குராவ் வனவிலங்கு காப்பகம்

ஆள்கூறுகள்: 3°42′58″N 102°10′34″E / 3.71608°N 102.176°E / 3.71608; 102.176
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குராவ் வனவிலங்கு காப்பகம்
Krau Wildlife Reserve
அமைவிடம்பகாங், மலேசியா
அருகாமை நகரம்தெமர்லோ
ஆள்கூறுகள்3°42′58″N 102°10′34″E / 3.71608°N 102.176°E / 3.71608; 102.176
பரப்பளவு60,349 ha
நிறுவப்பட்டது1974
நிருவாக அமைப்புமலேசிய வனவிலங்கு தேசிய பூங்காக்கள் துறை

குராவ் வனவிலங்கு காப்பகம் (மலாய்: Pusat Perlindungan Hidupan Liar Krau; ஆங்கிலம்: Krau Wildlife Reserve) என்பது மலேசியா, பகாங், தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்து உள்ள வனவிலங்கு காப்பகம். 60,349 ஹெக்டேர் பரப்பளவில், மலேசியாவிலேயே மிகப்பெரிய வனவிலங்கு காப்பகம் ஆகும்.

மலாயா பிரித்தானிய காலனித்துவ நிர்வாகத்தின் போது நிறுவப்பட்டது. இது பகாங் மாநிலத்தின் தெமர்லோ மாவட்டத்தில் பெனோம் மலைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள பிரதான ஆறுகள்: குராவ் ஆறு (Krau River); லொம்பாட் ஆறு, தெரிஸ் ஆறு.

மலேசியாவின் வனவிலங்கு தேசியப் பூங்காக்கள் துறை (Department of Wildlife and National Parks), இந்தக் குராவ் வனவிலங்கு காப்பகத்தை நிர்வகித்து வருகிறது. இதன் நிர்வாக அலுவலகம் லஞ்சாங் நகரத்தின் தென் பகுதியில் உள்ளது.

வரலாறு[தொகு]

1960-ஆம் ஆண்டுகளில், லார்ட் மெட்வே (Lord Medway) என்பவர் பெனோம் மலைக்கு விலங்கியல் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார். பெனோம் மலை 2110 மீட்டர் உயரம் கொண்டது. அவரின் தொடர் ஆய்வுப் பயணங்கள், கோலா குராவ் எனப்படும் பெனோம் மலை கிழக்குப் பகுதியில் ஆய்வுகள் நடத்த பல அறிஞர்கள், உயிரியலாளர்களை ஈர்த்தன.

குராவ் வனவிலங்கு காப்பகத்தின் தாழ்நில வனப் பகுதியில் (dipterocarp forest area) பறவைகள், பாலூட்டிகள், பல்வகை விலங்கினங்கள், வெளவால்கள் மிக அதிகமாக வாழ்கின்றன. இவற்றின் வாழ்வியல் முறை பன்முகத் தன்மைகள் கொண்டவை.

யானைகள் பாதுகாப்பு மையம்[தொகு]

கோலா காண்டாவில் யானைகள் பாதுகாப்பு மையம் (Kuala Gandah Elephant Conservation Centre) உள்ளது. இது இடம்பெயர்ந்த யானைகளைப் பாதுகாக்கும் யானை மையம் ஆகும்.[1]

காடுகளில் தனித்து விடப்படும் அல்லது தனித்து வாழும் யானைகளுக்கு ஓர் இடமாற்றுத் தளம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டது.[2]

ஜெண்டராக் (Jenderak) எனும் இடத்தில் செலாடாங் (Bos gaurus) எனும் காட்டு எருமைகளுக்கான இனப்பெருக்க மையம் உள்ளது. அத்துடன் பறவையினங்களில், அரிய வகை மலாயா மயில்களும் (Malayan peacock-pheasant) இந்தக் காப்பகத்தில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Simon Richmond (January 2010). Malaysia, Singapore & Brunei. Lonely Planet. பக். 303–304. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74104-887-2. https://archive.org/details/isbn_9781741048872. பார்த்த நாள்: 2 August 2011. 
  2. "Welcome to the Kuala Gandah Elephant Orphanage Sanctuary". Archived from the original on 11 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 2 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  • Krau Wildlife Reserve Management Plan. 2001. Perhilitan and DANCED.
  • Marie Cambon, Damian Harper, Eddin Khoo. Lonely Planet : Malaysia, Singapore & Brunei.
  • Joshua Eliot, Jane Bickersteth. Footprint Malaysia Handbook.
  • Jaclyn H Wolfheim. Primates of the World: Distribution, Abundance and Conservation.
  • D S Edwards, W E Booth, S C Choy. Tropical Rainforest Research- Current Issues: Proceedings of the Conference.

மேலும் காண்க[தொகு]