உள்ளடக்கத்துக்குச் செல்

நூலின் தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலின் தன்மைகள் யாவை என்பதை நன்னூலின் நான்காவது சூத்திரம் விளக்குகிறது.

நூலி னியல்பே நுவலி னோரிரு

பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்

நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி

யையிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ

டெண்ணான் குத்தியி னோத்துப் படல

மென்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை

விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே.- நன்னூல்- (04)

ஒரு நூலின் தன்மையை கூறவேண்டுமானால், அது இரண்டு வகையான பாயிரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.மூன்று வகை நூல்களில் ஒன்றாக்வும் நான்கு வகைப் பொருள்களையும் உடையதாகவும், ஏழு கொள்கைகளையும் தழுவியிருப்பதாகவும், பத்து வகையான குற்றங்கள் இல்லாத நூலாகவும், முப்பத்திரண்டு உத்திகளை உபயோகித்து உருவாக்கப்பட்டு பத்து அழகுகள் பொருந்தியதாகவும் , ஓத்து , படலம் ஆகிய உறுப்புகளைப் பெற்றும் சூத்திரம், காண்டிகை, விருத்தி என்னும் வேறுபட்ட நடைகளைப் பெற்றும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட சூத்திரம் பதம் பிரித்து பொருள் கொள்ளப்பட்டால்,

நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு

பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்

நாற்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி

ஐயிரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு

எண் நான்கு உத்தியின் ஓத்து படலம்

என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை

விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே.- நன்னூல் - (04)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலின்_தன்மை&oldid=3218861" இலிருந்து மீள்விக்கப்பட்டது