விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 207: வரிசை 207:


ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை நீக்கினார்கள். தெளிவான காரணாம் தேவை
ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை நீக்கினார்கள். தெளிவான காரணாம் தேவை

== ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை ஒரு குறுப்பிட்ட நபர் நீக்கி கொண்டே இருகிறார். காரணம் எப்படி அறிவது. ==

ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை ஒரு குறுப்பிட்ட நபர் நீக்கி கொண்டே இருகிறார். காரணம் எப்படி அறிவது.

01:20, 18 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:HD
WP:HELP
எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "தலைப்பைச் சேர்" என்பதை அழுத்துங்கள். கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

« பழைய உரையாடல்கள்
தொகுப்பு
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |14

பக்க இணைப்பு வழு

ஏசு மத நிராகரணம் கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது [XDuNHQpAMEsAALe-4ngAAADR] 2019-01-13 19:10:21: Fatal exception of type MWException என்ற பிழைப்பக்கம் காட்டுகிறது. உதவவும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Parvathisri: எனக்கும் இதே வழு நேற்று வந்தது. @Neechalkaran: கவனிக்க.--Kanags (பேச்சு) 07:36, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Ravidreams:, @Shanmugamp7:, @AntanO:, @Kanags: கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது வரும் வழு கடந்த சில தினங்களாவே உள்ளது. சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?--நந்தகுமார் (பேச்சு) 05:06, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]
இன்று மெரினா (திரைப்படம்)கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது [XENN3QpAAEEAAAVz3OYAAACS] 2019-01-19 16:18:38: Fatal exception of type MWException என்ற பிழைப்பக்கம் காட்டுகிறது.--நந்தகுமார் (பேச்சு) 16:20, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Nan and Parvathisri: மேற்படி வழு இல்லாமல் இணைப்பதற்கு வேறு வழிகள் உள்ளன. சரியான கட்டுரைத் தலைப்பை நீக்கி விட்டு, பின்னர் அத்தலைப்புக்கு மற்றைய கட்டுரையை (மேம்பட்ட நிலையில்) வழிமாற்றி விட்டு, பின்னர் அதனை நீக்கிவிட்டு, மீண்டும் முழுமையான வரலாறுகளுடன் மீள்விக்கலாம். பார்க்க: சிதைமாற்றம்.--Kanags (பேச்சு) 22:06, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:25, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் இயேசு மத நிராகரணம் கட்டுரையை நீங்கள் சொன்னபடி மீளமைத்துள்ளேன. மிக்க நன்றி கனக்ஸ்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:27, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உதவி

ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து மொழியாக்கம் செய்து கட்டுரை உருவாக்கம் செய்யும் போது மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள் என்று ஒரு பகுப்பு தானாகவே சேர்ந்து விடுகிறது. இயந்திர மொழிபெயர்ப்பு செய்யாமல் இயல்பான மொழி பெயர்ப்பை மேற்கொள்ளும் போதும் இந்தப் பகுப்பு தானாகவே சேர்கிறது. காரணம் என்ன?--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:24, 20 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மகாலிங்கம் சார் வணக்கம். நானும் ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து மொழியாக்கம் செய்து கட்டுரை உருவாக்கம் செய்கிறேன். மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள் என்ற பகுப்பு எனக்கு வரவில்லை. நீங்கள் உள்ளடக்க மொழிபெயர்ப்பின் புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள். அதில்தான் சிக்கல் என நினைக்கிறேன். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 16:03, 20 சனவரி 2019 (UTC)[பதிலளி]

TNSE Mahalingam VNR எனக்கும் இந்த சிக்கல் உள்ளது. கி.மூர்த்தி குறிப்பிட்டது போல் உள்ளடக்க மொழிபெயர்ப்பின் புதிய பதிப்பை பயன்படுத்துவதாலேயே இது நேர்கிறது.--அருளரசன் (பேச்சு) 12:51, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பக்கம் நகர்த்தல் வேண்டுகோள்

நிர்வாகிகள் கவனத்திற்கு, பயனர்:Fathima rifaa இப்பக்கத்தைச் சரியான பயனர் பெயரான பயனர்:Fathima rifaa lawக்கு வழிமாற்றியின்றி நகர்த்தக் கோருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 12:06, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பயனர் பெயரை நிர்வாகிகள் மாற்ற இயலாது. பக்கத்தை நகர்த்த மட்டுமே இயலும். அதிகாரிகள் மட்டுமே மாற்ற இயலும் என நினைக்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:58, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]
பயனர் பெயரில்லை. பயனர்வெளியில் உள்ள ஒரு பக்கத்தை நகர்த்தக் கோருகிறேன். அந்தப்பயனர் தனக்குரிய பக்கத்தை உருவாக்காமல் வேறு பக்கத்தை உருவாக்கியுள்ளார். கவனிக்க @Mayooranathan, Natkeeran, Ravidreams, and Sundar: -நீச்சல்காரன் (பேச்சு) 14:42, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று. இரண்டு கணக்குகளும் அவருடையதாக இருக்கலாம். இருந்தாலும், உங்கள் வேண்டுகோளைச் செயற்படுத்தியுள்ளேன். --இரவி (பேச்சு) 14:48, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]
Fathima rifaa என்று ஒரு கணக்கில்லை என்பதாலேயே மாற்றக்கோரினேன். நன்றி-நீச்சல்காரன் (பேச்சு) 15:26, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]
அட, அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:35, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]



நிர்வாகிகள் கவனத்திற்கு, ஆரணி, திருவண்ணாமலை என்ற இப்பக்கத்தை சரியான பெயரான ஆரணி அல்லது ஆரணி(திருவண்ணாமலை மாவட்டம்) க்கு வழிமாற்றியின்றி நகர்த்த கோருகின்றேன்.

-Gunasekaran

மீளமைத்தலுக்கான உதவி

எறிபந்து என்ற கட்டுரையில் [1] இந்த மாற்றத்தினைக் காணுங்கள். ஒரு பயனரின் தீக்குறுப்பினால் நல்லக் கட்டுரை பாழ்பட்டுள்ளது. இதனை முந்தைய வடிவில் மீளமைக்க இயலவில்லை. "முரண்பாடான இடைப்பட்டத் தொகுப்புகள் காரணமாக இத்தொகுப்பை மீளமைக்க முடியாது" என செய்தி வருகிறது. நடவெடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.நன்றி-சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:57, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Kanags (பேச்சு) 04:59, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:24, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்புக் கருவி

@Ravidreams: விக்கியின் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி கட்டுரைகளை உருவாக்குவதற்கான வழிகாட்டல் பக்கம் தமிழ்விக்கியில் உள்ளதா? அவ்வாறு இருப்பின் அப்பக்கத்திற்கான இணைப்பைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:39, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Booradleyp1: பார்க்க - உதவி:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி. தற்போது இக்கருவியில் புதிய பதிப்பு வந்துள்ளது. எனவே, வழிகாட்டுதல்கள் சில இற்றைப்படுத்தப்பட வேண்டி இருக்கும். --இரவி (பேச்சு) 11:26, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஈ.வெ.ராமசாமி பற்றிய கட்டுரை: ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் விருது பற்றி

ஈ.வெ.ராமசாமி பற்றிய கட்டுரையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஈவேரா அவர்களுக்கு விருது வழங்கியதற்குச் சரியான ஆதாரம் எதுவும் கிடையாது. 1998 வரை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் விருது பெற்றவர்கள் பட்டியலை அந்த நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து கொடுத்துள்ளேன். அதில் ஈவேரா அவர்கள் பெயர் இல்லை. ஆகவே இந்தத் தகவல் நீக்கப்பட வேண்டும். https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000111158?fbclid=IwAR3ccSps4KjbY3tmnsHfv17yhUujZn9kJr27PFs0HRjj_QbQ_zBAJp-yHzk நான் இதைச் செய்தால் உங்கள் பதிப்பாசிரியர்கள் இதை அனுமதிப்பதில்லை.−முன்நிற்கும் கருத்து Jag2019 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பாராட்டு சான்றிதழ் தான் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது அல்ல. எனவே பாராட்டு சான்றிதழ் விவரங்களை எல்லாம் யுனெசுக்கோ வலைத்தளத்தில் சேர்க்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எனவே தகவல் சட்டத்தில் தரப்பட்டுள்ள தகவலை மட்டும் நீக்கலாம். கட்டுரையில் உள்ள தகவலை நீக்கத் தேவையில்லை. மேலதிக மேற்கோள்(கள்) கேட்கலாம்.--Kanags (பேச்சு) 22:13, 30 மார்ச் 2019 (UTC)

@Jag2019: நண்பருக்கு வணக்கம் //நான் இதைச் செய்தால் உங்கள் பதிப்பாசிரியர்கள் இதை அனுமதிப்பதில்லை.// விக்கிப்பீடியாவில் பதிப்பாசிரியர்கள் என யாரும் இல்லை. பெரியார் போன்ற ஆளுமைகள் பற்றிய கட்டுரையில் ஒரு தகவலை நீக்க விரும்பினால் அதற்கான காரணத்தை உரையாடல் பக்கத்தில் தெரிவித்து நீக்கினால் நலமாக இருக்கும். நீங்கள் நீக்கியதை நான் மீளமைத்த பிறகே நீங்கள் அந்த வலைத்தள சான்றினைக் கொடுத்துள்ளீர்கள். பொதுவாக அரசியல் தலைவர்கள் பற்றிய கட்டுரைகளில் இவ்வாறு சான்றுகள் இல்லாமல் சேர்க்கப்படும் தகவல்களை இயன்றவரை களைந்தும் சான்று தேவைஎன்ற வார்ப்புருவும் சேர்க்கப்பட்டுள்ளதை அறியவும். நன்றி ஸ்ரீ (talk) 14:35, 31 மார்ச் 2019 (UTC)

சில ஊராட்சி கட்டுரைகளில் திருத்தம் தேவை

இங்கு பட்டியலிடப்பட்டுள்ளக் கட்டுரைகளில் 200+ ஊராட்சி கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் இரண்டிற்கும் மேற்ப்பட்ட மாவட்ட வார்ப்புருக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவைத் திருத்தப்பட வேண்டும். --அஸ்வின் (பேச்சு) 16:13, 20 ஏப்ரல் 2019 (UTC)

பொதுவகத்தில் படங்கள் தேவை

தமிழில் சில கட்டுரைகள் எழுதும் போது அவற்றிற்கான ஒளிப்படங்கள் பொதுவகங்களில் காணப்படாமல் உள்ளது. உதாரணமாக, அபிநந்தன், கோமதி மாரிமுத்து போன்றோரின் படங்கள், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாகும் போது அவை தொடர்பான படங்கள் கிடைப்பதில்லை. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்களில் சில தமிழ் கட்டுரைகளில் பயன்படுத்துவது எளிதாக இல்லை. யாராவது இவற்றுக்கு உதவினால் பரவாயில்லை.--TNSE Mahalingam VNR (பேச்சு) 01:07, 25 ஏப்ரல் 2019 (UTC)

கோமதி மாரிமுத்து, அபிநந்தன் போன்றோரின் படங்களை எவ்வாறு பொதுவகத்தில் ஏற்றலாம்? இதற்கான உதவியை யாரிடம் கோரலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:50, 25 ஏப்ரல் 2019 (UTC)

Antan o ,balaji, Thilakshan போன்றவர்களிடம் கேட்டலாம். ஸ்ரீ (talk) 17:00, 25 ஏப்ரல் 2019 (UTC)
வாழும் நபர்களின் புகைப்படங்கள் கண்டிப்பாக கற்றற்ற உரிமங்களில் இருக்கவேண்டும். காப்புரிமை பெற்ற புகைப்படங்கள் உபயோகப்படுத்த முடியாது. ஆங்கில விக்கிப்பீடியாவில் புகைப்படங்கள் இருந்தால் அந்த புகைப்படத்தில் எந்த உரிமம் உள்ளது என்று பாருங்கள். அதே உரிமத்தைப் பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தலாம். காமன்சில் கற்றற்ற உரிமங்கள் மற்றும் சில பொதுகள உரிமங்கள் உள்ள புகைப்படங்களை மட்டுமே பதிவேற்ற முடியும். மேலும் விளக்கம் வேண்டும் என்றால் கேளுங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:42, 26 ஏப்ரல் 2019 (UTC)

பாலாஜி , இவ்வாறு ஊடகங்களில் அவர்களின் அப்போதைய சாதனைகளால் புகழின் உச்சிக்குச் செல்லும் ஆளுமைகளின் ஒளிப்படங்களை ஊடகத் துறைகளில் உள்ள நண்பர்களின் உதவியைப் பெற்றாவது விக்கி காமன்சுக்காக பதிவேற்றம் செய்ய ஒரு ஏற்பாடு செய்யலாமே?. இதே போல முனைய துணைக்கோள் ஏவுகலன்கள் பற்றிய படங்களையும் பொது நன்மைக்காக பயன்படும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பொதுவகத்தில் ஏற்ற ஏற்பாடுகள் செய்யலாமே? இன்னும் சில படங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளவை கூட தமிழ் விக்கியில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. உதாரணமாக, சில திரைப்பட சுவரொட்டிகள். என்ன செய்யலாம்?--TNSE Mahalingam VNR (பேச்சு) 05:15, 26 ஏப்ரல் 2019 (UTC)

@TNSE Mahalingam VNR: தங்கள் கோரிக்கைகளை இரண்டு விதமாக பிரிக்கிறேன்.
  • ஊடகத் துறையின்றோடு, அவர்களை அவர்களுது ஊடக கோப்புகளை பொது கள உரிமத்தில் காமன்சில் வெளியிட முனைவது.
முதல் கோரிக்கையை நாம் யாராவது முன்னெடுக்க வேண்டும். தாங்களே கூட முன்னெடுக்கலாம். ஆனால் அத்தனை எளிதள்ள. ஊடகவியலாளர்கள் பொதுகள உரிமத்தில் வெளியிடுவார்களா என்பது சந்தேகமே. அப்படி யாரேனும் முன் வந்தால் பாராட்டுக்குறியது.
  • மற்ற மொழி விக்கிகளில் உள்ள நியாயமான பயன்பாடு பட கோப்புகளை தமிழ் விக்கிப்பீடியாவில் கிடைக்கச் செய்வது.
இரண்டாவது கோரிக்கை எளிது. ஏற்கனவே ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள நியாயமான பயன்பாடு உள்ள படங்களை தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது தக்க உரிம செய்திகளை கொடுக்க வேண்டும். இதனை தானியக்கமாக செய்ய @Tshrinivasan: அவரிடன் ஒரு நிரல் எழுத கோரிக்கை வைத்துள்ளேன். அதன் விவரங்களை இங்கு காணலாம். தங்களுக்கு தெரிந்த நிரலாளர்கள் யாராவது இருந்தால் இந்நிரலை எழுத முன்வரு முடியுமா என்று கேட்டுப்பாருங்கள்.
  • //இதே போல முனைய துணைக்கோள் ஏவுகலன்கள் பற்றிய படங்களையும் பொது நன்மைக்காக பயன்படும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பொதுவகத்தில் ஏற்ற ஏற்பாடுகள் செய்யலாமே?//
துணைக்கோள் முதலிய படங்கள், இஸ்ரோவால் ஏற்கனவே Government Open Data License (GODL) என்னும் உரிமத்தில் வெளியிடுகின்றன. அந்தப் படங்கள் ஏற்கனவே காமன்சில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டு pslv c45 ஏப்ரல் 1, 2019 அன்று ஏவப்பட்டது. அதன் கோப்பு ஏற்கனவே காமன்சில் இங்கு உள்ளது. அங்கு சென்று அதன் உரிம விவரங்களை பாருங்கள்.

மேலும் ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:15, 26 ஏப்ரல் 2019 (UTC)

பாலாஜி , தங்களின் பதில்களுக்கு நன்றி. --TNSE Mahalingam VNR (பேச்சு) 08:36, 26 ஏப்ரல் 2019 (UTC)

சொற்களுக்கிடையேயான இடைவெளி

சில கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பொழுது இரண்டு சொற்களுக்கிடையே தேவைக்குமேல் இடைவெளி ஏற்படுகிறது. ஒவ்வொன்றாகச் சென்று திருத்தம் செய்தால் நேரவிரயம் ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் தானியக்கக் கருவிகள் உள்ளனவா? எப்படி சரி செய்வது? உதவி தேவை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:53, 16 மே 2019 (UTC)[பதிலளி]

இதுவரை அப்படித் தமிழுக்குக் கருவியில்லை சில உதாரண கட்டுரைகளைக் காட்டினால் அவ்வாறு கருவிகள் எதிர்காலத்தில் உருவாக்க மற்றவர்களுக்குப் பயன்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 08:38, 19 மே 2019 (UTC)[பதிலளி]
புதுப்பயனர் போட்டியில் மொழிபெயர்ப்பு மூலம்(content translation) உருவாக்கப்பட்ட கட்டுரைகள். பெரும்பான்மை நானே சரி செய்துவிட்டேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:11, 11 சூன் 2019 (UTC)[பதிலளி]

நாட்டுத் தகவல் வார்ப்புருக்களை சீர்திருத்த உதவி தேவை

இங்கு உள்ள நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள் விக்கித்தரவில் இணைக்கப்படவில்லை. என்னால் இயன்றவரை இணைத்துவிட்டேன். இவற்றை இணைக்க வேண்டும் இல்லையேல் இன்னொரு பயனர் புதிதாக ஒன்றை இயற்றலாம். மேலும் நாட்டுத் தகவல் வார்ப்புருக்களில் Country Data XXXX என்றவை தேவையற்றவை. கிட்டதட்ட 200 வார்ப்புருக்கள் அவ்வாறு உள்ளன. இவற்றை நீக்கிவிடலாமா? அல்லது வழிமாற்றிடலாமா? --அஸ்வின் (பேச்சு) 16:03, 11 சூன் 2019 (UTC)[பதிலளி]

ஆமாம் விக்கித்தரவில் இணைப்பதே பரிந்துரைக்கப்பட்ட முறை. வார்ப்புரு:Flagicon வழியாகத்தான் பெரும்பாலும் இவ்வார்ப்புருக்கள் பயன்படுகின்றன. அதனால் பயன்படாத Country Data XXXX வார்ப்புருக்களை நீக்கிவிடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:39, 13 சூன் 2019 (UTC)[பதிலளி]

கல்லூரிகளில் விக்கி பயிற்சி

வணக்கம். சேலம் பயிற்சி பட்டறையில் புதிய திட்டங்கள் பற்றி விவாதித்தோம். அவற்றில் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே பயிற்சி பட்டறை வாயிலாக ஏற்படுத்தலாம் என்று கூறினோம். அதற்கான ஒரு முயற்சியாக கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் ஒரு பயிற்சி பட்டறை நடத்துவதற்கு தமிழ் துறை வாயிலாக அனுமதி பெற முயற்சித்து வருகிறேன். இதற்கான பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பிற்கு என்னுடன் பணியை பகிர்ந்துகொள்ள உதவிகள் தேவைப்படுகிறது. நன்றி-- divya_kaniyam (பேச்சு) 09.57, 28 சூன் 2019

Can you help with a translation to Tamil?

Greetings. On behalf of the Community Engagement department at the Wikimedia Foundation, I'd like to request some assistance in getting an important message translated to your language as soon as possible. Really appreciate your attention! --Elitre (WMF) (பேச்சு) 12:55, 19 சூலை 2019 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம். வல்லுநர்கள் யாரேனும் Overlay செய்வதற்கு புதிதாக வார்ப்புருவை உருவாக்கும்படி வேண்டுகிறேன். இது ஒரு புகைப்படத்தின் மேல் தேவையான இடங்களில் எண்கள் இட்டு அவற்றைக் குறித்து விளக்க எளிதில் உதவும். AakashAH120 (பேச்சு) 04:00, 29 சூலை 2019 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Overlay வழுவை சரிசெய்துள்ளேன். பயன்படுத்திப் பாருங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 08:09, 29 சூலை 2019 (UTC)[பதிலளி]

ஐயா, நான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பக்கத்தை விரிவாக எடிட் செய்தேன், கூடுதல் தகவல்களை இணைத்தேன், ஆனால், அது மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டது, ஒரு நண்பர் அதை மிள் அமைத்துவிட்டார், நான் எப்படி அதை நிரந்தரமாக தக்க வைக்க முடியும். மற்றவர் மீள் செய்யாமல் இருக்க நான் என்ன செய்யவேண்டும்.

Infobox Editing

Infoboxஐ எவ்வாறு தொகுப்பது .. உதாரணமாக

{{தமிழக உயர் அதிகாரிகள் மற்றும் பதவிகள்|வகை=பதவி|பதவி=தலைமை நீதிபதி}}
இது எங்கிருந்து தனது தகவலை ""இந்திரா பானர்ஜி"" என்று எடுத்து வருகிறது ? --Commons sibi (பேச்சு) 11:46, 21 செப்டம்பர் 2019 (UTC)

@Commons sibi: வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள் இவ்வார்ப்புருவை இற்றைப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 11:57, 21 செப்டம்பர் 2019 (UTC)
@Kanags:நன்றி .--Commons sibi (பேச்சு) 12:02, 21 செப்டம்பர் 2019 (UTC)

பயனர் தடை செய்தல்

இப்பயனரை ஏன் தடை செய்யக்கூடாது .

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Abhiman2020

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Abhiman2020 --Commons sibi (பேச்சு) 11:46, 21 செப்டம்பர் 2019 (UTC)

உதவி

கைப்பேசியில் வார்ப்புருக்களை கட்டுரைகளுக்கு எவ்வாறு இணைக்க வேண்டும்? தெரிந்திட உதவுங்கள்.

Fathima rinosa (பேச்சு) 22 செப்டம்பர் 2019 , 20:27

 இது போன்று தேவைப்படும் வார்ப்புருவினை {{}} இந்த குறிக்குள் இடவும். ஸ்ரீ (✉) 16:39, 22 செப்டம்பர் 2019 (UTC)

நன்றி.. வார்ப்புருக்கள் பற்றிய காணொளிகள் இருந்தால் தயவுகூர்ந்து அறியத்தாருங்கள். Fathima rinosa (பேச்சு)


|இங்கு உள்ளது. ஸ்ரீ (✉) 17:35, 22 செப்டம்பர் 2019 (UTC)

மிக்க நன்றி.. Fathima rinosa (பேச்சு)

சந்தேகம்

மழநாட்டிற்கும், கொங்கு நாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?? சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்கள் மழநாட்டை சேர்ந்ததா?? அல்லது கொங்கு நாட்டை சேர்ந்ததா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:24, 11 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

The page I created keeps getting deleted - உறுதிக்கோட்டை நகரத்தார் வரலாறு

Hello Admins:

The page I created in Wikipedia is based on facts and history. https://ta.wikipedia.org/wiki/பயனர்:Tkasi123/மணல்தொட்டி

I tried to hyper-link the above article to another main article they have mentioned about this subject. But both my article and also the Edit at the other article gets deleted. Can you please help me on this? I am not really sure how I am deviating from Wikipedia rules.

Thanks for your help. - Kasi Thiagarajan

உதவி.

நான் பூவல் எனும் கட்டுரையை நேற்று பதிவிட்டிருந்தேன் அதை விக்கிமுறைக்கு திருத்த வேண்டும் . உதவ முடியுமா?

புதிய கணக்கில் பழைய பதிவைச் சேர்க்க முடியுமா?

https://ta.wikipedia.org/s/5zvh என்ற பக்கத்தையும் https://ta.wikipedia.org/s/5zve என்ற பக்கத்தையும் https://ta.wikipedia.org/wiki/பயனர்:Kasijeeva என்ற பக்கத்தில் இணைத்துத் தரமுடியுமா? - −முன்நிற்கும் கருத்து Kasijeeva (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம் @Kasijeeva:, இரண்டு பக்கங்களையும் இணைக்க முடியும். ஆனால் உங்களது பழைய பயனர் பெயர் தான் யாழ்பாவாணன் என்பதா? -நீச்சல்காரன் (பேச்சு) 18:49, 21 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

பயனர் தடை செய்தல்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:173C:DBDC:2:1:3DCC:9D94 இப்பயனர் (I.P) கணக்கு செய்யும் தொகுப்புகள் சரி தானா ? இல்லை என்றால் பயனரை தடை செய்யலாமா ?--Commons sibi (பேச்சு) 10:28, 24 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத்திட்டம் பற்றிய அறிவிப்பு காணப்படாமை

முதற்பக்கத்தில் வேங்கைத்திட்டம் 2.0 பற்றிய அறிவிப்பு தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லும் போது எனக்குத் தெரியவில்லை. எவ்வாறு அதை மீட்டமைப்பது?--ருக்மணி 16:30, 24 நவம்பர் 2019 (UTC)

ஆங்கில பெயர்ச்சொற்களின் மொழிபெயர்ப்புகள் தேவை

en:Category:Ray County, Iran, geography stubs என்பதில் உள்ள பெயர்களுக்கு தமிழ் பெயர்கள் வேண்டும். ஏதேனும் நுட்ப வழி உள்ளதா?--உழவன் (உரை) 02:27, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை நீக்கினார்கள். தெளிவான காரணாம் தேவை

ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை நீக்கினார்கள். தெளிவான காரணாம் தேவை

ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை ஒரு குறுப்பிட்ட நபர் நீக்கி கொண்டே இருகிறார். காரணம் எப்படி அறிவது.

ஏன் எனது பக்கத்தில் உள்ள கட்டுரையை ஒரு குறுப்பிட்ட நபர் நீக்கி கொண்டே இருகிறார். காரணம் எப்படி அறிவது.