ஆகத்து 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bcl:Agosto 25 |
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:25 أغسطس |
||
வரிசை 52: | வரிசை 52: | ||
[[af:25 Augustus]] |
[[af:25 Augustus]] |
||
[[an:25 d'agosto]] |
[[an:25 d'agosto]] |
||
[[ar:25 أغسطس]] |
[[ar:ملحق:25 أغسطس]] |
||
[[arz:25 اغسطس]] |
[[arz:25 اغسطس]] |
||
[[ast:25 d'agostu]] |
[[ast:25 d'agostu]] |
05:31, 11 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகஸ்டு 25 கிரிகோரியன் ஆண்டின் 237வது நாளாகும். நெட்டாண்டுகளில் 238வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 128 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1580 - ஸ்பெயின் அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் போர்த்துக்கலை வென்றது.
- 1609 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.
- 1732 - யாழ்ப்பாணத் தளபதியாக கோல்ட்டெரஸ் வூல்ட்டெரஸ் நியமிக்கப்பட்டான்.
- 1758 - பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக் மன்னன் சோண்டோர்ஃப் என்ற இடத்தில் ரஷ்ய இராணுவத்தைத் தோற்கடித்தான்.
- 1768 - ஜேம்ஸ் குக் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தான்.
- 1803 - யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
- 1825 - உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
- 1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.
- 1912 - சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1920 - போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13 இல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
- 1933 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.
- 1955 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.
- 1981 - வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
- 1989 - வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்றது.
- 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
- 2003 - மும்பாயில் இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- 2007 - கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
- 1906 - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (இ 1993)
- 1929 - எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
- 1962 - தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்
இறப்புகள்
- 1822 - வில்லியம் ஹேர்ச்செல், வானியலாளர் (பி. 1738)
- 1867 - மைக்கேல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791)
- 1908 - ஹென்றி பெக்கெரல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)
- 1976 - எல்விண்ட் ஜோன்சன், சுவீடன் நாட்டு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
- 2007 - தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி
- 2008 - தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)
- 2009 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)
சிறப்பு நாள்
- உருகுவே - விடுதலை நாள் (1825)
- பிலிப்பீன்ஸ் - தேசிய வீரர்கள் நாள்