புதுச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°56′N 79°50′E / 11.93°N 79.83°E / 11.93; 79.83
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: mk:Пондишери
remove spamlink
வரிசை 125: வரிசை 125:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references/>
<references/>

== வெளியிணைப்புகள் ==
*[http://www.pondicherrytourism.org Pondicherry Tours]


{{வார்ப்புரு:இந்தியத் தலைநகரங்கள்}}
{{வார்ப்புரு:இந்தியத் தலைநகரங்கள்}}

13:08, 20 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

தென்புதுவைக் கடற்கரைக் காட்சி
புதுச்சேரி
Territoire de Pondichéry
Union Territory of Pondicherry
—  ஒன்றியப் பகுதி  —
வரைபடம்:புதுச்சேரி
Territoire de Pondichéry
Union Territory of Pondicherry, இந்தியா


இருப்பிடம்: புதுச்சேரி
Territoire de Pondichéry
Union Territory of Pondicherry
அமைவிடம் 11°56′N 79°50′E / 11.93°N 79.83°E / 11.93; 79.83
நாடு  இந்தியா
பிரதேசம் புதுச்சேரி
மாவட்டங்கள் 4
நிறுவப்பட்ட நாள் 1 ஜூலை 1963
தலைநகரம் புதுச்சேரி
மிகப்பெரிய நகரம் புதுச்சேரி
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்[1]
முதலமைச்சர் வி. நாராயணசாமி, ந. ரங்கசாமி[2]
துணை நிலை ஆளுநர் Lieutenant General இக்பால் சிங் (Addl.)
முதலமைச்சர் வி. நாராயணசாமி, ந. ரங்கசாமி[3]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (30)
மக்களவைத் தொகுதி புதுச்சேரி
Territoire de Pondichéry
Union Territory of Pondicherry
மக்கள் தொகை

அடர்த்தி

9,73,829 (2வது) (2001)

1,979/km2 (5,126/sq mi)

மொழிகள் தமிழ், பிரஞ்சு, தெலுங்கு, மலையாளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 492 கிமீ2 (190 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-PY
இணையதளம் www.pon.nic.in


புதுச்சேரி (ஆங்கிலம்: Puducherry) எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதி ஆகும். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.

நகரமைப்பு

புதுச்சேரி நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது புதுவையின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். புதுச்சேரியின் கிழக்குப் பகுதியில் கடற்கரை உள்ளது.

கல்வி நடுவம்

ஏனம் கோதாவரியின் கழிமுகத்திலும் காரைக்கால் காவிரியின் கழிமுகத்திலும் அமைந்துள்ளன.சிறிய மாநிலமான புதுச்சேரியில் 7 மருத்துவ கல்லூரிகளும், 7 பொறியியல் கல்லூரிகளும், 10 கலை , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளும் அமைந்துள்ளதால் இதனை கல்வி மையம் எனவும் வழங்கப்படுகிறது.

புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி

புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி, புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று. அந்த வழியில், மகாகவி பாரதியார், பெருஞ்சித்திரனார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி, புதுவையின் கவிஞர் பெருமக்கள், பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி, உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

புதுச்சேரியின் வரலாற்றில் ஒரு பெரும்பகுதி பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்ததன் விளைவாக இங்கு பிரெஞ்சு மொழி இலக்கியமும் வளர்ச்சி பெற்றது. பல பிரெஞ்சு இலக்கியக் கழகங்கள் இன்றும் இங்கு இயங்கி வருகின்றன.

புதுச்சேரியின் சின்னங்கள்

ஏப்ரல் 16, 2007 அன்று புதுச்சேரி அரசு, அம்மாநிலத்தின் சின்னங்களை அறிவித்தது. சட்டசபையில் அப்போதைய விவசாயத்துறை அமைச்சர் வி. வைத்தியலிங்கம் இவற்றை முன்மொழிந்தார்.[4]

மாநில மலர் நாகலிங்கப் பூ
மாநில மரம் வில்வ மரம்
மாநில பறவை குயில்
மாநில விலங்கு அணில்

படக்காட்சியகம்

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [5]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 974,345 100%
இந்துகள் 845,449 86.77%
இசுலாமியர் 59,358 6.09%
கிறித்தவர் 67,688 6.95%
சீக்கியர் 108 0.01%
பௌத்தர் 73 0.01%
சமணர் 952 0.10%
ஏனைய 158 0.02%
குறிப்பிடாதோர் 559 0.06%

புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பூர்வீக‌ குடிமக்களில் பலரும் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு குடிமை உரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள்.

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/ltgovernor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. http://india.gov.in/govt/chiefminister.php
  4. The Hindu: Puducherry comes out with list of State symbols, Dated: April 16, 2007
  5. Census of india , 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சேரி&oldid=1142028" இலிருந்து மீள்விக்கப்பட்டது