உத்தி (இலக்கியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தி என்பதை நன்னூல் ஒரு நூற்பாவில் விளக்குகிறது. அதனை அது தந்திர உத்தி என்று குறிப்பிடுகிறது, சுருக்கமாகவும், விரிவாகவும், முன்னும் பின்னும் தொடர்பு படுத்தியும் தமிழ் இலக்கணத்தைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில் நூற்பாக்களை அடுக்குவது தந்திர உத்தி. நூலின் பொருளை முழுமையாக உணர நூல்-வழக்கம் இன்னது எனத் தந்திர-உத்தி காட்டும். ஏற்ற இடத்தில் பொருத்திக்கொள்ளும் வகை இன்னது எனப் புரிந்துகொள்ள அது உதவும். அது இன்னின்ன வகை என்று கூறித் தகும் இடத்தில் பொருளைப் புணர்த்திக்கொள்ளுமாறு பயில்வோரைக் கொண்டு செல்லும். இவ்வாறு இதனை நன்னூல் விளக்குகிறது.[1]

தொல்காப்பியத்தில் இணைக்கப்பட்டுள்ள இறுதி நூற்பா இதனை ஒத்த காட்சி உத்தி என்று குறிப்பிடுகிறது. செய்திகளை அங்குமிங்கும் ஒத்திட்டுப் பார்த்துக்கொள்வது ஒத்த காட்சி. [2]

தொல்காப்பியம், நன்னூல் இரண்டுமே 32 உத்திகளைக் குறிப்பிடுகின்றன.

மேற்கோள்[தொகு]

  1. நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி,
    ஏற்புழி அறிந்திதற்கு இவ்வகை யாமெனத்
    தகும்வகை செலுத்துதல் தந்திர உத்தி. - நன்னூல்(15)
  2. ஒத்த காட்சி உத்தி வகை (தொல்காப்பிம் - மரபியல்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தி_(இலக்கியம்)&oldid=3457171" இலிருந்து மீள்விக்கப்பட்டது