நல்லவன்பாளையம்
நல்லவன்பாளையம் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 12°11′N 79°03′E / 12.18°N 79.05°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
அரசு | |
• தலைவர் | உமா ஏழுமலை |
பரப்பளவு | |
• மொத்தம் | 16.3 km2 (6.3 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 6,921 |
• அடர்த்தி | 420/km2 (1,100/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசிக் குறியாடு | 91-4175 |
வாகனப் பதிவு | TN 25 |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | திருவண்ணாமலை |
காலநிலை | மிதமான (கோப்பென்) |
சராசரி கோடை வெப்பநிலை | 41 °C (106 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 18 °C (64 °F) |
நல்லவன்பாளையம் (Nallavanpalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும்.[1] [2]. இது திருவண்ணாமலையிலிருந்து 4 கி. மீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள பெரிய நகரம் திருவண்ணாமலை ஆகும். நல்லவன்பாளையம் சென்னையிலிருந்து 189 கி. மீ., தொலைவில் உள்ளது.[3]
நல்லவன் பாளையத்திலிருந்து மேல்செட்டிப்பட்டு (2.2 கிமீ), விஸ்வந்தாங்கல் (2.9 கிமீ), மேல்காச்சிராப்பட்டு (3.5 கிமீ), மெய்யூர் (3.6 கிமீ), திருவண்ணாமலை (3.7 கிமீ), தொலைவில் ஆகிய நகரங்களும், கிராமங்களும் உள்ளன. அருகிலுள்ள நகரங்கள் திருவண்ணாமலை (4.1 கிமீ), தண்டராம்பட்டு (11.2 கிமீ), துரிஞ்சாபுரம் (21.9 கிமீ), கீழ்பென்னாத்தூர் (24.7 கிமீ) ஆகியவை ஆகும்
நல்லவன்பாளையத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 606603, 606 604, 605 606.
மக்கள் வகைப்பாடு
[தொகு]7000க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நல்லவன்பாளையம் திருவண்ணாமலை நகர்ப்புறத்தின் துணை நகரமாக உள்ளது. இது சேலம் திருவண்ணாமலை சாலையில் (அரூர், தண்ராம்பட்டு வழி) மாநில நெடுஞ்சாலை 9 சாலையில் உள்ளது. வரவிருக்கும் திருவண்ணாமலை-தண்டராம்பட்டு-செங்கம்-சிங்காரப்பேட்டை-ஊத்தங்கரை-சமல்பட்டி-பர்கூர்-வேப்பன்னஹள்ளி-பெங்களூர் (கே.ஆர்.புரம்) தொடருந்து பாதையில் "நல்லவன் பாளையம்" என ஒரு தொடருந்து நிலையம் விரைவில் வர உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நல்லவன்பாளையம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2014/Dec/16/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1032030.html. பார்த்த நாள்: 15 July 2024.
- ↑ "https://www.hindutamil.in/news/todays-paper/regional04/733852-.html". https://www.hindutamil.in/news/todays-paper/regional04/733852-.html. பார்த்த நாள்: 15 July 2024.
- ↑ "Nallavanpalayam Village".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)