உள்ளடக்கத்துக்குச் செல்

மீஞ்சூர்

ஆள்கூறுகள்: 13°16′N 80°16′E / 13.27°N 80.27°E / 13.27; 80.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீஞ்சூர்
மீஞ்சூர்
அமைவிடம்: மீஞ்சூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°16′N 80°16′E / 13.27°N 80.27°E / 13.27; 80.27
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பொன்னேரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 28,337 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


11 மீட்டர்கள் (36 அடி)

இணையதளம் www.townpanchayat.in/minjur

மீஞ்சூர் (ஆங்கில மொழி: Minjur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர், காஞ்சி மாநகரைப் போன்று, கோவில்கள் நிறைந்த தலம் என்பதால், இதனை, வடகாஞ்சி என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா, பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

அமைவிடம்

[தொகு]

பொன்னேரி வட்டத்தில் அமைந்த மீஞ்சூர், திருவள்ளூரிலிருந்து 54 கி.மீ. தொலைவில் உள்ளது. மீஞ்சூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே, கிழக்கில் எண்ணூர் 10 கி.மீ.; மேற்கில் சோழவரம் 10 கி.மீ.; வடக்கில் பொன்னேரி 10 கி.மீ.; தெற்கில் சென்னை 20 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

8.28 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 562 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,048 வீடுகளும், 28,337 மக்கள்தொகையும், கொண்டது. மேலும், இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 87.88% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1000 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 13°16′N 80°16′E / 13.27°N 80.27°E / 13.27; 80.27 ஆகும்.[6] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. மீஞ்சூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Minjur Population Census 2011
  6. "Minjur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீஞ்சூர்&oldid=4168369" இலிருந்து மீள்விக்கப்பட்டது