முப்பத்திரண்டு உத்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலாக்க உத்திகள் 32. அவற்றை 3 நூல்கள் தெரிவிக்கின்றன.

தொல்காப்பியம்
நன்னூல்
பாடலனார்

நன்னூல்[தொகு]

முப்பத்திரண்டு உத்திகள் நூலில் இருத்தல் வேண்டும் என நன்னூல் சிலவகை உத்திகளைப் பட்டியலிட்டுள்ளது. அவை,

1.சொல்லித் தொடங்குதல் வேண்டும்.
2. காரண காரிய முறைப்படி இயல்களை வைத்தல் வேண்டும்.
3. நூலில் கூறக்கருதும் பொருள்களை தொகுத்துக் கூறுதல் வேண்டும்.
4. பின்னர் அவற்றைவகுத்துக் காட்டுதல் வேண்டும்.
5. கூறவந்த கருத்தை மேலோர் கூறியுள்ளவாறு முடித்துக்காட்ட வேண்டும்.
6. தான் கூறும் கருத்துக்கு இலக்கியத்தின் இடம் கூறுதல் வேண்டும்.
7. முன்னோர் கூறிய கருத்துகளை பொருத்தமான இடங்களில் எடுத்தாள வேண்டும்.
8. பிறருடைய கோட்பாடுகளையும் எடுத்துக் கூறுதல் வேண்டும்.
9. சொற்களின் பொருள் விளக்க உருபுகளை விரித்துக் கூறுதல் வேண்டும்.
10. ஒன்றோடொன்று தொடர்புடைய சொற்களை இணைத்துக் கூறுதல் வேண்டும்.
11. இருபொருள்படக் கூறுதல் வேண்டும்.
12. காரணம் விளங்காமல் கூறப்பட்டதை காரணம் கூறி முடிக்க வேண்டும்.
13. ஒரு பொருளுக்குரிய இலக்கணத்தை ஒப்புமைப்படுத்தி உறுதிப்படுத்துதல் வேண்டும்.
14. உறுதிப்படுத்திய இலக்கணத்தை பிறவிடங்களிலும் பயன்படுத்துமாறு தொடர்புபடுத்துதல் வேண்டும்.
15. வழக்கொழிந்தவற்றை விலக்குதல் வேண்டும்.
16. தற்காலத்தில் வழக்குக்கு வந்தப் புதுமைகளை ஏற்புடையது எனில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
17. பின்னால் இவை தேவைப்படும் என்றுணர்ந்து அவற்றை முன்கூட்டியே சொல்வது வேண்டும்.
18. ஒரு பொருளுக்கு கருவியாய் அமையவேண்டியதை பின்னால் நிறுத்திக் காட்டுதல் வேண்டும்.
19. வெவ்வெறு வேறுபட்ட கருத்துகளையும் எடுத்துக் காட்டல் வேண்டும்.
20. அவ்வாறு வேறுபடும் கருத்துகளை தொகுத்துக் கூறல் வேண்டும்.
21. இறுதியில் சொல்லப் போவதை முற்பகுதியில் சொல்ல நேர்ந்தால் அது பின்னர் விளக்கப்படும் என்று கூறுதல் வேண்டும்.
22. முற்பகுதியில் கூறப்பட்டதை பிற்பகுதியில் மீண்டும் சொல்ல நேர்ந்தால் முன்னரே கூறப்பட்டது என்று கூறுதல் வேண்டும்.
23. மாறுபட்ட இரண்டு கருத்துகளில் ஏதாவதொன்றை துணிந்து ஏற்க வேண்டும்.
24. மேற்கோள்கள் எடுத்துக்காட்ட வேண்டும்.
25. தான் சொல்ல வந்ததை மேற்கோளுடன் பொருத்திக் காட்ட வேண்டும்.
26. ஐயத்திற்கு இடமின்றி சொல்லவந்த கருத்தை உரைக்க வேண்டும்.
27. சொல்லாமல் விட்டவற்றிற்கும் காரணம் கூறுதல் வேண்டும்.
28. பிறநூல்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
29. தன்னுடைய புதிய கருத்துகளை பலவிடங்களில் எடுத்துச் சொல்லுதல் வேண்டும்.
30. சொற்பொருள் விளக்கத்தையும் அங்கேயே கொடுத்திடல் வேண்டும்.
31. ஒத்த கருத்துக்கள் உடையனவற்றை ஓரிடத்தில் வகைப்படுத்த வேண்டும்.
32. மேலும் ஆராய்வதற்குரிய எல்லைகளை எடுத்துக்காட்டுதல் வேண்டும். [1]

அடிக்குறிப்புகள்[தொகு]


 1. நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே
  தொகுத்துச் சு்ட்டல் வகுத்துக் காட்டல்
  முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல்
  தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
  சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல்
  இரட்டுற மொழித லேதுவின் முடித்தல்
  ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல்
  இறந்தது விலக்க லெதிரது போற்றல்
  முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
  விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல்
  உரைத்து மென்ற லுரைத்தா மென்றல்
  ஒருதலை துணித லெடுத்துக் காட்டல்
  எடுத்த மொழியி னெய்த வைத்தல்
  இன்ன தல்ல திதுவென் மொழிதல்
  எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்
  பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்
  தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்
  சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல்
  ஒன்றின முடித்த றன்னின முடித்தல்
  உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே. - நன்னூல் 14

வெளி இணைப்புகள்[தொகு]