தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள் என்பது ஒரு புலவன் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது சில சூழல்களில் குற்றமாகாது என்று, அச்சூழல்கள் சிலவற்றை நன்னூல் எடுத்துக்காட்டுகிறது.

மண்ணை உடைய மன்னனின் அவைக்குச் சீட்டுக்கவி எழுதும் போதும், தன்னுடைய புலமைத் திறன் அறியாதவரிடையிலும், அவையில் வாதிட்டு வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையிலும், எதிரியொருவன் தன்னைப் பழித்துரைக்கும்போதும் புலவன் தன்னைத்தானே புகழ்ந்து சொல்வது தவறாகாது என நன்னூல் கூறுகிறது. [1]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. மன்னுடை மன்றத்து ஒலைத் தூக்கினும்
    தன்னுடை ஆற்றல் உணரார் இடையிலும்
    மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
    தன்னை மறுதலை பழித்த காலையும்
    தன்னைப் புகழ்தலுநம் தகும்புல வோற்கே. - நன்னூல் 53

வெளியிணைப்புகள்[தொகு]