நிறைகோலின் மாண்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறைகோலின் மாண்பு என்று நன்னூல் விளக்குவது யாதெனில், சந்தேகம் போகுமாறு தன்னிடம் வைத்து நிறுக்கப்பட்ட பொருளின் அளவைக் காட்டுதலும், இரு தட்டுகளுக்கும் நடுவில் உண்மையாக நிற்றலும் ஆகிய இவ்விரு பண்புகளும் துலாக்கோலுக்கு உரிய நல்லியல்புகளாகும். அதே போல ஆசிரியரிடமும் இவ்விரு பண்புகளும் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

மாணவனால் வினாவப்பட்ட பொருளின் இயல்பை ஐயம் நீங்குமாறு விளக்கிக் கூறுதலும், மாறுபட்ட இரு மாணவரிடத்துத் தான் நடுவுநிலையாக நிற்றலும் ஆசிரியரின் அருங்குணங்களாகும். இத்தகைய குணங்கள் உள்ளவரே நல்லாசிரியர் ஆவார் என ஆசிரியருக்கான இலக்கணத்தை நன்னூல் விளக்குகிறது.[1]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
    மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே.- நன்னூல் 29

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறைகோலின்_மாண்பு&oldid=3218594" இலிருந்து மீள்விக்கப்பட்டது