எறிபந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எறிபந்து[தொகு]

ஜாகத் சிங் சௌஹான் (1937-2012) என்பவரால் எறிபந்து அறிமுகப்படுத்தப்பட்டது ,இவா் சென்னையில் YMCA கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அதே ஆண்டில் அவர் ஹரியானாவில் உள்ள ஜின்ட் நகரில் திருமதி சாஷி பிரபாவின் பங்களிப்புடன் முதல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தினாா் . ஜகத் சிங் சௌஹான் இந்தியாவில் கைப்பந்து, வலைபந்து மற்றும் எறிபந்து ஆகியவற்றின் தந்தை எனப்படுகிறாா். 1972 ம் ஆண்டு ஜெர்மனியில் முனிச் ஒலிம்பிக் போட்டியில் விளையாட முயற்சி மேற்கொண்டதன் விளைவு இந்த விளையாட்டை இந்தியாவில் தொடா்ந்து நடத்த உதவியாக இருந்தது. இந்தியாவில் போட்டித்திறன் வாய்ந்த விளையாட்டாக எறிபந்து பிரபலமாகி வருகிறது. இந்தவிளையாட்டிற்கான சங்கத்தை ஆசிய மட்டத்தில் மற்றும் உலக அளவில் ஏற்படுத்துவதில் இந்திய விளையாட்டு அதிகாரிகள்முக்கிய பங்காற்றினா். இந்தியா, இலங்கை, கொரியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், சீனா, பாக்கிஸ்தான், நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளிலுள்ள உடற்பயிற்சி கூடங்கள் , கல்லூரிகள், மற்றும் உடற்பயிற்சி கழகங்களில் விளையாடபடுகிது. இது மெதுவாக பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற மற்ற நாடுகளால் பிரபலமடைந்தது .1982 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜூனியர் எறிபந்து குழு இலங்கைக்கு விஜயம் செய்தது.

மேற்கோள்கள் வெளி இணைப்புகள் [தொகு]

இந்திய த்ரோபால் சம்மேளனம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எறிபந்து&oldid=2351809" இருந்து மீள்விக்கப்பட்டது