நாராயண உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயண உபநிடதம்
இந்துக் கடவுளான நாரயாணனுடன் அவரது மனைவி இலட்சுமி
தேவநாகரிनारायण उपनिषद्
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புNārāyaṇa Upaniṣad
உபநிடத வகைவைணவம்
தொடர்பான வேதம்யசுர் வேதம்
அத்தியாயங்கள்5

நாராயண உபநிடதம் ( சமக்கிருதம்: नारायण उपनिषद् ) (Narayana Upanishad) என்பது சிறிய உபநிடதங்களில் ஒன்றான இது இந்து இலக்கியத்தில் இராமனால் அனுமானுக்குச் சொல்லப்பட்ட 108 உபநிடதங்களின் விரிவாக்கப்பட்ட தொகுப்பில் எண் 18 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக் தொகுப்பில் இது 33 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. [1] யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்ட இது சமசுகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. 14 வைணவ உபநிடதங்களில் ஒன்றான இது[2] நாராயணனின் (விஷ்ணு) பக்தியை பரிந்துரைக்கிறது. [3]

உபநிடதமானது, "சூத்திர வழிபாட்டு முறை" என்று விவரிக்கப்படக்கூடியவற்றில், தியானம் பொருள்கள் மற்றும் தத்துவத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சூத்திரத்திற்கு மாறுகிறது.இந்தியவியலாளர் பால் டியூசன் கூறுகிறார்[4] நாராயண உபநிடதம், விஷ்ணுவுடன் தொடர்புடைய " ஓம் நமோ நாராயணாய" என்ற எட்டு எழுத்துக்களைக் கொண்ட மந்திரத்தை, முக்தியை அடைவதற்கான வழிமுறையாகக் கூறுகிறது.[5] இந்த உரை மந்திர உபநிடதங்களில் ஒன்றாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

"அனைத்து தேவர்களும், அனைத்து ரிஷிகளும், அனைத்து உயிரினங்களும் நாராயணனிடமிருந்து பிறந்து, நாராயணனுடன் இணைகின்றன" என்று உபநிடதம் வலியுறுத்துகிறது. [6] இந்த உரை, பல்வேறு காலங்களில் பல்வேறு நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று டியூசன் கூறுகிறார்.[7]

உள்ளடக்கம்[தொகு]

உபநிடதம் ஐந்து அத்தியாயங்களை கொண்டுள்ளது. [8]

அத்தியாயம் 1: எல்லாம் நாராயணனில் பிறந்து, அனைத்தும் நாராயணனில் முடிகிறது[தொகு]

நாராயணன் பிராணன் (உயிர் சாரம், சுவாசம்), புலன்கள் மற்றும் மனம் (சித் மற்றும் உணர்வு) ஆகியவற்றைப் படைத்தார் என்று உபநிடதம் அத்தியாயம் 1 இல் உறுதிப்படுத்துகிறது. அவர் பிரபஞ்சத்தின் கூறுகளான வாயு, ஒளி , நீர் , நெருப்பு ( அக்னி ), அண்டம், பிருத்வி (பூமி) ஆகியவற்றை உருவாக்கினார். [9] அவரிடமிருந்து பிரம்மா, ருத்திரன், பிரஜாபதி, பன்னிரண்டு ஆதித்தர்கள், இந்திரன், பதினோரு உருத்திரர்கள், எட்டு வசுக்கள், வசனங்களின் அளவுகள், அனைத்து ரிஷிகள் மற்றும் அனைத்து உயிரினங்களும் பிறந்தனர். ஒவ்வொருவரும் நாராயணனிடமிருந்து பிறந்து, இறுதியில் மீண்டும் நாராயணனிடமே இணைகிறார்கள்.[5] என்று உரை கூறுகிறது.

அத்தியாயம் 2: நாராயணன் ஒருவரே கடவுள்[தொகு]

அத்தியாயம் 2, நாராயணன் பிரம்மா, சிவன், சக்ரா (பௌத்தம்) காலம், உடல், உடலற்றது, அகம், வெளி, இந்த முழு பிரபஞ்சம், என்ன இருந்தது, என்னவாக இருக்கப்போகிறது என இரண்டில்லாத ஒரு நித்திய கடவுள் என்று அறிவிக்கிறது.

அத்தியாயம் 3, 4 மற்றும் 5: நாராயண மந்திரம்[தொகு]

3 மற்றும் 4 அத்தியாயங்கள் நாராயண உபநிடதத்தைப் படிப்பது அச்சமற்ற வாழ்க்கைக்கும், அழியாமையை அடைவதற்கும், பிரம்மத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்குமான ஒரு வழி என்று கூறுகிறது. "ஓம் நமோ நாராயணாய" என்பதை படிப்பதற்கான மந்திரமாக உரை கூறுகிறது.இது 1-2-5 எழுத்துக்களைக் கொண்டது, இது ஒருவருக்கு நீண்ட ஆயுளையும் , அனைத்து பொருள், பொருள் அல்லாத ஆசைகளையும் வழங்குகிறது.

"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்துடன் வழிபடுபவர், விஷ்ணுவின் சொர்க்கமான வைகுண்டத்திற்குச் சென்று, பிறப்பிலிருந்தும் பிறவிச்சுழற்சியிலுருந்தும் விடுபடுகிறார் என்று அத்தியாயம் 5 கூறுகிறது. இந்த உபநிடதத்தை பாராயணம் செய்பவர் பாவங்களை நீக்கி நாராயணனுடன் ஐக்கியம் அடைகிறார். [5] என மேலும் இது மேலும் கூறுகிறது,

சான்றுகள்[தொகு]

  1. Paul Deussen (Translator), Sixty Upanisads of the Veda, Vol 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814691, pages 558–565
  2. Tinoco, ப. 87.
  3. Farquhar 1920, ப. 364.
  4. Paul Deussen (Translator), Sixty Upanisads of the Veda, Vol. 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814691 (2010 Reprint), pp. 803–805
  5. 5.0 5.1 5.2 Kennedy 1831, ப. 442.
  6. www.wisdomlib.org (2018-04-16). "Contents of the Nārāyaṇa Upaniṣad". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
  7. Paul Deussen (Translator), Sixty Upanisads of the Veda, Vol. 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814691 (2010 Reprint), pp. 803–805
  8. Paul Deussen (Translator), Sixty Upanisads of the Veda, Vol. 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814691ISBN 978-8120814691 (2010 Reprint), pp. 803–805
  9. ॥ नारायणोपनिषत् ॥ Sanskrit text of Narayana Upanishad, SanskritDocuments Archives (2009), Quote: खं वायुर्ज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी ।

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண_உபநிடதம்&oldid=3847986" இலிருந்து மீள்விக்கப்பட்டது