பாடம் சொல்லும் இயல்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடம் சொல்லும் இயல்பு என்பது கற்பித்தல் தொழிலின் நுட்பங்களைக் கூறுவது ஆகும். நவீனக்காலக் கல்வி முறையில் கல்வி கற்பிக்கும் இடம் , கற்பிக்கும் சூழல், கற்பிக்கத் தொடங்கும் நேரம், பாடக்குறிப்பு தயாரித்து ஆயத்தமாதல், வேகமாகவும் இல்லாமல் கோபமாகவும் இல்லாமல் கற்பித்தல், உளவியல் நோக்கோடு மாணவர் மனநிலை அறிந்து முகமலர்ச்சியோடும் மனமலர்சியோடும் கற்பித்தல், ஆகிய கற்பித்தல் நுட்பங்கள் உணரப்பட்டு ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இத்தகைய நுட்பங்களைக் கற்று கற்பித்தலில் சிறப்பவனுக்கு நல்லாசிரியர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்த கற்பித்தல் நுட்பங்களை நன்னூல் எழுதப்பட்டக் காலத்திலேயே எடுத்துக் கூறியுள்ளது,

அவை,

 • பாடம் சொல்லும் ஆசிரியன் முதலில் ஏற்ற இடத்தையும் பொருத்தமான நேரத்தையும் சரியாகத் தேர்ந்தெடுத்து சிறப்பான இடத்தில் அமர்ந்து கற்பித்தலைத் தொடங்க வேண்டும்.
 • கற்பிக்கத் தொடங்குவதற்கு முன்னர் தன்னுடைய வழிபடும் தெய்வத்தை வணங்கித் தொடங்க வேண்டும்.
 • அன்று மாணவனுக்குக் கற்பிக்க வேண்டிய பாடத்தை தான் முன்னதாகப் படித்து ஆய்ந்து மனத்தில் ஒழுங்குபெற பாடத்திட்டம் தயாரித்து பின்னர் கற்பிக்க வேண்டும்.
 • அவ்வாறு கற்பிக்கும்போது விரைவாக கற்பிக்காமலும் மாணவன் ஐயத்தைக் கேட்கும் போதெல்லாம சினத்துடன் கற்பிக்காமலும் விருப்பத்தோடும் முகமலர்சியோடும் கற்பிக்க வேண்டும்.
 • மாணவனின் அறிவின் திறமையை உணர்ந்து அவன் மனதில் ஏற்றுக் கொள்ளும் வகையில் பாடத்தைக் கற்பிக்கவேண்டும். [1]


அடிக்குறிப்புகள்[தொகு]

 1. ஈதல் இயல்பே இயம்புஙம் காலைக்
  காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
  சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
  உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
  விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
  கொள்வோன் கொள்வகை அறிந்தவன் உளம்கொளக்
  கோட்டமின் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப. - நன்னூல் (36)

வெளி இணைப்புகள்[தொகு]