மாமியார் வீடு (1993 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாமியார் வீடு
இயக்கம்எஸ்.கணேசராஜ்
தயாரிப்புடி.என்.ஜானகிராமன்
கதைஎஸ்.கணேசராஜ்
இசைஇளையராஜா
நடிப்புசரவணன்
செல்வா
சித்தாரா
நந்தினி
தலைவாசல் விஜய்
சிட்டி
பானு பிரகாஷ்
குலதெய்வம் ராஜகோபால்
வீரராகவன்
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜ்
படத்தொகுப்புஸ்ரீனிவாஸ் கிருஷ்ணா
வெளியீடு14 ஜனவரி 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாமியார் வீடு (Maamiyar Veedu) திரைப்படம் 1993-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எஸ். கணேசராஜ் எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில் சரவணன், செல்வா, சித்தாரா, நந்தினி, தலைவாசல் விஜய், சிட்டி, பானு பிரகாஷ், குலதெய்வம் ராஜகோபால், வீரராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.என்.ஜானகிராமன் தயாரிப்பில் 14 ஜனவரி 1993 அன்று வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா.[1][2]

நடிகர்கள்[தொகு]

கதைச்சுருக்கம்[தொகு]

அரவிந்தும் (சரவணன்) பார்த்தசாரதியும் (செல்வா) திருடர்கள். அவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவர்கள் இருவரும் சிறையில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். அவர்களின் விடுதலையின் பின்னர், அரவிந்திற்கு தங்குமிடம் இல்லாததால், பார்த்தசாரதியுடனே அவனது வீட்டில் தங்கிக்கொள்கிறான் அரவிந்த்.

இருவரும் திருட்டு தொழிலை தொடர்கிறார்கள். அவ்வாறாக ஒரு நாள், குப்புசாமி (குலதெய்வம் ராஜகோபால்) என்ற முதியவரிடமிருந்து பணத்தை திருடிவிடுகின்றனர். மறுநாள், அந்த தாத்தா மாரடைப்பால் இறந்துவிடுகிறார். குற்ற உணர்ச்சியால் , இறந்த குப்புசாமியின் குடும்பத்திற்கு உதிவிகள் செய்கிறான் அரவிந்த். நல்லவனாக மாற முயற்சிக்கிறான் அரவிந்த், ஆனால், சமூகம் திருடர்களை நல்லவர்களாக பார்க்காது என்று பார்த்தசாரதி எண்ணியதால், நல்லவனாக மாறுவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. இந்நிலையில், அரவிந்த் ஆனந்தவல்லி (சித்தாரா) என்ற பெண்ணை மணக்கிறான். குப்புசாமியின் பேத்தியை (நந்தினி) பார்த்தசாரதி விரும்புகிறான். அதேசமயம், கொண்டையா என்ற ரவுடியுடன் பார்த்தசாரதிக்கு மோதல் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்தசாரதியும் அரவிந்தும் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதே மீதி கதை.

இசை[தொகு]

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா ஆவார். வாலி இப்படத்தின் பாடல்களை எழுதினார்.[3][4]

வரிசை

எண்

பாடல் பாடியவர் நீளம்
1 என்னை தொடர்ந்து கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 5:00
2 மாமியார் வீடிருக்கு மலேசியா வாசுதேவன், அருண்மொழி 3:58
3 நல்ல சம்சாரம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:08
4 ஒரு ஜான் வைத்துக்கு மலேசியா வாசுதேவன் 4:40
5 தெரியாமல் மாட்டி மனோ, எஸ். என். சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி, சுனந்தா 5:06

மேற்கோள்கள்[தொகு]

  1. "spicyonion.com". http://spicyonion.com/movie/mamiyaar-veedu/. 
  2. "2005-02-10. Retrieved 2016-05-19" இம் மூலத்தில் இருந்து 2005-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050210050530/http://www.cinesouth.com/films/cast/newfilmdb/maamiyar%20veedu.html. 
  3. "mio.to" இம் மூலத்தில் இருந்து 2016-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160604200808/http://mio.to/album/Maamiyaar+Veedu+(1993). 
  4. "www.saavn.com" இம் மூலத்தில் இருந்து 2016-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160602205728/http://www.saavn.com/s/album/tamil/Maamiyaar-Veedu-1993/JUeN,iPGm1Y_.