ஆசிரியரை வழிபடும் முறை
Appearance
மாணவர்கள் ஆசிரியரை வழிபடும் முறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நன்னூல் கூறுகிறது.
குளிர் காய்பவர் நெருப்புக்கு அஞ்சி அதைவிட்டு அகலாமலும் மிக நெருங்காமலும் அமர்ந்து குளிர் காய்வர். அதுபோல, மாணவனும் ஆசிரியருக்கு அஞ்சி அவரை அகலாமலும் மிகநெருங்காமலும் இருக்கவேண்டும். ஆசிரியரின் நிழல் அவரைவிட்டு நீங்காமல் செல்லும் இடம் எல்லாம் தொடர்ந்து செல்வதுபோல மாணவனும் ஆசிரியரைவிட்டு நீங்காமல் அவரைத் தொடர்ந்து செல்லுதல் வேண்டும். ஆசிரியர்பால் அன்பு மிகக்கொண்டு அவர் எவ்வகையால் எல்லாம் மகிழ்வாரோ அவ்வகையால் எல்லாம் மகிழ்வித்து, அறநெறி மாறா நடத்தை உடையவனாய் ஆசிரியரை ஒரு மாணவன் வழிபாடு செய்தல் வேண்டும்.[1]