மண்டபம் பேரூராட்சி
மண்டபம் | |
ஆள்கூறு | 9°17′N 79°07′E / 9.28°N 79.12°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
18,427 (2011[update]) • 3,685/km2 (9,544/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi) • 9 மீட்டர்கள் (30 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/mandapam |
மண்டபம் (ஆங்கிலம்:Mandapam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும்.
இராமநாதபுரத்திலிருந்து 38 கி.மீ. தொலைவில் மண்டபம் உள்ளது. மண்டபத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் மண்டபம் முகாம் (Mandapam Camp) ரயில் நிலையம் உள்ளது.[4]. இந்தியாவில் பெரிய மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் இங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கிமீ தொலைவில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,296 வீடுகளும், 18,427 மக்கள்தொகையும் கொண்டது. [5]
இது 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட மண்டபம் பேரூராட்சியானது, இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
பொருளாதாரம்
[தொகு]மண்டபத்தில் 1961ஆம் ஆண்டில் இந்திய-நார்வே திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள் கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது. மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.
கடல்வாழ் மீன்களின் ஆய்வுக்கூடம் உள்ளது. இதனருகில் கடல் வாழ் உயிர்கள் நிலையமும் , காட்சிக்கூடமும் உள்ளன. மண்டபத்திற்கு அருகில் குருசடை தீவு உள்ளது. இது கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது.
மண்டபத்திற்கும், இராமேஸ்வரத் தீவிற்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் 3 கி.மீ. நீளமுள்ள பாம்பன் பாலம் உள்ளது. மண்டபத்தையும் இராமேஸ்வரத் தீவையும் இணைக்கும் சாலைப் போக்குவரவிற்கான பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மண்டபத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், ஒரு தொடக்கநிலை சுகாதார மையம், ஒரு சந்தை உள்ளது.
மண்டபத்தை சுற்றியுள்ள ஊர்கள்
[தொகு]கிழக்கில்
[தொகு]- பாம்பன்
- அக்காள்மடம்
- முஹம்மதியார் புரம்
- தங்கச்சிமடம்
- இராமேஸ்வரம்
மேற்கில்
[தொகு]- மண்டபம் முகாம்
- மரைக்காயர் பட்டிணம்
- வேதாளை
- சுந்தரமுடையான் (சீனியப்பா தர்ஹா)
- அரியமான்
- பிரப்பன் வலசை
- உச்சிப்புளி
- பெருங்குளம்
- இராமநாதபுரம்
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 9°17′N 79°07′E / 9.28°N 79.12°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9 மீட்டர் (29 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=302
- ↑ மண்டபம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ மண்டபம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Mandapam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.