இன்னொருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்னொருவன்
இயக்கம்எஸ். டி. குணசேகரன்
தயாரிப்புஎஸ். பி. சந்திரசேகர்
கிருஷ்ணவேணி சந்திரசேகர்
கதைஎஸ். டி. குணசேகரன்
இசைஆதிஷ் உதயன்
நடிப்புஆதித்யா
மனோகா
ஒளிப்பதிவுஜி. கனகராஜ்
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
கலையகம்அக்சயா மல்டிமீடியா கிரியேசன்ஸ்
வெளியீடுமார்ச்சு 6, 2009 (2009-03-06)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இன்னொருவன் (Innoruvan) என்பது 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை நாடக திரைப்படம் ஆகும். எஸ். டி. குணசேகரன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் ஆதித்யா, மனோகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் விசு, மணிவண்ணன், எம். எஸ். பாஸ்கர், தண்டபாணி, ஆர். அரவிந்தராஜ், பசி சத்யா, வின்சென்ட் ராய், பி. ஆர். வரலட்சுமி, கிரேன் மனோகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆதிஷ் உதயன் இசை அமைத்துள்ளார். படமானது 2009 மார்ச் 6 அன்று வெளியானது.[1]

கதை[தொகு]

சிவா (ஆதித்யா) என்பவன் ஒரு குபை பொறுக்கும் வேலை செய்வன். அவன் வாலி ( எம். எஸ். பாஸ்கர் ) என்பவரிடம் பணிபுரிகிறான். இவன் தனது விதவை தாயுடன் ( பசி சத்யா ) வசித்து வருகிறான். நீதிபதி ( விசு ) ஒருவர் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகள் மற்றும் தத்துவங்களைப் பற்றி சொற்பொழிவு செய்வதை கேட்கும் சிவா அதிலிருந்து ஊக்கத்தைப் பெறுகிறான். அப்போதிருந்து அவனது வாழ்க்கை மாறுகிறது. சிவா ஒரு மூடிய காகித ஆலையை வாங்க கனவு காண்கிறான். அவன் தனது கனவை நனவாக்க கடினமாக உழைக்க முடிவு செய்கிறான். இதற்கிடையில், பேராசை கொண்ட அரசியல்வாதியான சதாசிவத்தின் ( மணிவண்ணன் ) மகள் கல்லூரி மாணவி கவினயாவை ( மனோகா ) சிவா காதலிக்கிறான். சிவா அவளை கவரும் முயற்சியில் ஈடுபடுகிறான். அது கவினயாவை கோபப்படுத்துகிறது. எனவே, அவளும் அவளுடைய தந்தையும் சிவாமீது புகார் அளித்து அவனை கைது செய்கிறார்கள். காவல்துறையினர் அவனை கொடூரமாக தாக்குகிறார்கள். அதன்பிறகு, கவினயா சிவாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இறுதியில் அவனது உண்மையான காதலை ஏற்றுக்கொள்கிறாள். சதாசிவம் உள்ளூர் அமைச்சரையும் சிலை கடத்தல்காரன் அரங்கநாயகத்தையும் ( தண்டபாணி ) ஏமாற்றுகிறார். அவர் ஏமாற்றி ஈட்டிய 1000 கோடி ரூபாயுடன் தப்பிக்கிறார். அரங்கநாயகத்தின் அடியாட்கள் பின்னர் கவினாயாவைக் கடத்த முயற்சிக்கிறார்கள், ஆனால் சிவா அவளை மீட்டு காப்பாற்றுகிறான். அதன்பிறகு, சிவா ஒரு நலம் விரும்பியின் உதவியுடன் வங்கிக் கடனைப் பெற்று. ஒரு காகித ஆலையை வாடகைக்கு எடுக்கிறான். ஊழல்வாதியான காவலர் (வின்சென்ட் ராய்) ஆதரவுடன், அரங்கநாயகம் மீண்டும் காவினாயாவைக் கடத்துகிறார். தனது காதலியைக் காப்பாற்ற, சிவா ஒரு பிரபலமான கோவிலில் உள்ள முருகன் சிலையைத் திருடி, அதை அரங்கநாயகத்தின் வீட்டில் மறைத்து வைக்கிறான். காவல்துறையினர் அரங்கநாயகத்தின் வீட்டிற்குள் தேடும் போது, அவர்கள் அங்கு பல சிலைகளைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்கிறார்கள். இதனால், கவினயா காப்பாற்றப்படுகிறாள். சிவா தனது கனவான காகித ஆலையை வாங்குவதுடன் படம் முடிகிறது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இயக்குனர் ஆர். அர்விந்துராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ். டி. குணசேகரன் இன்னோருவன் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தின் பணியானது 5 ஏப்ரல் 2008 அன்று சென்னை ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் தொடங்கப்பட்டது. புதுமுகங்கள் ஆதித்யா மற்றும் மனோகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மூத்த நடிகர்களான விசு, மணிவண்ணன், தண்டபாணி, எம். எஸ். பாஸ்கர், கிரேன் மனோகர் ஆகியோர் பிற வேடங்களில் நடித்தனர். ஜி. கனகராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஆதிஷ் உத்திரியன் இசை அமைத்தார். படத்தொகுப்பு பணியை ஆர். டி. அண்ணாதுரை மேற்கொண்டார். படத்தில் நடிகர் எம். எஸ். பாஸ்கர் ஒரு கானா பாடலைப் பாடினார். படத்தின் படப்பிடிபுகளானது பாண்டிச்சேரி, குற்றாலம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.[2][3][4][5]

இசை[தொகு]

திரைப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடலுக்கான இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ஆதிஷ் உத்திரியன் மேற்கொண்டார். 2009 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் பாடல் பதிவில் ஐந்து பாடல்கள் இருந்தன. பாடல் வரிகளை எஸ். பி. சந்திரசேகர், காதல்மதி, எஸ். டி. குணசேகரன் ஆகியோர் எழுதியள்ளனர்.

எண் பாடல் காலம்
1 "காதல் தேசத்திலே" 4:45
2 "வெள்ளரிக்காயே வந்து தாகம் தீரடி" 3:43
3 "நீரலையே தண்ணீரலையே" 4:08
4 "சிவ சிவ சிவ" 3:57
5 "என் காதலியைக் கண்டால்" 4:59

வெளியீடு[தொகு]

இந்த படம் 6 மே 2009 அன்று மூன்று படங்களுடன் போட்டியிட்டும் விதமாக வெளியிடப்பட்டது.

வணிகம்[தொகு]

இந்த படம் சென்னை மண்டலத்தில் சராசரிக்கு சற்று குறைந்த வசூலை ஈட்டியது.[6][7]

குறிப்புகள்[தொகு]

  1. "Jointscene : Tamil Movie Innoruvan". jointscene.com. Archived from the original on 2 February 2010. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  2. "Innoruvan with debutants". kollywoodtoday.net. 19 October 2008. Archived from the original on 16 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "April 5 - Innoruvan movie was launched". southdreamz.com. 7 April 2008. Archived from the original on 8 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Innoruvan Movie Preview". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  5. "A film with newcomers". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 October 2008. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  6. "Innoruvan - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com. 9 March 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  7. "Innoruvan - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com. 16 March 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னொருவன்&oldid=3742283" இலிருந்து மீள்விக்கப்பட்டது