சிறப்புப்பாயிரம் பொதுவிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புப்பாயிரம் பொதுவிதி என்பது ஒரு நூலில் அமையவேண்டிய சிறப்புப் பாயிரம் எப்படி அமையவேண்டும் என்பதற்கான இலக்கணம் ஆகும்.

பொதுவிதி[தொகு]

ஒரு நூலின் சிறப்புப் பாயிரம் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு நன்னூல் காட்டும் பொதுவிதி:

”நூல் இயற்றிய ஆசிரியனுடைய பெயர், எந்த நூலின் அடிப்படையில் இந்த நூல் வந்தது, நூல் வழங்கும் நிலத்தின் எல்லை, நூலின் பெயர், நூலின் இயைபு, நூல் சொல்லும் பொருள், நூலைக் கேட்பதற்கு உரியவர்கள், கேட்டலால் அவர்கள் பெறும் பயன், ஆகிய எட்டு செய்திகளும் விளங்குமாறு எடுத்து உரைத்தல் சிறப்புப் பாயிரத்தின் இலக்கணமாகும்”.[1]
”நூல் இயற்றப்பட்டக் காலம், அது அரங்கேறிய அவை, நூல் இயற்றுவதற்கான காரணம், ஆகியனவற்றையும் சேர்த்துச் சிறப்புப் பாயிரத்தின் இயல்புகள் பதினொன்று என்று கூறுபவர்களும் உண்டு”.[2]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
    நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
    கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
    வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.- நன்னூல் 47
  2. காலங் களனே காரண என்றிம்
    மூவகை ஏற்றி மொழிநரும் உளரே. - நன்னூல் 48

வெளி இணைப்புகள்[தொகு]