இராஜகுமாரன் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜகுமாரன்
பிறப்புஅந்தியூர்,தமிழ்நாடு
பணிஇயக்குநர் (திரைப்படம்), நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999– தற்போது
வாழ்க்கைத்
துணை
தேவையானி (2001–தற்போது)

இராஜகுமாரன் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியை 2001ல் திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

நீ வருவாய் என என்ற திரைப்படத்தில் இயக்குனர் விக்ரமன் அவர்களின் துணை இயக்குனராக ராஜமாரன் பணியாற்றினார்.[1] சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது இராஜகுமாரனுக்கு கிடைத்தது.

திருத்தணி முருகன் கோயில் ஏப்ரல் 2001ல் தேவயானி மற்றும் இராஜகுமாரனுக்கு திருமணம் நடந்தது.[2] படபிடிப்பின் போது இருவரும் காதலித்தாக கூறப்பட்டது. இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற குழந்தைகள் உள்ளனர்.[3]

திரைப்படத்துறை[தொகு]

இயக்குனராக[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1999 நீ வருவாய் என இராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேவயானி, அஜித் குமார் சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
2001 விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம், தேவயானி, சரத்குமார்
2003 காதலுடன் முரளி, தேவயானி, அப்பாஸ் சிறந்த குடும்ப திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
2004 சிவராம் சாய்குமார், தேவயானி, ராமி ரெட்டி
2013 திருமதி தமிழ் இராஜகுமாரன், தேவயானி

நடிகராக[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1996 பூவே உனக்காக
1997 சூரிய வம்சம் பேருந்து பயணர்
2013 திருமதி தமிழ் தமிழ்
2014 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ராஜ்
2017 கடுகு பாண்டி

ஆதாரங்கள்[தொகு]

  1. "Nee Varuvaai Ena: Movie Review". Indolink.com. 17 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Telugu Cinema Etc". Idlebrain.com. 9 April 2001. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Devayani gives birth to second child – Tamil Movie News". Indiaglitz.com. 1 February 2008. 2 பிப்ரவரி 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.