முதல் நூல்
Appearance
(முதல்நூல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பார்த்தனர். [1] [2] நூலாசிரியர் தாமே ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கூறும் நூல் முதல்நூல். முதல்நூலைப் பின்பற்றித் தன் கருத்துகளையும் இணைத்து எழுதப்படும் நூல் வழிநூல்.
- முதல்நூல்
முதல்நூல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தை நன்னூல் வழிமொழிகிறது.[3] [4]
அறிவு விளக்கம் பெற்றவன் முனைவன். [5] ஆள்வினை [6], ஊழ்வினை [7], சூழ்வினை [8] எனப்பட்ட வினைகளில் சூழ்வினை இல்லாதவன் இந்த முனைவன். இப்படிப்பட்ட முனைவன் தன் அறிவுக் கண்ணால் கண்ட உண்மைகளை வெளிப்படுத்தும் நூல் முதல்.
நன்னூலை நோக்கத் தொல்காப்பியம் ஒரு முதல்நூல்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல்தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639) - ↑ முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் உரை (நன்னூல் 5)
- ↑
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் (தொல்காப்பியம் 3-640) - ↑
அவற்றுள்,
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் (நன்னூல் 6) - ↑ ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தந்து பெறும் பட்டம் முனைவர் பட்டம்
- ↑ முயற்சி
- ↑ தலைவிதி
- ↑ சூழ்ச்சி செய்து ஏமாற்றும் வினை