]ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்த்த இளவரசி (சந்தோஷி) என்ற இளம் பெண் அவளது கடின உழைப்பின் மூலம் எதிர்பாராத பலதடைகளையும் தாண்டி தனது குடும்பத்தையும் மற்றும் தனது திருமண வழக்கையும் பல சவால்களுக்கு மத்தியில் எப்படி பயணித்தாள் என்பது தான் கதை.
நடிகர்கள்
[தொகு]முதன்மை கதாபாத்திரம்
[தொகு]- சந்தோஷி - இளவரசி
- மனுஷ் மன்மோகன் → ஸ்ரீகர் - சுப்ரமணி
- ரச்சித்தா மகாலட்சுமி - மகாலட்சுமி
துணை கதாபாத்திரம்
[தொகு]- யோகினி → கீர்த்தனா - நந்தினி
- சாய் பிரசாந்த் - ரோஷன்
- வசந்த் கோபிநாத் - சண்முகம்
- அர்ச்சனா - பூஜா / நர்மதா
- ராஜஸ்ரீ - ஜெயந்தி
- வெற்றி வேலன் - ஷாம்
- கிருத்திகா லட்டு - ஈஸ்வரி
- ஸ்வப்னா - அனாமிகா
- அகிலா - கயல்விழி
- அருண் குமார் ராஜன் - சுவரூபன்
- நித்தியா ரவீந்திரன் - சியாமளா
- ரேவதிபிரியா
- அனுராதா கிருஷ்ணமூர்த்தி - தமிழரசி
- மது மோகன் - சந்திரமோகன்
- சுபலேக சுதாகர் - மோகன் சர்மா
- விக்கி கிரிஷ்
தயாரிப்பு
[தொகு]இந்த தொடர் ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் என்பவர் தயாரித்தார். இந்த தொடருக்கு முதலில் புருஷ லட்சணம் என்று பெயரிடப்பட்டு சுசி பாலா மற்றும் மனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு முதன்மை புகைப்படமும் எடுக்கப்பட்டது. பின்னர் சில பிரச்சனை காரணமாக தொடரின் பெயர் இளவரசி என்று பெயர் மாற்றம் பெற்று நடிகை சந்தோஷி என்பவர் கதாநாயகியாக நடித்தார்.
மொழி மாற்றம்
[தொகு]இந்த தொடர் தெலுங்கு யில் 'ஈஸ்வரி' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 12 ஜூலை 2013 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது.
மொழி | அலைவரிசை | தலைப்பு | அத்தியாயங்கள் |
---|---|---|---|
தெலுங்கு | ஜெமினி தொலைக்காட்சி | ஈஸ்வரி | 79 |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
[தொகு]ஆண்டு | விருது | பிரிவு | பெற்றவர் | கதாபாத்திரம் | முடிவு |
---|---|---|---|---|---|
2014 | சன் குடும்பம் விருதுகள் | சிறந்த துணை நடிகை | அனுராதா கிருஷ்ணமூர்த்தி | தமிழரசி | வெற்றி |
சிறந்த மருமகன் | அருண் குமார் | பரிந்துரை | |||
சிறந்த சகோதரன் | வசந்த் | சண்முகம் | பரிந்துரை | ||
சிறந்த மாமியார் | பத்மினி | பார்வதி | பரிந்துரை |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் ராடான் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மூலமாகவும் பார்க்க முடியும்.
- இந்த தொடர் இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியிலும் மற்றும் லண்டனில் உள்ள ஐபிசி தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "a turning point arrives elavarasi serial". tamil.filmibeat.com.
வெளி இணைப்புகள்
[தொகு]சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 1:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | இளவரசி | அடுத்த நிகழ்ச்சி |
செந்துரபூவே | தாமரை |
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்