ரொறன்ரோ
| டொராண்டோ நகரம் | |||
|---|---|---|---|
|
|||
| குறிக்கோளுரை: Diversity Our Strength | |||
| அமைவு: | |||
| நாடு | கனடா | ||
| மாகாணம் | ஒன்டாரியோ | ||
| தொடக்கம் | மார்ச் 6, 1834 | ||
| ஒன்றுபடுத்தல் | ஜனவரி 1, 1998 | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | டேவிட் மிலர் | ||
| - சபை | டொராண்டோ மாநகரவை | ||
| - நகர ஆளுனர் | ஷர்லி ஹோய் | ||
| மக்கள் தொகை (2001) | |||
| - நகரம் | 2. | ||
| - புறநகர் | 4. | ||
| - மாநகரம் | 5. | ||
| இணையத்தளம்: www.city.toronto.on.ca | |||
ரொறன்ரோ (ஆங்கிலம்: Toronto; தமிழக வழக்கம்: டொராண்டோ) கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, கல்வி மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.
கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் ரொறன்ரோ (டொராண்டோ) உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.
பொருளடக்கம் |
ரொறன்ரோவின் சிறப்பு இடங்கள்[தொகு]
- சிஎன் கோபுரம் - (CN Tower)
- ஒன்ராறியோ அறிவியல் நடுவம் - (Ontario Science Centre )
- ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை - (Toronto Zoo)
- றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம் - (Royal Ontario Museum)
- ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம் - (Art Gallery of Ontario)
- ரோயல் இசைப் பயிலகம் - (Royal Conservatory of Music)
- கனடாவின் தேசிய பலே
- Bata Shoe Museum
- டொராண்டோ குறிப்புதவி நூலகம் - (Toronto Reference Library)
- ஒன்ராறியோ பிளேசு - (Ontario Place)
- Toronto City Hall
- மாகாண நாடாளுமன்றம் - (Queens Park - Ontario Parliament)
- டன்டாசு சதுக்கம் - (Dundas Square)
- ஈட்டன்சு பேரங்காடி - (Eatons Shopping Center)
- Hockey Hall of Fame
- ரோயேர்சு மையம் - (Rogers Center/Skydome)
- கனடா வியனுலகம் - (Canada's Wonderland)
- ஏர் கனடா சென்டர் (Air Canada Centre)
- ரொறன்ரோ தீவுகள் - (Toronto Islands - Centreville Amusement Park)
- பகுப்பு:ரொறன்ரோ பூங்காக்கள்
அரசு[தொகு]
ரொறன்ரோ ஒன்ராறியோ மாகணத்தின் தலைநகரம் ஆகும். மத்திய ரொறன்ரோவில் தான் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றம் (மாநிலமன்றம்) அமைந்துள்ளது. ரொறன்ரோ மக்களுக்காக 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மகாண நாடாளுமன்றத்திலும் (மாநிலமன்றத்திலும்), மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருந்து பணி புரிகிறார்கள்.
ரொறன்ரோ நகராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும், ரொறன்ரோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. நகராட்சி போக்குவரத்து, கழிவுப்பொருள் அகற்றல், சமூக சேவைகள், பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சூழல், சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது.
கல்வி[தொகு]
இந்நகரத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும், நான்கு தொழிற் கல்லூரிகளும், ஒரு பெரிய ஓவியக் கல்லூரியும், பல தனியார் கல்வி நிறுவனங்களும், ஆய்வு கூடங்களும் மற்றும் பல சிறந்த நூலகங்களும் அமைந்துள்ளன.
ரொறன்ரோ பல்கலைக்கழகம் கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமும், உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும். இதன் மூன்று வளாகங்களிலும் 70,000 மாணவர்கள் கற்கின்றார்கள். யோர்க் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும். றயர்சன் பல்கலைக்கழகம் நல்ல பொறியியல், பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது.
ரொறன்ரோவில் தமிழர்கள்[தொகு]
ரொறன்ரோவில் 200 000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக பொதுவாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் 1983க்குப் பின்னர் இலங்கை இனக்கலவரங்கள் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். பலர் ரொறன்ரோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும், ரொறன்ரோ தரும் கல்வி, தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். ரொறன்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் தமிழிலும் கிடைக்கிறது.
வழிபாட்டு இடங்கள்[தொகு]
- சிரீ மீனாட்சி அம்மன் கோவில்
வெளி இணைப்புகள்[தொகு]
- ரொறன்றோ நகர உத்தியோகப் பூர்வ இணையத்தளம்.
- ரொறன்றோ உல்லாச பயணத்துறை
- Toronto.com A complete guide to restaurants, events, hotels, entertainment and every business in Toronto and its suburbs
- CBC ரொரன்டோ
- Wikitravel ல் பயணக்கையேடு
- டொரன்டோ- பெயர் வந்தது பற்றிய உண்மைக்கதை at Canadian Geographical Names
- ரொறன்ரோ வின் விரித்துப்பார்க்க கூடிய செய்மதி படம்
- வரை படம், ரொறன்ரோ
- Toronto Neighbourhoods
- wikicities.com இல் ரொறன்ரோ
|
|||||
|
||||||||||
