எழுத்துகள் வரிசை முறை
தமிழ் எழுத்துகளை எந்த வரிசைமுறையில் அமைப்பது என்பதை நன்னூல் விளக்கும் பகுதி எழுத்துகள் வரிசை முறை எனப்படுகிறது.
உயிர் எழுத்துகள் அவற்றின் சிறப்பு கருதியும் ஒன்றற்கொன்று இனமாதல் கருதியும் எழுத்துகளை அகரம் தொடங்கி னகரம் வரை என வரிசைப்படுத்திக் கூறுதலே வரிசைமுறை என்கிறது நன்னூல்[1].
தனித்தியங்கும் ஆற்றல் பெற்றதால் உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துகளுக்கு முன்னதாக வைக்கப்படுகின்றன். குறில் எழுத்துகளின் விகாரமே நெடில் எழுத்துகள் என்பதால் குறிலை அடுத்து இனமொத்த நெடிலும் வைக்கப்பட்டது. எழுத்துகளின் சிறப்பு கருதி அமைக்கப்பட்ட வரிசைமுறை இதுவாகும்.
வலியவர் மெலியவருக்கு முன்நிற்றல் இயல்பு என்ற காரணத்தினால் மெய்யெழுத்துகளில் மெல்லினத்திற்கு முன் வல்லினம்[2] வைக்கப்பட்டது. வல்லினமும் அல்லாமல் மெல்லினமும்[3] அல்லாமல் இடையினமாக[4] உள்ள எழுத்துகள் இறுதியில் வைக்கப்பட்டுள்ளன. இனமாதல் கருதி அமைக்கப்பட்ட வரிசைமுறை மெய்யெழுத்துகளின் வரிசை முறையாகும்.
உயிரும் அல்லாத மெய்யும் அல்லாத ஆய்த எழுத்து உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து இவற்றிற்கிடையில் வைக்கப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ சிறப்பினும் இனத்தினும் செறிந்தீ்ண்டு அம்முதல்
நடத்தல் தானே முறையா கும்மே.- நன்னூல் 73 - ↑ வல்லினம் கசட தபற எனஆறே - நன்னூல் 68 (க்,ச்,ட்,த்,ப்,ற் என்பன வன்மையான ஓசை கொண்ட வல்லின எழுத்துகள் ஆகும்).
- ↑ மெல்லினம் ஙஞண நமன எனஆறே - நன்னூல் 69 (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் என்பன மெல்லிய ஓசை கொண்ட மெல்லின எழுத்துகள் ஆகும்).
- ↑ இடையினம் யரல வழள எனாஆறே - நன்னூல் 70 (ய்,ர்,ல,வ,ழ்,ள் என்பன இடைப்பட்ட ஓசை கொண்டு ஒலிப்பதால் இவை இடையின எழுத்துகள் ஆகும்).
எஐபோஐகளிங கறர
ப