இடையியல் (நன்னூல்)
Appearance
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் நான்காவது இயல் இடையியல் ஆகும். இதில் மொத்தம் 22 நூற்பாக்கள் (420-441) உள்ளன. இந்த இயலில் தரப்பட்டுள்ள நூற்பாக்கள் இடைச்சொல்லின் பொதுவிலக்கணம், இடைச்சொற்பொருள்கள், ஏகாரவிடைச்சொல், ஓகாரவிடைச்சொல், என, என்று- இடைச்சொற்கள், உம்மையிடைச்சொல், முற்றும்மை, எச்சவும்மை, தில்லிடைச்சொல், மன்னிடைச்சொல், மற்றென்னுமிடைச்சொல், கொல்லிடைச்சொல், ஒடு, தெய்ய, அந்தில், ஆங்கு, அம்மவிடைச்சொல், வியங்கோளசை, முன்னிலையசைச்சொல், அசைச்சொற்கள் ஆகியன குறித்து விளக்குகின்றன.