என்கைட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
என்கைட்ரா
புதைப்படிவ காலம்:5–0 Ma
PlioceneRecent
கடற்கீரி (என்கைட்ரா லூட்ரிசு)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Enhydra

Fleming, 1828
Species

என்கைட்ரா லூட்ரிசு
என்கைட்ரா மேக்ரோடாண்டா
என்கைட்ரா ரீவி

என்கைட்ரா என்பது மசுதெலிட் பேரினமாகும். இதில் கடற்கீரி மற்றும் அழிந்துபோன இரண்டு சிற்றினங்களும் உள்ளன. இது புனோடோன்ட் கடற்நாய் குழுவின் ஒரே பேரினமாகும். இது வட்டமான பல் முனைகளுடன் கூர்மையில்லா கோரைப்பல்லினைக் கொண்ட நீர் நாயாகும்.

பிளியோசீன் காலத்தில் தோராயமாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் நீர்நாய்கள் மற்ற நீர்நாய்களிலிருந்து வேறுபட்டிருக்கலாம். மியோசீனின் பிற்பகுதியிலும் ஆரம்பக்கால பிளியோசீன் சகாப்தத்திலும் வட அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மழுங்கிய பல் நீர்நாயுடன் நெருங்கிய தொடர்புடைய என்கைட்ரிதெரியத்திலிருந்து தோன்றியிருக்கலாம்.

அறியப்பட்ட மிகப் பழமையான பேரினமான என்கைட்ரா ரீவி அத்லாந்திக்கில் தோன்றியது. இது கடல் நீர்நாய்கள் தோன்றிய இடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.[1] ஏறத்தாழ 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்கைட்ரா பரம்பரை அமைதிப் பெருங்கடலின் வட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டது எனத் தொன்மச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இப்போது அழிந்துபோன என்கைட்ரா மேக்ரோடாண்டா மற்றும் நவீன கடல் நீர்நாய் உருவானது என்று புதைபடிவ சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Davis, Randall W. (2019). Marine Mammals: Adaptations for an Aquatic Life. Springer International Publishing. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783319982809. Davis, Randall W. (2019). Marine Mammals: Adaptations for an Aquatic Life. Springer International Publishing. p. 21. ISBN 9783319982809.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்கைட்ரா&oldid=3829942" இலிருந்து மீள்விக்கப்பட்டது