சார்புநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலின் வகைகளை வரலாற்றுக் கோணத்தில் பார்க்கும்போது முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட நூல் முதல்நூல் என்றும், அதன் வழியைப் பின்பற்றி அதனை விரித்தோ, தொகுத்தோ இயற்றப்பட்ட நூல்கள் வழிநூல் என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. நன்னூல் அவற்றுடன் சார்புநூல் என்னும் மற்றொரு வகையினையும் காட்டுகிறது.

முதல்நூல், வழிநூல் ஆகிய இரண்டனுள் ஒன்றையோ, இரண்டனையுமோ ஒருபுடை ஏற்றுக்கொண்டு, ஏற்காத பகுதியை விளக்கமாகச் சொல்லி உருவாக்கப்படும் இலக்கண நூல் சார்புநூல் ஆகும். இதனைப் புடைநூல் என்றும் நன்னூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.[1][2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித் திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும் (நன்னூல் 8)
  2. முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
    பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின்
    வேறுநூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
    கூறுபழம் சூத்திரத்தின் கோள் (நன்னூல் 9)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்புநூல்&oldid=2745869" இலிருந்து மீள்விக்கப்பட்டது