முழுப்புலமை பெறும் முறை
Appearance
முழுப்புலமை பெறும் முறை என்பது யாதெனில், மாணவர்கள் தாம் கற்கும் பாடத்தில் முழுப்புலமை பெறுவது எப்படியென நன்னூல் காட்டும் வழிமுறையாகும்.
ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைக் கேட்கும் ஒரு மாணவனுக்குக் காற்பங்கு அறிவே நிரம்பும். அதே மாணவன் தம்முடன் கல்வி பயிலும் மாணவ நண்பர்களுடன் சேர்ந்து படிப்பதால் அவனுடைய அறிவு மேலும் ஒரு காற்பங்கு நிரம்பும். அவனே தான் கற்றதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்கும் போது எஞ்சியிருக்கும் அரைப்பங்கும் நிரம்பி அவன் முழுப்புலமை உடையவனாவான்[1]