உள்ளடக்கத்துக்குச் செல்

திருவெஞ்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவெஞ்சேரி (Thiruvencheri), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1][2] இது தாம்பரத்திற்கு தென்கிழக்கே 9.6 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மாதம்பாக்கம் 3 கி.மீ.; வெம்பாக்கம் 3 கி.மீ.; அகரம்தென் 3 கி.மீ.; செம்பாக்கம் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதியாக திருவெஞ்சேரி உள்ளது. சேலையூர் இதன் அருகில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 600 126 ஆகும். இது தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திருவஞ்சேரி புதிய குடியிருப்பில் சாலைகள் அமைக்க கோரிக்கை". Hindu Tamil Thisai. 2023-08-24. Retrieved 2025-08-14.
  2. 20 Revenue Villages of Tambaram Taluk
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவெஞ்சேரி&oldid=4326753" இலிருந்து மீள்விக்கப்பட்டது