உயிரீற்றுப் புணரியல் (நன்னூல்)
Appearance
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து இயல்களில் மூன்றாவது இயல் உயிரீற்றுப் புணரியல் ஆகும். இதில் மொத்தம் 53 நூற்பாக்கள் (151-203) உள்ளன.
கூறுகள்
[தொகு]கீழுள்ள தலைப்புகளில் புணர்ச்சி மற்றும் அதற்குரிய விதிகள் நன்னூலின் உயிரீற்றுப் புணரியலில் தரப்பட்டுள்ளன.
- புணர்ச்சி (151-157 - ஏழு நூற்பாக்கள்)
- பொதுப்புணர்ச்சி (158-161 -நான்கு நூற்பாக்கள்)
- உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி (162-164 -மூன்று நூற்பாக்கள்)
- உயிரீற்று முன் வல்லினம் (165, 166 -இரண்டு நூற்பாக்கள்)
- அகர வீற்றுச் சிறப்புவிதி (167-170 -நான்கு நூற்பாக்கள்)
- ஆகார வீற்றுச் சிறப்புவிதி (171, 172 -இரண்டு நூற்பாக்கள்)
- இகர வீற்றுச் சிறப்புவிதி (173-175 -மூன்று நூற்பாக்கள்)
- இகர ஐகார வீற்றுச் சிறப்புவிதி (176 -ஒரு நூற்பா)
- ஈகார வீற்றுச் சிறப்புவிதி (177, 178 -இரு நூற்பாக்கள்)
- முற்றுகர வீற்றுச் சிறப்புவிதி (179, 180 -இரு நூற்பாக்கள்)
- குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி (181-199 -19 நூற்பாக்கள்)
- ஊகார வீற்றுச் சிறப்புவிதி (200 -ஒரு நூற்பா)
- ஏகார வீற்றுச் சிறப்புவிதி (201 -ஒரு நூற்பா)
- ஐகார வீற்றுச் சிறப்புவிதி (202, 203 -இரு நூற்பாக்கள்)