உள்ளடக்கத்துக்குச் செல்

நூல் என்பதன் பெயர்க்காரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்னூலில் நூல் என்பதன் பெயர்க்காரணம் நூல் என்ற பெயர் எப்படி உருவாகி அதற்குப் பொருந்துகிறது என்பதை விளக்குவதாகும்.

நூல் நூற்கும் பெண் பஞ்சால் தன் கைகளைக்கொண்டு கதிரால் நூல் நூற்கிறாள். அதுபோலப் புலவன் சொற்களால் தன் வாயைக்கொண்டு அறிவால் நூல் நூற்க குற்றமற்ற நூல் உருவாகிறது.

சொற்கள் பஞ்சாகவும், புலவன் நூல் நூற்கும் பெண்ணாகவும், புலவனின் வாய் அப்பெண்ணின் கையாகவும் , புலவனின் அறிவு நூல் நூற்கும் கருவியான இங்குக் கதிராகவும் கருதப்படுகிறது.

பஞ்சு நூலாக மாறுவது போல சொற்கள் நூலாக நூற்கப்படுவதால் நூல் என்னும் பெயர் அமைந்தது என்று நன்னூல் விளக்குகிறது.[1]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
    செஞ்சொற் புலவனே சேயிழையா- எஞ்சாத
    கையே வாயாகக் கதிரே மதியாக
    மையிலா நூல்முடியு மாறு.- நன்னூல் (24)

வெளி இணைப்புகள்

[தொகு]