உள்ளடக்கத்துக்குச் செல்

பவணந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பவணந்தி முனிவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பவணந்தி அல்லது பவணந்தி முனிவர் என்பவர், இடைக் காலத் தமிழ் இலக்கண நூலான நன்னூலை எழுதியவராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்பது சில வரலாற்று ஆய்வாளர் கருத்தாகும். இவர் பெயர் மற்றும் இவரது நூலிலுள்ள சில கருத்துகளையும் சான்றாகக் கொண்டு இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியப்படுகிறது.

என்பது நன்னூலுக்கு இவர் எழுதிய சிறப்புப் பாயிரத்தின் இறுதி வரிகள். இதில் இவர் பற்றிய சில தகவல்கள் உள்ளன. இதிலிருந்து, நன்னூல் எழுதுவதற்கு இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் சிற்றரசன் ஒருவனாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் சிலரது கருத்து. பொன்மதிற் சனகை என்பதில் இருந்து இவர் சனகாபுரி/ சீனாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், கொங்கு நாட்டுச் சனகாபுரியா, தொண்டை நாட்டுச் சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப் பாயிரத்தில் குறிக்கப்பட்டுள்ள சன்மதி முனி என்பவரே இவரது குரு என்றும் கருதப்படுகிறது. இவர் எழுத்துபடிவத்தைப் பற்றி அதிகமாக எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈ‌ரோடு மாவட்டம் ,மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரபிரபாவின் கோவில் உள்ளது. இங்கே பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவணந்தி&oldid=3529348" இலிருந்து மீள்விக்கப்பட்டது