உள்ளடக்கத்துக்குச் செல்

பத்துக் குற்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்துக் குற்றங்கள் என்பவை, ஒரு நூலில் இருக்கக்கூடாதவை என நன்னூல் வரையறுத்துக் கூறுவதாகும்.

  1. குறிப்பிட்ட ஒரு பொருளை விளக்குவதற்குத் தேவையான சொற்களில் குறைவுபடக் கூறுதல்
  2. குறித்த ஒரு பொருளை விளக்குவதற்குத் தேவையான சொற்களைவிட மிகைபடக் கூறுதல்
  3. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதல்
  4. முன்னர் சொல்லிய ஒரு செய்திக்கு முரணாகக் கூறுதல்
  5. குற்றமுடைய சொற்களை ஆங்காங்கே சேர்த்தல்
  6. கூறவேண்டிய செய்தியை இதுவோ அதுவோ எனப் பொருள் புரியாமல் மயங்கும் வகையில் கூறுதல்
  7. பொருளோடு பொருந்தாது வெறும் சொற்களை அடுக்கி அலங்கரித்துக் கூறுதல்
  8. சொல்லத் தொடங்கிய பொருளை விட்டுவிட்டு இடையில் மற்றொரு பொருளைக் குறித்துப் பேசுதல்
  9. விரிவாகச் சொல்ல ஆரம்பித்த பொருளைப் போகப்போகச் சொல்நடையும் பொருள் நடையும் குறையுமாறு முடித்தல்
  10. சொற்களிருந்தும் அவற்றால் பொருட்பயன் ஏதுமில்லாது கூறல்

ஆகிய இப்பத்தும் ஒருநூலுக்கு இருக்கக்கூடாத குற்றங்களாகும்.[1]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
    கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
    வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்
    வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
    சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை
    என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே. நன்னூல் 12

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்துக்_குற்றங்கள்&oldid=4079118" இலிருந்து மீள்விக்கப்பட்டது