உள்ளடக்கத்துக்குச் செல்

பருத்திக் குண்டிகையின் தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருத்திக் குண்டிகையின் தன்மை என்பது எவரெல்லாம் ஆசிரியராகார் என்று சொல்ல நன்னூல் குறிப்பிடும் ஒரு செயலாகும்.

வாய் குவிந்த ஒரு கொள்கலன் குடுக்கை என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய குடுக்கையில் பஞ்சை உட்செலுத்தி அடைப்பது அரிய செயலாகும். பஞ்சைச் சிறிது சிறிதாக குடுக்கையில் உள் நுழைத்துக் குச்சியால் குத்திக் குத்தி மெல்ல மெல்ல உட்புகுத்த வேண்டும். குடுக்கையில் இருந்து பஞ்சை வெளியில் எடுக்கும் போதும் அவ்வாறே குச்சியால் குத்திக் குத்தி சிறிது சிறிதாக வெளியே எடுக்க வேண்டும். அதைப்போலவேதான் ஆசிரியர் ஆகாதவர் தாம் கல்வியைக் கற்கும் போது அவருடைய ஆசிரியர் மிகமுயன்று பாடம் கற்பிக்கச் சிறிது சிறிதாக உள்வாங்கியிருப்பார். அத்தகையவர் தாம் கற்பிக்கும் போது சிறந்த மாணவர்களுக்கு கற்பிக்க நேர்ந்தாலும் மிகமுயன்று சிறிது சிறிதாகவே வெளியிடுவர். இத்தகையவரை ஆசிரியர் என்று சொல்லலாகாது என்கிறது நன்னூல்.[1]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. அரிதில் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு
    எளிது ஈவில்லது பருத்திக் குண்டிகை. - நன்னூல் 34

வெளி இணைப்புகள்

[தொகு]