உள்ளடக்கத்துக்குச் செல்

குர்கான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குர்கன் ஒப்லாஸ்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குர்கான் மாகாணம்
Kurgan Oblast
Курганская область
குர்கான் மாகாணம் Kurgan Oblast-இன் கொடி
கொடி
குர்கான் மாகாணம் Kurgan Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்ஊரல்[1]
பொருளாதாரப் பகுதிஊரல்[2]
நிருவாக மையம்குர்கான்[4]
அரசு
 • நிர்வாகம்மாகாண சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[7]அலெக்சி கொக்கோரின்[6]
பரப்பளவு
 • மொத்தம்71,000 km2 (27,000 sq mi)
 • பரப்பளவு தரவரிசை43வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்9,10,807
 • மதிப்பீடு 
(2018)[10]
8,45,537 (−7.2%)
 • தரவரிசை57வது
 • அடர்த்தி13/km2 (33/sq mi)
 • நகர்ப்புறம்
60.3%
 • நாட்டுப்புறம்
39.7%
நேர வலயம்ஒசநே+5 ([11])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-KGN
அனுமதி இலக்கத்தகடு45
OKTMO ஐடி37000000
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://www.kurganobl.ru/

குர்கான் மாகாணம் (Kurgan Oblast, (உருசியம்: Курга́нская о́бласть, குர்கான்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இதன் நிர்வாக மையம் குர்கன் நகரம் ஆகும். சூன் 2014 ல், மக்களில் 874,100 இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[14] 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 910,807 இருந்தது.[9]

நிலவியல்

[தொகு]

குர்கான் மாகாண்ம் தெற்கு உருசியாவில் அமைந்துள்ளது. இது யூரல் கூட்டமைப்பு மாவட்டத்தைச் சேர்ந்தது. இது தன் எல்லைகளை மேற்கில் செல்யபின்ஸ்க் ஒப்லாஸ்து, வடமேற்கில் சுவெட்லோஸ்க் ஒப்லாஸ்து, வட-கிழக்கில் தியூமென் ஒப்லாஸ்து, தெற்கில் கசக்ஸ்தான் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறது.

காலநிலை

[தொகு]

இந்த ஒப்லாஸ்து நீண்ட குளிர் காலம் மற்றும் வழக்கமான வறட்சி கொண்ட சூடான கோடை போன்ற கடுமையான தட்பவெப்பநிலை கொண்டது. இதன் சராசரி சனவரி வெப்பநிலை -18 டிகிரி செல்சியஸ் (0 ° பாரன்கீட்) இப்பகுதியின் வெப்பமான மாதமான சூலை மாதத்தின் சராசரி வெப்பநிலை (ஜூலை) +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்) ஆகும். ஆண்டு சராசரி மழைபொழிவு 400 மில்லி மீட்டர் (16) ஆகும்.[15]

பொருளாதாரம்

[தொகு]

குர்கன் ஒப்லாஸ்து, பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் எண்ணெய், எரிவாயு உள்ள மாவட்டங்கள் தியூமென் ஒப்லாஸ்து பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இதேபோன்று தோம்ஸ்க் ஒப்லாஸ்துக்கு அருகில் உள்ள மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் இதன் எல்லைப் பகுதிகள் வழியாக, உரால் மற்றும் சைபீரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நோக்கி செல்கின்றன. இதன் முதன்மை தொழில்துறை மையங்களாக குர்கன் , மற்றும் சர்டிரின்ஸ்க் ஆகும்.[15] இந்த ஒப்ளாஸ்து பெரிய அளவில் பொருளாதார கனிம வளங்கள் கொண்டதாக இல்லை; எனவே வேளாண் பொருட்கள் அடிப்படையிலான துணைத் தொழில்களான தயாரிப்புகளை சிப்பமிடுதல் போன்றவை உள்ளன. உணவு துறை இங்கு நன்கு வளர்ந்த துறையாக உள்ளது. இங்கே இறைச்சி பதப்படுத்துதல், மாவு ஆலைகள், பால்மா தொழிற்சாலைகள் போன்றவை உள்ளன.[15] இரண்டாம் உலகப் போரின் 1941-1942 காலகட்டத்தில் போது நவீன பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இப்பிராந்தியத்தில் உருவாகத்துவங்கின. நாட்டின் மேற்கு பகுதிகளில் இருந்து பதினாறு நிறுவனங்கள் இங்கே இடம் பெயர்ந்தன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

மக்கள் தொகை: 910,807 ( 2010 கணக்கெடுப்பு ); 1,019,532 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,104,872 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) ரஷ்யர்களே இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய இனக்குழுவினர் (823,7222) ஆவர், மக்கள் தொகையில் 92.5% உள்ளனர். ஒப்ளாஸ்து பகுதியில் உள்ள மற்ற முக்கிய இன குழுக்கள் [9] தாதர்கள் (17,017) 1.9% , பாஷ்கிர்கள் (12,257) 1.4%, கசக்குகள் (11,939) 1.3%, உக்ரைனியர் (7,080) at 0.8%. பிற இனக்குழுவினர் 2.1%. 20.017 மக்கள் நிர்வாக தரவுத்தளங்கள் தங்கள் இனம் குறித்து அறிவிக்க வில்லை.[16]

  • பிறப்பு (2010): 11,862 (1000 13.0)
  • இறப்பு (2010): 14,590 (1000 16.0)[17]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[18][19]
  • 2000 - 1.38
  • 2001 - 1.35
  • 2002 - 1.45
  • 2003 - 1.40
  • 2004 - 1.46
  • 2005 - 1.40
  • 2006 - 1.43
  • 2007 - 1.59
  • 2008 - 1.72
  • 2009 - 1.77
  • 2010 - 1.79
  • 2011 - 1.82
  • 2012 - 2.03
  • 2013 - 2.12
  • 2014 - 2.10 (இ)
  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 12 400 (1000 ஒன்றுக்கு 13.8)
  • இறப்பு: 14 216 (1000 ஒன்றுக்கு 15.9) [20]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்: 2.03

சமயம்

[தொகு]

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[21] குர்கான் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 28.4% பேர் உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர், 6% பொதுவான கிருத்துவர் , 2% இஸ்லாமியர் , 1% பின்பற்றுவது ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், 0.4% இந்து மதத்தினர், 36% மக்கள் ஆன்மீக, மத நாட்டமற்றவர்கள். 14% நாத்திகர் , மற்றும் 12.2% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது மதம் பற்றிய கேள்விக்கு பதிலலளிக்காதவர்கள் ஆவர்.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Article 8 of the Charter of Kurgan Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2014, no such law is in place.
  4. Charter of Kurgan Oblast, Article 13
  5. Charter of Kurgan Oblast, Article 80
  6. Official website of Kurgan Oblast. Alexey Kokorin Is Appointed Acting Governor of Kurgan Oblast (உருசிய மொழியில்)
  7. Charter of Kurgan Oblast, Article 78-1
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  9. 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  11. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  12. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  13. Charter of Kurgan Oblast, Article 10
  14. Kurgan Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Демография பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  15. 15.0 15.1 15.2 "Kurgan Region". Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-26. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
  20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
  21. 21.0 21.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்கான்_மாகாணம்&oldid=3550588" இலிருந்து மீள்விக்கப்பட்டது