போண்டா மணி
போண்டா மணி | |
---|---|
பிறப்பு | கேதீஸ்வரன் 19 செப்டம்பர் 1963[1] மன்னார், வட மாகாணம், சிலோன் மேலாட்சி (தற்போது இலங்கை) |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991–நடப்பு |
போண்டாமணி (Bonda Mani) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.[2]
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து விட்டார்கள்.[3]
வாழ்க்கை வரலாறு[தொகு]
எம்.மாரிமுத்து செட்டியார் - மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963 இல் பிறந்தார். இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும்.[4] அங்கு மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை தொடங்கி நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நடிகனாகும் வாய்ப்பு உள்ளதென இலங்கையிலிருந்து அகதியாக இராமேசுவரம் வந்து நடிகரானார்.[5]
நடித்த திரைப்படங்களில் சில[தொகு]
- மணிக்குயில் (1993)
- பொன் விலங்கு (1993)
- முறை மாப்பிள்ளை (1995)
- கோயமுத்தூர் மாப்ளே (1996)
- வாழ்க ஜனநாயகம் (1996)
- அருவா வேலு (1996)
- பொங்கலோ பொங்கல் (1997)
- பாரதி கண்ணம்மா (1997)
- நேசம் புதுசு (1999)
- ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (2001)
- கார்மேகம் (2002)
- வின்னர் (2003)
- அன்பு (2003)
- அன்பே அன்பே (2003)
- வசீகரா (2003)
- கலாட்டா கணபதி (2003)
- ஏய் (2004)
- மானஸ்தன் (2004)
- ரிமோட் (2004)
- ஆயுதம் (2005)
- காற்றுள்ளவரை (2005)
- சச்சின் (2005)
- குருச்சேத்திரம் (2006)
- பச்சக் குதிர (2006)
- இலக்கணம் (2006)
- காசு இருக்கணும் (2007)
- மணிகண்டா (2007)
- பிறகு (2007)
- என்னைப் பார் யோகம் வரும் (2007)
- என் உயிரினும் மேலான (2007)
- இயக்கம் (2008)
- கி. மு (2008)
- சிரித்தால் ரசிப்பேன் (2009)
- ஆர்வம் (2010)
- பாடகசாலை (2010)
- வேலாயுதம் (2011)
- வாக்கப்பட்ட சீமை (2012)
- அஞ்சல் துறை (2013)
- திருமதி தமிழ் (2013)
- வாலிப ராஜா (2016)
- சண்டிக் குதிரை (2016)
- சொல்லிவிடவா (2018)
- பட்டு வண்ண ரோசாவாம்
தொலைக்காட்சித் தொடர்[தொகு]
- பூவே பூச்சூடவா (2017)
- எங்க வீட்டு மீனாட்சி (2022)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bondamani (a.ka) Kedhesvaran - Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". http://www.nadigarsangam.org/member/bondamani-a-ka-kedhesvaran/.
- ↑ http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=22092 ”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”
- ↑ மூக்கு பொடப்பா இருந்தா இப்படிதான்! - குமுதம் 23-2-2015 பக் 44
- ↑ http://geniusreporter.com/?p=2732 வாழ வைத்த தமிழகம் – நடிகர் போண்டா மணி வாழ்க்கை வரலாறு
- ↑ http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=10704 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் வடிவேலு - சிங்கமுத்து சமாதானம் : நடிகர் போண்டா மணி