நூல் மாண்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூல் மாண்பு என்று நூலின் சிறப்பை விளக்க நூலை உவமையாக்கி நன்னூல் விளக்குகிறது.

மரவேலை செய்யும் தச்சர் மரத்தின் கோணலைத் தீர்க்க சாயத்தில் தோய்த்த நூல் கயிற்றைப் பயன்படுத்துவர். சாயத்தில் தோய்த்த அந்நூலை மரத்தின் இரு நுனியிலும் இருமுனைகள் பொருந்தத் தட்டிவிட்டால் சாயம் மரத்தின் மேடான பகுதிகளில் மட்டும் படியும். பள்ளமான பகுதிகளில் படியாது. கோணலை எளிமையாகச் செதுக்கி இழைத்துச் சமப்படுத்தி விடுவார்கள். இச்சாய நூல் மரத்தின் கோணலை நீக்க உதவுவது போலக் கல்விக்கு உதவும் நூலும் மக்களுடைய மனத்தின் கோணலைத் தீர்க்க உதவவேண்டும். அவ்வாறு இயற்றப்பட்ட நூலையே நூல் எனலாம்[1]


அடிக்குறிப்புகள்[தொகு]

  1. . உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்
    புரத்தின் வளமுருக்கிப் பொல்லா- மரத்தின்
    கனக்கோட்டந் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்
    மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு. - நன்னூல் 27

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூல்_மாண்பு&oldid=3218866" இலிருந்து மீள்விக்கப்பட்டது