திருமதி தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமதி தமிழ்
இயக்கம்இராஜகுமாரன்
தயாரிப்புதேவயானி
திரைக்கதைஇராஜகுமாரன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புஇராஜகுமாரன்
தேவயானி
கீர்த்தி சாவ்லா
ஒளிப்பதிவுஇராம் சிங்
கலையகம்ரா தியா பிலிம்ஸ்
வெளியீடு13 ஏப்ரல் 2013 (2013-04-13)
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருமதி தமிழ் (Thirumathi Thamizh) என்பது 2013ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். ராஜகுமாரன் இயக்கி, நடித்த இந்த படத்தில் அவருடன் தேவயானி, கீர்த்தி சாவ்லா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, ரமேஷ் கண்ணா துணை வேடத்தில் நடித்தார். படம் 13 ஏப்ரல் 2013 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இந்த படத்தின் மூலமாக 2008 ஆம் ஆண்டில் இயக்குநர் ராஜகுமாரன் நடிகராக அறிமுகமானார். [1] இப்படத்தில் நடிக்க கீர்த்தி சாவ்லா பிப்ரவரி 2008 இல் ஒப்பந்தமானார். இப்படத்திலும் மகேஷ், சரண்யா மற்றும் பலர் (2008) படத்திலும் ஒரே நேரத்தில் அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். அதில் அவர் விருந்தினர் தோற்றத்தில் நடித்தார். [2] இந்த படம் தேவயானியின் 75 வது படம். [3] [4] மேலும் மூத்த நடிகர் மலேசியா வாசுதேவனின் கடைசி படமும் ஆகும். [5]

இசை[தொகு]

இப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார். இப்படத்தில் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றன. [4]

 • "தமிழ் தமிழ்" - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
 • "தமிழ் தமிழ்" (மறுகலவை 1) - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, எஸ். ஏ. ராஜ்குமார்
 • "தமிழ் தமிழ்" (மறுகலவை 2) - சித்ரா, எஸ். ஏ. ராஜ்குமார்
 • "திருக்குறள்" - எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஏ. ராஜ்குமார்
 • "நாயகன்" - கல்யாணி, விஜய் யேசுதாஸ், எஸ். ஏ. ராஜ்குமார்
 • "நாயகன்" (மறுகலவை 1) - கல்யாணி
 • "நாயகன்" (மறுகலவை 2) - எஸ். ஏ. ராஜ்குமார்
 • "வா வா வெண்ணிலவே" - சுவேதா மோகன், முகேஷ்
 • "வா வா வெண்நிலவே" (மறுகலவை) - சுவேதா மோகன்

வெளியீடு[தொகு]

டைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றைக் கொடுத்து, "இந்த திரைப்படம் விவாதிக்கத் தொடங்கிய சமூகப் பிரச்சினைகள் குறித்து இயக்குனர் கவனம் செலுத்தியிருந்தால், இந்த திரைப்படத்தை இன்னும் சிறப்பாக ரசித்திருக்க முடியும்" என்று எழுதியது. [6] குங்குமத்தைச் சேர்ந்த ஒரு விமர்சகர் திரைக்கதையை விமர்ச்சித்தார். [7]

குறிப்புகள்[தொகு]

 1. "'Thirumathi Thamizh' for Rajakumaran". South Indian Cinema Magazine. 4 September 2009.
 2. "Filmnewsrecords.blogspot.com: KEERTHI CHAWLA IN DUEL ROLE FOR THIRUMATHI THAMIZH". 16 February 2008.
 3. "Devayani's comeback in Thirumathi Thamizh". Times of India. 15 January 2017.
 4. 4.0 4.1 Kumar, S. R. Ashok (12 January 2013). "For the love of Thamizh". The Hindu.
 5. Kumar, S. R. Ashok (23 October 2010). "Grill Mill – Malaysia Vasudevan". The Hindu.
 6. "Thirumathi Tamil Movie Review {1/5}: Critic Review of Thirumathi Tamil by Times of India" – via timesofindia.indiatimes.com.
 7. "ஒருவர் மீது இருவர் சாய்ந்து : விமர்சனம் - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமதி_தமிழ்&oldid=3436672" இருந்து மீள்விக்கப்பட்டது