பயனர் பேச்சு:Kasijeeva

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Kasijeeva, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- குறும்பன் (பேச்சு) 11:36, 10 ஏப்ரல் 2017 (UTC)

வணக்கம்[தொகு]

யான் தங்களை ஏற்கனவே அறிவேன், விக்கிப்பீடியா தொடர்பான வழிகாட்டல்களை மேலுள்ள வரவேற்புச் செய்திகள் மூலம் அறிந்துகொள்ளுங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:40, 10 ஏப்ரல் 2017 (UTC)

அறிஞர் அவர்களே!

என்னையும் வரவேற்று மகிழ்வழித்தமைக்கு மிக்க நன்றி. விக்கிப்பீடியா ஊடாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணுவோம்.

உங்கள் யாழ்பாவாணன்

நன்றி, தாங்கள் உங்கள் கருத்தை இட்ட பின் மேலே உள்ள கையொப்பம் இடுவதற்கான பேனாக் குறியீட்டை அழுத்த வேண்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:55, 10 ஏப்ரல் 2017 (UTC)

அப்படியே கையாளுகிறேன்.

தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களும் மகிழ்ச்சி ஊட்டுகின்றன. அவ்வாறே கட்டுரைகளையும் உருவாக்கத் தொடங்கலாமே! எனது முதல்கட்டுரையான மிகிந்தலை எனும் கட்டுரையைப் பாருங்கள்! இது போலவே கட்டுரை அமைய வேண்டும் அன்றி Blogs இல் எழுதுவது போல் சொந்த ஆராய்ச்சிக் கட்டுரை நடையிலோ, அல்லது வர்ணனை நடையிலோ அமையக் கூடாது என்பதையும் ஞாபகமூட்டுகின்றேன். தமிழர்களாக ஒன்றிணைந்து உருவாக்கும் ஓர் இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் நீங்களும் மறைமுகமாக ஓர் வரலாற்றுச் சாதனை நிகழ்வதில் பங்குகொள்கிறீர்கள் என்பதை நினைத்துப் பெருமைப்படுங்கள்! தொடருக தங்கள் பங்களிப்புக்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:28, 10 ஏப்ரல் 2017 (UTC)

April 2017[தொகு]

தகவற் படவுரு வணக்கம், தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா? என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

Stop hand nuvola.svg

வணக்கம், Kasijeeva!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

 சி.செந்தி (உரையாடுக) 03:31, 30 ஏப்ரல் 2017 (UTC)

ஐயா! இது எனது கன்னி முயற்சி. இது எனக்கொரு பட்டறிவு. இனிவரும் காலங்களில் சிறந்த படைப்புகளை இணைத்து, எனது பங்களிப்பினை வழங்குவேன். தங்கள் வழிகாட்டலை ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி. −முன்நிற்கும் கருத்து யாழ்பாவாணன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

👍 விருப்பம், மகிழ்ச்சி! தொடர்ந்து பங்களியுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:14, 30 ஏப்ரல் 2017 (UTC)
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்

.

விக்கிப்பீடியா:கையெழுத்து[தொகு]

விக்கிபீடியாவில் பேச்சுப்பக்கங்களில் தங்கள் கருத்தை இட்டதன் பிற்பாடு கையெழுத்து இடுதல் தேவையானது.

யாழ்பாவாணன், உதவி தேவைப்படின் தயக்கம் இன்றிக் கேளுங்கள். --சி.செந்தி (உரையாடுக) 05:39, 30 ஏப்ரல் 2017 (UTC)


மன்னிக்கவும்!

இனித் தவறு நிகழாது.

நன்றி.

உங்கள் யாழ்பாவாணன் (பேச்சு) 06:21, 30 ஏப்ரல் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kasijeeva&oldid=2819377" இருந்து மீள்விக்கப்பட்டது