மாணாக்கர் இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாணாக்கர் இலக்கணம் என்று நன்னூலில் எவரெல்லாம் பாடம் கேட்பதற்குரிய மாணாக்கர் ஆவர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

  1. தன்மகன்,
  2. தன்னுடைய ஆசிரியருடைய மகன்,
  3. நாட்டையாளும் அரசனுடைய மகன்,
  4. பொருளை மிகுதியாக வாரிவழங்குபவன்,
  5. தன்னை வணங்கி வழிபடுபவன்,
  6. சொல்லும் பொருளை விரைந்து ஏற்றுக் கொள்ளும் திறனுடையோன்

ஆகிய அறுவருக்கே நூலைக் கற்பிக்க வேண்டும். இவர்களே மாணாக்கர் ஆவதற்கு தகுதியுள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது[1]


தன்மக னாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற் குரைப்பது நூலே . - நன்னூல் 37 (மூலம்)


முதற்றர மாணவர்கள் - அன்னப்பறவையும் பசுவையும் போன்றவர்.

நடுத்தர மாணவர்கள் - மண்ணையும் கிளியையும் போன்றவர்.

கடைத்தர மாணவர்கள் - ஓட்டைக்குடத்தையும் ஆட்டையும் எருமையையும் பன்னாடையையும் போன்றவர்.


அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர். - நன்னூல் 38 (மூலம்)

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. . தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
    பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே
    உரைகோ ளாளறகு உரைப்பது நூலே. - நன்னூல் 37


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணாக்கர்_இலக்கணம்&oldid=3453573" இலிருந்து மீள்விக்கப்பட்டது