சூத்திரம் என்பதன் விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூத்திரம் என்பது, மிகப்பெரிய கருத்தையும் சிலசொற்களில் சுருக்கமாக விளக்குவது சூத்திரம் என நன்னூல் விளக்கம் கூறுகின்றது.

சிறிய கண்ணாடி மிகப்பெரிய உருவத்தையும் தன்னுள் வாங்கி தெளிவாக நமக்கு காட்டுவது போல சில எழுத்துக்களால் மிகப்பெரிய கருத்துகளையும் தனக்குள் அடக்கி பொருளை இனிமையாக விளக்கும் நுட்பமான வரிகளே சூத்திரங்கள் அல்லது நூற்பாக்கள் எனப்படும்.[1]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
    செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
    திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம். - நன்னூல் (18)

வெளி இணைப்புகள்[தொகு]