உரை இலக்கணம்
Appearance
உரை இலக்கணம் என்பது சூத்திரம் எனப்படும் நூற்பா அல்லது செய்யுள் அல்லது பாடலுக்கு உரை எழுதும்போது அவ்வுரை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கான இலக்கணமாகும்.
மூல பாடம், கருத்துரை, சொற்களைப் பிரித்துக்காட்டுதல், அச்சொற்களுக்குரிய பொருள் தருதல், தொகுத்துப் பொழிப்புரை வழங்குதல், தேவையான இடங்களுக்கு எடுத்துக்காட்டுகள் கொடுத்தல், இடையிடையே வினா மற்றும் விடை நடையில் சொல்லுதல், சிறப்பு விளக்கமளித்தல், மறைமுகப் பொருள்களை விரித்துக் கூறுதல், அதிகாரத்துடன் பொருத்திக் காட்டுதல், ஐயத்திற்கு இடமின்றி துணிந்து ஒரு பொருளை ஏற்றுக் கூறுதல், கூறப்படும் பொருளின் பயன்யாது என விளக்குதல், முன்னோர் கருத்துக்களை மேற்கோள் காட்டுதல் என பதினான்கு வகையான இலக்கணத்தை உரை இலக்கணமாக நன்னூல் கூறியுள்ளது.[1]